பூ (2008)

17

திருமணம் ஆன ஒரு பெண்ணின் கைகூடாத பழைய காதலை சொல்லும் கதை பூ.

தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆன பிறகும் தான் விரும்பியவனை வெறுக்காமல், அதே அன்புடன் இருக்கும் பெண் கடைசியில் எதனால் உடைந்து போகிறாள் என்பதை உணர்ச்சிபூர்வமாக வடித்து இருக்கும் படம் “பூ”

பூ

இதில் தங்கராசுவாக ஸ்ரீகாந்த்தும் மாரி என்கிற மாரியம்மாவாகப் பார்வதியும் நடித்து இருக்கிறார்கள். Image Credit

பார்வதி “மாரி” என்ற கதாபாத்திரமாகவே “மாறி” இருக்கிறார்.

ஸ்ரீகாந்த்திற்கு அவ்வளவாக நடிக்க வாய்ப்பு இல்லை, கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகச் செய்து இருக்கிறார்.

புதுமுகங்கள்

இந்தப் படத்தில் பெரும்பாலும் நடித்து இருப்பவர்கள் புது நடிக நடிகைகளே ஆனால், புது முகங்கள் என்று சொன்னால் மட்டுமே தெரியும் அந்த அளவிற்கு அனைவரும் இயல்பாக நடித்து இருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் மட்டுமே சினிமா தனம் உள்ள நபராகத் தெரிகிறார், இவருக்குப் பதிலாக இவர் கதாபாத்திரத்திற்கும் புது முகத்தையே போட்டு இருக்கலாம்.

ஸ்ரீகாந்த்தை குறை கூறவில்லை சிறப்பாகவே நடித்து இருக்கிறார் ஆனால், பழகிய முகம் என்பதால் இந்தக் கதைக்கு இவர் ஒத்து வராததைப் போல உள்ளது.

மாரியின் தோழியாக வரும் நபர் மிகச் சிறப்பாக இயல்பாக நடித்து இருக்கிறார், சரியான சாப்பாட்டு பிரியை 🙂 அனைத்து காட்சியிலும் சிறப்பாக நடித்து இருக்கிறார்.

பசங்கள் லூட்டி

தங்கராசு மாரி இருவரும் பள்ளியில் படிக்கும் காலங்களில் பசங்கள் அடிக்கும் லூட்டி செம காமெடி, அழகி தங்கர் பச்சான் படப் பசங்க குறும்புகளை நினைவுபடுத்தியது.

ஆடு மேய்க்கும் சிறுவன் தங்கராசுவின் அப்பாவிடம் செல்லை எடுத்துட்டு வந்து அதை வைத்து தன் காணாமல் போன செல்லுக்கு ரிங் விட்டுக் கண்டுபிடிப்பது ரகளை.

செல்லில் சிக்னல் தடை பட யோவ்! தள்ளுயா உன் தொப்பை மறைக்குது! சிக்னல் வரல என்று கூறும் போது அவர் சட் என்று நகர, திரையரங்கில் எல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டார்கள் 🙂 .

ச்சூ ச்சூ மாரி! பாட்டு கலக்கலாக எடுக்கப்பட்டுள்ளது.

பொடிசுகள் வரும் காட்சிகள் குறைவாக உள்ளது எனக்கு மிக ஏமாற்றம் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தேன், காரணம் அந்த அளவிற்கு ரசிக்கும் படி இருந்தது.

கதாநாயகி பார்வதி நன்றாக நடித்து இருக்கிறார், ஒரு சில இடங்களில் கொஞ்சம் அதிகமாகக் குழந்தைத்தனமாக நடித்து இருப்பதைப் போலத் தோன்றுகிறது

இந்தப் படத்தில் வில்லனே கிடையாது சூழ்நிலையே வில்லன், இதில் யார் மீதும் தவறு காண முடியாது, வேண்டும் என்றால் தங்கராசுவின் தந்தையைக் குறிப்பிடலாம்.

சிவகாசி

படம் சிவகாசி பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. மாரியும் அவரது தோழியும் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்வதாக வருகிறது.

உடையில் உடலில் ஒட்டி இருக்கும் பட்டாசு பவுடருடன் “பட்டாசாக” நடித்து இருக்கிறார்கள்.

படத்தில் எந்தக் காட்சிகளும் செயற்கையாக இல்லை, படத்தோடு ஒன்றியே உள்ளது.

மாரியின் அம்மா, அண்ணா, அவரது தோழி, அலோ, டீ கடை வைத்து இருக்கும் தங்கராசுவின் நண்பர், அவர் கடையில் வேலை செய்யும் பையன், மாரியின் கணவர், பேனாக்காரர், பட்டாசு தொழிற்சாலை போர்மேன் என்று அனைவருமே மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள்.

1000 விஷயம்

கடைசியில் மாரியும் தங்கராசுவும் கண்ணீருடன் ஒருவரை ஒருவர் பார்ப்பது, எதுவும் பேசாமலே நமக்கு 1000 விஷயம் கூறுகிறது.

ஸ்ரீகாந்த் மொத்த படத்திற்கும் சேர்த்துக் கடைசியில் சிறப்பான நடிப்பு.

படம் முழுவதும் காமெடி கோபம் சண்டை வருத்தம் அன்பு ஏமாற்றம் எதிர்பார்ப்பு என்று கலவையாகக் கொடுத்த இயக்குனர் சசி க்ளைமேக்ஸ்ல் அனைவரையும் கண் கலங்க வைத்து விட்டார்.

படம் முடிந்து வெளி வரும் போது ஸ்ரீகாந்த் பார்வதியாக இல்லாமல் தங்கராசு மாரி கதாபாத்திரமாக நினைவில் இருப்பதே இந்தப் படத்தின் வெற்றிக்குச் சான்று.

எந்த ஒரு சினிமாத்தனம் இல்லாமல் உயிரோட்டமுள்ள கிராமத்து மக்களின் வாழ்க்கையைப் படமாகக் கொடுத்த இயக்குநர் சசிக்கும், தயாரிப்பாளர் மோசர்பேர் தனஞ்சயன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

17 COMMENTS

  1. எல்லாருமே நல்ல விதமா தான் சொல்ராங்க!
    பாத்துற வேண்டியது தான்

  2. // தமிழ் பிரியன் said… செம்மையான விமர்சனம் கிரி!//நன்றி தமிழ் பிரியன் =========================//வால்பையன் said… எல்லாருமே நல்ல விதமா தான் சொல்ராங்க!பாத்துற வேண்டியது தான்//:-) பாருங்க ஆனால் திரை அரங்கில்

  3. நல்ல முழுமையான, விரிவான, விமர்சனம் கிரி!

  4. //வெயிலான் said…
    நல்ல முழுமையான, விரிவான, விமர்சனம் கிரி!//

    நன்றி வெயிலான்

  5. கிரி,

    தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய் என்கிறகதைதான் இது.

    படிக்கும்போது இருந்த்த அதே தாக்கம் இந்தப் படம் பார்க்கும்போது இருந்தது.

    நல்ல விதமாக எடுக்கப்பட்ட சிறந்த படம். உங்கள் விமர்சனம் சரியான விதத்தில் படத்தை முன்வைக்கிறது.

  6. எப்போதோ ஒருமுறைதான் அபூர்வமாய் பூக்கும் இது போன்ற “பூ” என உங்கள் தலைப்பிலேயே சொல்லியிருப்பதற்கு ஒரு தனி சபாஷ். விமர்சனமும் அருமை.

  7. கிரி,நல்ல விமர்சனம்!! எனக்கு (தியேட்டர்ல) படம் பாக்கும் ஆவலை தூண்டியது!

  8. நல்ல விமர்சனம்…கண்டிப்பாக திரையில் போய்ப் பார்க்கிறேன்…

  9. //வடகரை வேலன் said… கிரி,தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய் என்கிறகதைதான் இது. //படத்தில் நன்றி குறிப்பிட்டு இருந்தார்கள். நான் புத்தகம் அதிகம் படிப்பதில்லை வேலன்.//படிக்கும்போது இருந்த்த அதே தாக்கம் இந்தப் படம் பார்க்கும்போது இருந்தது.//இதற்க்கு இயக்குனருக்கு தான் நன்றி சொல்லணும், கதையை அதன் அழகு மாறாமல் கொடுத்ததற்கு //நல்ல விதமாக எடுக்கப்பட்ட சிறந்த படம். உங்கள் விமர்சனம் சரியான விதத்தில் படத்தை முன்வைக்கிறது.//நன்றிங்க வேலன் =======================//ராமலக்ஷ்மி said… எப்போதோ ஒருமுறைதான் அபூர்வமாய் பூக்கும் இது போன்ற “பூ” என உங்கள் தலைப்பிலேயே சொல்லியிருப்பதற்கு ஒரு தனி சபாஷ். விமர்சனமும் அருமை//நன்றி ராமலக்ஷ்மி, கண்டிப்பா பாருங்க (திரை அரங்கில்)======================//Bhuvan said… கிரி,நல்ல விமர்சனம்!! எனக்கு (தியேட்டர்ல) படம் பாக்கும் ஆவலை தூண்டியது//நன்றிங்க புவன் தவறாம பாருங்க

  10. //vasuhi said…
    இதுவரை படம் பார்க்கவில்லை.
    உங்களுடைய விமர்சனம் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை இன்னும் கூட்டி உள்ளது//

    நன்றி வாசுகி

    //பதிவின் நீளத்தை பார்த்துவிட்டு விமர்சனம் என்ற பெயரில் கதையையே எழுதிவிட்டீர்களோ என்று நினைத்தேன்.( ஹி.. ஹி…)//

    :-))))

    வாரணம் ஆயிரம் திரை விமர்சனம் பார்த்து இதை கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் வா ஆ படத்தை விமர்சனம் என்கிற பெயரில் எல்லோரும் கொத்து பரோட்டா போட்டு விட்டார்கள். எனக்கு அது நல்ல படமாக தோன்றியதால் அதில் பல நல்ல காட்சிகள் உள்ளது என்று கூறவே அவ்வாறு எழுதினேன். ஆனால் ஏற்கனவே போதுமான அளவிற்கு அனைவரும் டேமேஜ் செய்து விட்டதால் பயனில்லாமல் போய் விட்டது 🙁

    //ஆனால் கதையை சொல்லாமல்,…. நல்லாத்தான் எழுதியிருக்கிறீர்கள்.//

    நான் எப்போதும் கதையின் முடிவை கூற மாட்டேன்..வா ஆ மட்டுமே விதிவிலக்கு. நன்றி வாசுகி

  11. //மோகன் said… நான் கூட இப்படம் நல்லா இருக்குதுன்னு கேள்விபட்டேன். உங்கப் பதிவும் அதையே பிரதி பலிக்குது.//நன்றி மோகன் //நல்லா வேளை கிளைமாக்ஸ் என்னனு சொல்லாம விட்டுடீங்க. ஹிஹி.//வாசுகி அவர்களுக்கு கூறியதே உங்களுக்கும் //எனக்கு ஒரு சந்தேகம் கிரி. எப்படி எல்லா படத்தையும் உடனடியா பாதுடறீங்க? சீசன் பாஸ் மாதிரி, தியேட்டர்க்கும் பாஸ் வச்சி இருக்கீங்களா?//ஹா ஹா ஹா இருக்கும் ஒரே பொழுது போக்கு இது தான். வார இறுதி நாட்களில் வேறு என்ன வேலை! ========================//’டொன்’ லீ said… நல்ல விமர்சனம்…கண்டிப்பாக திரையில் போய்ப் பார்க்கிறேன்…//கண்டிப்பா பாருங்க ‘டொன்’ லீ, லாவண்டர் (MRT) அருகே உள்ளே கோல்டன் மைல் டவர் ல் கோல்டன் திரை அரங்கில் படம் திரையிடப்பட்டுள்ளது. முடிந்த வரை இந்த வாரமே பார்த்து விடுங்கள்.

  12. இதுவரை படம் பார்க்கவில்லை.
    உங்களுடைய விமர்சனம் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை இன்னும் கூட்டி உள்ளது.
    பதிவின் நீளத்தை பார்த்துவிட்டு விமர்சனம் என்ற பெயரில் கதையையே எழுதிவிட்டீர்களோ என்று நினைத்தேன்.( ஹி.. ஹி…)
    ஆனால் கதையை சொல்லாமல்,…. நல்லாத்தான் எழுதியிருக்கிறீர்கள்.

  13. நான் கூட இப்படம் நல்லா இருக்குதுன்னு கேள்விபட்டேன். உங்கப் பதிவும் அதையே பிரதி பலிக்குது.

    நல்லா வேளை கிளைமாக்ஸ் என்னனு சொல்லாம விட்டுடீங்க. ஹிஹி. எனக்கு ஒரு சந்தேகம் கிரி. எப்படி எல்லா படத்தையும் உடனடியா பாதுடறீங்க? சீசன் பாஸ் மாதிரி, தியேட்டர்க்கும் பாஸ் வச்சி இருக்கீங்களா?

  14. /*பார்க்க திரை அரங்கு கிடைக்காதவங்க இந்த கணக்குல வராது*/நல்ல வேளை நான் தப்பிச்சேன்

  15. ellarum theaturukku pai parpadhu kadinam. theaturukku pooga neeram gidaipadu illai. athanal original DVD release saivadhu nallathu.enna velai enralum original vangi pargava veruppam

  16. //நசரேயன் said… /*பார்க்க திரை அரங்கு கிடைக்காதவங்க இந்த கணக்குல வராது*/நல்ல வேளை நான் தப்பிச்சேன்//:-))))))))))=====================// Arul said… //enna velai enralum original vangi pargava veruppam//நன்றி அருள். அதற்க்கு முழு தகுதியான படமே இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!