திரைப்படங்கள் இரண்டு உணர்வுகள் ஒன்று

35
திரைப்படங்கள் இரண்டு உணர்வுகள் ஒன்று Aayirathil oruvan movie poster

ரண்டு படங்களைப் பார்த்தேன் ஆனால், அதனால் ஏற்பட்ட உணர்வுகளைக் கூறுவதே திரைப்படங்கள் இரண்டு உணர்வுகள் ஒன்று. Image Credit

ஆயிரத்தில் ஒருவன்

படத்தில் ரீமாவின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது, சிறப்பான நடிப்பு.

கார்த்தி முதல் பாதியை கலகலப்புடன் கொண்டு செல்லப் பெரிதும் உதவி உள்ளார், குறிப்பாகக் கூற வேண்டும் என்றால், படம் பார்க்கிறவர்கள் என்ன கமெண்ட் கொடுப்பார்களோ அதை அவர் கொடுத்துக்கொண்டு இருந்தார் 🙂 .

சரக்கு பாட்டிலை வைத்துட்டு போனவரு அப்படியே ஒரு சிப்ஸ் பாக்கெட்டும் வைத்துட்டு போய் இருந்தாருன்னா…!‘ 🙂 .

ஒளிப்பதிவு, இசை (பாடல்கள் மற்றும் பின்னணி), உடைகள், கலை (Art) என்று அனைத்தும் சிறப்பாக உள்ளது, இரண்டாம் பாதித் திரைக்கதையைத் தவிர.

இரண்டாவது பாதிக் குழப்பும் காட்சியமைப்பு மற்றும் லாஜிக் இடறல்கள்.

முதல் பகுதி தமிழ் திரையுலகம் காணாத பிரம்மாண்டம் மற்றும் புதிய முயற்சி, இதில் துளி கூட எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

இரண்டாம் பகுதியும் அதே! ஆனால் சாதாரண மக்களுக்கு அதை ரசிக்கும் அளவிற்குப் பொறுமை இருக்குமா என்பது சந்தேகமே!

சோழர்களாகப் பிடிபட்ட பெண்களை ஆண்களைத் துன்புறுத்துவதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதைக் காண்பித்து இருப்பார்கள்.

இதைப் போன்று அனைத்து நாட்டு இராணுவத்திலும் நடைபெறும் ஆனால், காட்சி அமைப்புகள் ஈழப்போரை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

சிங்கள வீரர்கள் நடந்து கொண்ட விதத்தை இணையத்தில் படத்துடன் வீடியோவுடன் பார்த்து விட்டபடியால், இந்தக்காட்சிகளை அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை, படத்தில் அதை மையப்படுத்தி எடுக்கவில்லை என்றாலும்.

கன்னத்தில் முத்தமிட்டால்

சன் டிவியில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் போட்டு இருந்தார்கள்,

தத்தெடுக்கப்பட்ட பெற்றோரிடம் வளரும் சிறுமி தனது உண்மையான தாயை ஒரு முறையாவது பார்க்க வேண்டி இந்தியாவில் இருந்து தனது பெற்ற தாயின் நாடான இலங்கைக்குச் சென்று அங்குப் பார்க்க முயற்சிப்பதே கதை.

நந்திதா தாஸ் விடுதலைப் புலியாக நடித்து இருப்பார். இப்படம் வெளிவந்த போது (2002) ஈழத்தமிழர்கள்பற்றி எதுவுமே தெரியாது.

தாயாக நந்திதா தாஸ்க்கு உள்ள உணர்வுகள் மட்டுமே புரிந்தது, ஆனால் அவரின் விருப்பங்கள், உள் மனவருத்தங்கள், இயலாமை, வாழ்க்கை முறை சிரமங்கள் என்று ஒட்டுமொத்த உணர்வுகள் தற்போது தான் சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

எப்போதும் காட்சியமைப்பின் உண்மையான நிகழ்வுகள் தெரிந்தால் தான் அந்தக் காட்சியின் சரியான உணர்வுகள் புரியும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.

20 கேள்விகள்

கீர்த்தனா நந்திதா தாஸிடம் 20 கேள்விகள் கேட்க எழுதி வைத்து இருப்பார், ஒவ்வொரு கேள்வி கேட்கும் போதும் பதில் கூற முடியாமல் நந்திதா தாஸ் திணறுவது / என்ன சொல்வது என்று தெரியாமல் விழிப்பது! என்று அற்புதமாக நடித்து இருப்பார்.

கீர்த்தனா “அம்மா என் கூட மெட்ராசுக்கே வந்துடுங்க அங்கே இந்த மாதிரி ஆர்மி இருக்காது, பீச் இருக்கு, சினிமாக்குப் போகலாம்” என்று குழந்தைத்தனமாகக் கூற, அதற்கு நந்திதா தாஸ் “என்னால் வர இயலாது” என்று கூறுவார்.

மறுபடியும் எப்போது நான் உங்களைப் பார்ப்பது” என்று கீர்த்தனா கேட்க “இந்த யுத்தம் ஒரு நாள் நிற்கும் அமைதி திரும்பும் அப்போது என்னைப் பார்க்கலாம்” என்று கூறுவார்.

செல்லும் போது கீர்த்தனாவின் ஆசைக்காக அவரைத் தூக்கி அழுதபடி கன்னத்தில் முத்தமிட்டு “என்னை அம்மா என்று விளிக்காதே! என்னால் பிரிந்து செல்ல இயலாது!” என்று கூறி அழுதபடி செல்லும் காட்சி அருமையாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

பெற்ற தாயை பார்க்கும் ஆசையை நிறைவேற்றியதற்காகக் கீர்த்தனா தன் வளர்ப்பு தாய் சிம்ரனுக்கு மன நிறைவுடன் அழுத்தமாகக் கன்னத்தில் முத்தமிடுவது படம் பார்த்த எனக்கு மன நிறைவை இப்போது முழுவதுமாக அளித்தது.

ஒரு சில படங்கள் படம் வெளிவந்த சமயத்தில் நமக்குப் புரியாது! அதனால் அதில் உள்ள காட்சிகளின் வீரியமும் தெரியாது. அனுபவங்களில் விஷயங்கள் கிடைத்த பிறகு திரும்பப் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் அது அற்புதமாகத் தெரிகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்தப்படம் உள்நாடு வெளிநாடு என்று பல விருதுகளைக் குவித்துள்ளது, அதற்குத் தகுதியான படமே என்பதில் சந்தேகமில்லை!

Read : பன் மொழிப் படங்கள் விமர்சனங்கள்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

35 COMMENTS

  1. கன்னத்தில் முத்தமிட்டால் அருமையான படம். ஈழம், மாதவனுக்கும் சிம்ரனுக்கும் இடையே வரும் காதல்னு ரசிக்க வைக்கும்.

  2. கன்னத்தில் முத்தமிட்டால் நல்ல படம்.

  3. அதிலும் நெஞ்சில் ஜில் ஜில் பாடல் எப்போது கேட்டலும் என்னமோ பண்ணும் :))

  4. //ரீமாவிற்கு ரசிகன் ஆகி விட்டேன்)//

    ரசினி கோவிச்சுக்க மாட்டாரா!?

  5. எப்போதும் போல நேர்மையாக எழுதியிருக்கிறீர்கள்.

  6. நல்லபடியாக எழுதியிருக்கீங்க

    —————-

    என்னை அம்மா என்று விளிக்காதே! என்னால் பிரிந்து செல்ல இயலாது!]]

    இந்த வார்த்தையை இப்போ படிக்கும் பொழுதும் கண்ணீர்த்துளி …

  7. ஆயிரத்தில் ஒருவன் பற்றி சிறப்பாகஎழுதியிருக்கிறீர்கள்

  8. தலைவா.. கலக்கறீங்களே!(என்னாத்த அப்படின்னு எல்லாம் கேக்கப்படாது)படம் பார்த்து,இரசித்து இப்படி விமர்சனம் போட்டு அசத்தரீங்க. பாராட்டுகள்.

  9. உங்க விமர்சனத்துக்காக காத்திருந்தேன். நேரம் கிடைக்கும்போது படம் பார்க்கிறேன்.

    நாங்கெல்லாம் ரீமாவுக்கு பல காலமா ரசிகரா இருக்கோம். உறுப்பினர் கட்டணத்தை எங்கிட்ட கட்டிட்டு எங்க கூட சேர்ந்துக்கங்க… 🙂

    கன்னத்தில் முத்தமிட்டால்…. அட அட அடா… மிக அருமையான படம். I LOVE THAT MOVIE. அந்த குழந்தைகளின் வால் தனம், சிம்ரன்-மாதவனின் காதல் காட்சிகள், ஈழம் நிகழ்வுகள், காட்சி படைப்புகள், பாடல்கள், இசை… எல்லாமே அழகு. நான் மணிரத்தினம் ரசிகன் கூட. 🙂

  10. ஆ.ஒ. பற்றி சுருக்கமாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

  11. இன்னும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பார்க்கவில்லை. கன்னத்தில் முத்தமிட்டால் மிகவும் பிடித்த படம். அழகாக எடுத்து இருப்பார்கள்.

  12. நேர்மையான விமர்சனம்.ஆயிரத்தில் ஒருவன் நான் இதுவரை பார்க்கவில்லை.நீங்கள் விமர்சனம் எழுதிய பின் பார்க்கலாம் என இருந்தேன்.ஆனால் செல்வராகவனின் வித்தியாசமான முயற்சிக்காகவேனும் தியட்டரில் படம் பார்க்க வேண்டும் என நினைத்தேன்.;))

    கன்னத்தில் முத்தமிட்டால் பற்றிய விமர்சனமும் அழகாக, உணர்வு பூர்வமானதாக எழுதியிருக்கிறீர்கள்.
    வாசித்த போது அழுகை வந்துவிட்டது.படத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா எல்லோரும் அருமையாக நடித்திருப்பார்கள்.படத்தில் 'விடை கொடு எங்கள் நாடே' என்ற பாடல் காட்சி தான் என்னை மிகவும் பாதித்தது.

    ரீமாவுக்கு ரசிகரானால்
    மாளு கோவிக்கமாட்டாவா??

  13. \\ஒரு சில படங்கள் படம் வெளிவந்த சமயத்தில் நமக்கு புரியாது! அதனால் அதில் உள்ள காட்சிகளின் வீரியமும் தெரியாது.. அனுபவங்களில் விஷயங்கள் கிடைத்த பிறகு திரும்ப பார்க்க வாய்ப்பு கிடைத்தால் அது அற்புதமாக தெரிகிறது.//ஆமாம் உண்மை.

    ஆயிரத்தில் ஒருவனை நீங்கள் முதல்பாதி இரண்டாம் பாதி என்று பிரித்து பார்க்க சொல்லி இருப்பது சரியான கோணமாகத் தெரிகிறது.

  14. ஆயிரத்தில் ஒருவன் விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள், ஆனால் எனக்கு கன்னத்தில் முத்தமிட்டாலில் உடன்பாடில்லை.

    இலங்கைக்கு வரும்வரை நிச்சயமாக படம் என்னை புல்லரிக்க வைத்தது, ஆனால் இலங்கையை மணிரத்தினம் கையாண்ட விதம் மிகத்தவறானது. காரணங்கள் கூறப்போனால் அது ஒரு தனிப்பதிவாகிவிடும்.

    நான் மணிரத்தினத்தின் தீவிர ரசிகன்தான், சந்தேகம் வேண்டாம். ஆனால் மணிரத்தினம் இலங்கை பிரச்சினையை கையாண்டவிதம் படம் பார்க்காமல் விமர்சனம் எழுதினால் எப்படி இருக்குமோ அதுபோல இருந்தது.

    இது எனது தனிப்பட்ட கருத்து.

  15. எனக்கு என்னவோ கீர்த்தனாவின் நடிப்பு பிடிக்கவைல்லை… ஓவர் ஆக்டிங் போல இருந்தது !!!!

  16. கிரி,கலக்கிட்டீங்க வழக்கம் போல..கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் ஒரே ஒரு குறை , கீர்த்தனாவின் ஓவர் ஆக் ஷன் தான்.

  17. சின்ன அம்மிணி, ஜோ, அண்ணாமலையான், ஜமால், மயில், அருண்,பெஸ்கி, சரவணன், பிரவின்குமார், ரோஸ்விக், வாசுகி, முத்துலெட்சுமி, சபரிநாதன், ராஜ், ராதா கிருஷ்ணன், எப்பூடி, ஸ்ரீனிவாசன் மற்றும் சதா வருகைக்கு நன்றி.

    @அருண்

    ரஜினி எதுக்குங்க கோவிச்சுக்க போறார்! 🙂

    @ரோஸ்விக்

    :-))) ரீமாக்கு ரசிகர் அதிகம் ஆகிட்டாங்கடோய்! 😉

    @வாசுகி

    விடை கொடு எங்கள் நாடே! போல ..அங்கே குண்டு போடுவதால் ஊரை காலி செய்துகொண்டு சென்று கொண்டு இருப்பார்கள் ஒரு பெரியவர் மட்டும் அந்த இடத்தை விட்டு செல்ல மனமில்லாமல் கோவில் மணியை அடித்துக்கொண்டே நிற்பார் விழும் குண்டுகளுக்கு மத்தியிலே. இது பற்றி எழுத நினைத்து மறந்து விட்டேன்.

    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி கூட ஆண்ட்ரியா ரீமா மாதிரி …நான் மாளு ரீமா இருவருக்கும் ரசிகன் ஹி ஹி ஹி 😉

    @ராஜ் & ஸ்ரீநிவாசன்

    நீங்க சொல்வது உண்மை தான், கொஞ்சம் எரிச்சல் வரும் நடிப்பு தான், அதற்க்கு அப்படி அமைக்கப்பட்டுள்ள கதாப்பாத்திரமும் ஒரு காரணம்.

    @எப்பூடி

    இது பற்றி நானும் யோசித்தேன், கண்டிப்பாக யாராவது கூறுவார்கள் என்று எதிர்பார்த்தேன். நீங்கள் கூறி விட்டீர்கள் 🙂

    @சதா

    ஹா ஹா ஹா… விமர்சனம் எழுதி இருந்தால் ஆண்ட்ரியா பற்றி கண்டிப்பாக கூறி இருப்பேன். ஆண்ட்ரியா பாவம் நிறைய காட்சிகளை செல்வா குறைத்து விட்டாராம்.

    உன்மேல ஆசை தான் பாட்டு அசத்தலாக எடுக்கப்பட்டுள்ளது, எனக்கு ரொம்ப பிடித்தது. முதல் பாதிக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம் என்றுள்ளேன்.

  18. // Srinivas said…
    Innikku evening dhaan poga poren….Naaalaikku Vandhu solren..
    Epdiyum Nalla irukkunnu dhaan Solven…coz…idhuvaraikkum paathavanga ellaarume nalla illannu dhaan sollirkkaanga:)//

    கண்டிப்பா பார்த்துட்டு வந்து சொல்லுங்க! படம் எடிட் செய்த பிறகு பாசிடிவாகத்தான் அனைவரும் கூறுகிறார்கள், நான் கேள்வி பட்டவரை.

    நீங்க வேற ஸ்ரீனிவாசன் வேறயா! நான் இருவரும் ஒருவர் என்று நினைத்து விட்டேன் அவ்வ்வ்வ்

  19. தலைப்பை போலவே இந்த இரண்டு படங்களக்கும் உள்ள ஒற்றுமை நான் இன்னும் இந்த இரண்டு படங்களை பார்கவே இல்லை..கன்னத்தில் முத்தமிட்டால் ரொம்ப நாட்களாக தள்ளி போய் கொண்டே இருக்கிறது

    தலைவி Andrea வை பற்றி ஒரு வார்த்தை கூட வராததை இந்த சங்கத்தின் தலைவர் சதா ரொம்ப வருத்தமாக உள்ளதாக கேள்வி..(உன் மேல ஆசைதான் பாடலில் அவரது movements மிகவும் அருமை)

  20. நல்லா எழுதியிருக்கீங்க கிரி.முதல் படம் எனக்கு பிடித்திருக்கு, சில "ஏன்ஜலினா+டேனியல் கிரேக்" பட காட்சிகள் (தம்ப் ரைடர், Tomb Raider) வாடை அடித்தாலும், தமிழில் ஒரு வித்தியாசமான+துணிச்சலான நல்ல முயற்சி.இரண்டாம் படம் ஒரு நல்ல குறும்பட விளம்பரம்.ஒரு இனம் அழிவதை அதே இனத்துக்கு படம் பிடித்து காட்டுவது…..என்னவோ எனக்கு பிடிக்கவில்லை.அதுவும் அந்த குழந்தை நடிப்பு சுத்தமாக பிடிக்கவில்லை.ஆனால் நந்திதா ரொம்ப பிடித்தது இந்த படத்தில்.

  21. Innikku evening dhaan poga poren….Naaalaikku Vandhu solren..
    Epdiyum Nalla irukkunnu dhaan Solven…coz…idhuvaraikkum paathavanga ellaarume nalla illannu dhaan sollirkkaanga:)

  22. //கண்டிப்பா பார்த்துட்டு வந்து சொல்லுங்க! படம் எடிட் செய்த பிறகு பாசிடிவாகத்தான் அனைவரும் கூறுகிறார்கள்//

    Padam Edit Panni thaane Release pannuvaanga:) Chumma Mokkai potten….

    ( NHM writer access illaadhadhaal Thanklishil type panna vendiyirukkiradhu… THILLU MULLU senju adutha pinnottam tamil il seigiren:)

  23. //ஒரு பெரியவர் மட்டும் அந்த இடத்தை விட்டு செல்ல மனமில்லாமல் கோவில் மணியை அடித்துக்கொண்டே நிற்பார் //

    ம்ம். இது நிஜத்திலேயே நடைபெறுவது தான். இளம் வயதில் பிள்ளைகள் உள்ள பெற்றோர் பிள்ளைகளின் நலம் கருதி இடம்பெயர்ந்து சென்றுவிடுவார்கள். ஆனால் வயது முதிந்தவர்கள் சொந்த வீட்டை, ஊரை விட்டு வர சம்மதிப்பதில்லை.
    (அந்த காட்சியில் காட்டியதை போல. அந்த காட்சியும் உருக்கமான காட்சி தான்.)

    பிழையான தகவல், போராட்டத்தை கொச்சைப்படுத்துவது போன்ற காட்சிகள் இருப்பதையும் மறுக்க முடியாது.
    ஆனால் நான் ஈழப்பிரச்சினை பற்றி பேசும் படமாக பார்க்காமல், குழந்தைக்கும் தாய்க்கும் (உண்மையான, வளர்ப்பு)இடையிலான உணர்வுகளை காட்டும் படமாகவே பார்க்கிறேன். அதனால் கன்னத்தில் முத்தமிட்டால் எனக்கு பிடித்த படம் தான். அதுவும் கடைசியில் தாய்க்கு(சிம்ரன்) முத்தம் கொடுக்கும் காட்சி ஒரு அழகான கவிதை.

  24. கன்னத்தில் முத்தமிட்டால் ஒரு சிறந்த படம். ஈழம் பற்றி இன்னும் விரிவாக எடுக்கப்பட்ட காட்சிகள் சென்சாரின் கத்திரிக்கு ஆளாகி விட்டதாகவே தெரிய வந்தது பின்னாளில்.

    ஆ.ஒ பார்க்கவில்லை என்றாலும் எப்போதுமே நான் ரீமாவின் ரசிகைதான்:)!

  25. கிரி , தாங்கள் கூறியது போலவே படம் சூப்பர்.. நேற்று தான் இந்த படத்தை பார்த்தேன் ..எல்லாரும் இரண்டாம் பாதி சரியில்லை என்றார்கள் ..எனக்கு இரண்டாம் பாதிதான் மிகவும் சுவாரசியமாக இருந்தது..இவ்ளோ சின்ன பட்ஜெட்ல இப்டி படம் எடுக்கறது அட்டகாசமான விஷயம்..ஆயிரம் கோடில படம் எடுத்தா அவதாரோட நாமளும் சூப்பரா படம் எடுக்கலாம்..அட இந்த கதையும் அவதாரும் கிட்ட தட்ட ஒன்னுதானே…இதுல சோழர்கள் பாண்டியர்களை விரட்டுற மாதிரி இருந்தா அதுதானே அவதார்..எல்லாரும் ஏன் படம் நல்ல இல்லைன்னு சொல்றாங்கன்னு தெரில ..தலைவர் சிவாஜி ல சொல்ற மாதிரி ,” ஒரு படம் ஒடவெக்கரதுக்குன்னா யாரும் வர மாட்டாங்க…தடுக்கர்துக்குன்ன மட்டும் கரெக்ட் ஆ வந்துடுவாங்கன்னு நல்ல தெரியும்”ஆயிரத்தில் ஒருவன் நல்ல படம்ன்னு நெனைக்கறவங்க மட்டும் இங்க இருங்க..அப்டி குறை சொல்றவங்க கொஞ்சம் அந்த ஆபீஸ் ரூம் ல போய் வெயிட் பண்ணுங்க தான்:) செல்வராகவன்னு ஆயிரத்தில் ஒருத்தரோட மூளை ல உருவானகதையை கோடிக்கணக்கில் உள்ள நாம் பார்த்துவிட்டு நம்முடைய கோடிக்கணக்கான மூளையை ஒரு மூளையோடு எதிர்க்கலாமா??படத்தின் இரண்டாம் பாதியில் ரீமா பாண்டிய சிலையை பார்த்து அழும் போது தான் சோழ நாடு தூதன் அல்ல, பாண்டிய நாட்டை சேர்ந்தவள் என்று காட்டியிருந்தால் இன்னும் அட்டகாசமாய் இருந்திருக்கும் .கிளைமாக்ஸ் அட்டகாசம் .. திடீர் திடீர் என வரும் நகைச்சுவைகள் அற்புதம்..கிளைமாக்ஸ் இல் பார்த்திபன் கூறும் ” இந்த படை பற்றி இதற்கு முன் கூற வில்லையே , அச்சப்படுவோம் என்றா என்று கூறி சிரிப்பது அட்டகாசம் . எவ்ளோ நல்ல படம் எடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள்.. ஒரு மதிய உணவு சாப்பிடும் போது குழம்பு , ரசம் , காய்கறி , இனிப்பு, போன்ற பல பலகாரங்களில் ஒன்று சரியில்லை என்பதற்காக ஒட்டு மொத்தமாக சாப்பாடு சரியில்லை என்று கூற கூடாது ..என்னை பொறுத்தவரையில் இந்த ஆண்டில் இரண்டாம் மிகப்பெரிய சிறந்த படம் ஆகும் …முதல் சிறந்த படம் .தலைவரின் எந்திரன் தான் 🙂

  26. // வாசுகி said…
    பிழையான தகவல், போராட்டத்தை கொச்சைப்படுத்துவது போன்ற காட்சிகள் இருப்பதையும் மறுக்க முடியாது.
    ஆனால் நான் ஈழப்பிரச்சினை பற்றி பேசும் படமாக பார்க்காமல், குழந்தைக்கும் தாய்க்கும் (உண்மையான, வளர்ப்பு)இடையிலான உணர்வுகளை காட்டும் படமாகவே பார்க்கிறேன்.//

    உண்மை தான் இந்தப்படம் ஈழ பிரச்சனை பற்றிய படமல்ல, படத்தில் ஒரு காரணியாக வருகிறது. எனவே அதில் விரிவான விளக்கங்களை எதிர்பார்க்க முடியாது. தவறுகள் இருக்கலாம்.

    //கடைசியில் தாய்க்கு(சிம்ரன்) முத்தம் கொடுக்கும் காட்சி ஒரு அழகான கவிதை.//

    உண்மை, என்னை ரொம்ப கவர்ந்தது.

    ======================================================================

    // சிங்கக்குட்டி said…

    ஒரு இனம் அழிவதை அதே இனத்துக்கு படம் பிடித்து காட்டுவது…..என்னவோ எனக்கு பிடிக்கவில்லை.//

    ம்ம்ம் அந்தப்படம் அதை முன்னிறுத்தவில்லை அதை ஒரு பகுதியாகத்தான் காட்டுகிறது.

    //அதுவும் அந்த குழந்தை நடிப்பு சுத்தமாக பிடிக்கவில்லை.//

    🙂 வயதுக்கு மீறிய வசனங்கள் நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம்.

    ======================================================================

    // ராமலக்ஷ்மி said…

    ஈழம் பற்றி இன்னும் விரிவாக எடுக்கப்பட்ட காட்சிகள் சென்சாரின் கத்திரிக்கு ஆளாகி விட்டதாகவே தெரிய வந்தது பின்னாளில்.//

    அப்படியா!

    // நான் ரீமாவின் ரசிகைதான்:)//

    🙂

    ======================================================================

    // Srinivas said…

    எல்லாரும் ஏன் படம் நல்ல இல்லைன்னு சொல்றாங்கன்னு தெரில ..//

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை .. இதில் நாம் நினைக்க என்ன இருக்கிறது.

    //தலைவர் சிவாஜி ல சொல்ற மாதிரி ,

    ” ஒரு படம் ஒடவெக்கரதுக்குன்னா யாரும் வர மாட்டாங்க…தடுக்கர்துக்குன்ன மட்டும் கரெக்ட் ஆ வந்துடுவாங்கன்னு நல்ல தெரியும்”//

    ஹா ஹா ஹா அது வேணா உண்மை தான்..

    //ஆயிரத்தில் ஒருவன் நல்ல படம்ன்னு நெனைக்கறவங்க மட்டும் இங்க இருங்க..அப்டி குறை சொல்றவங்க கொஞ்சம் அந்த ஆபீஸ் ரூம் ல போய் வெயிட் பண்ணுங்க தான்:) //

    :-))))

    //படத்தின் இரண்டாம் பாதியில் ரீமா பாண்டிய சிலையை பார்த்து அழும் போது தான் சோழ நாடு தூதன் அல்ல, பாண்டிய நாட்டை சேர்ந்தவள் என்று காட்டியிருந்தால் இன்னும் அட்டகாசமாய் இருந்திருக்கும் .//

    சரியா சொன்னீங்க! நான் இதை நினைக்கலை. நல்ல கவனிப்பு.

    //கிளைமாக்ஸ் இல் பார்த்திபன் கூறும் ” இந்த படை பற்றி இதற்கு முன் கூற வில்லையே , அச்சப்படுவோம் என்றா என்று கூறி சிரிப்பது அட்டகாசம் . //

    ஆமாம், ஆனால் அந்த சண்டை தான் எனக்கு பிடிக்கவில்லை.

    //எவ்ளோ நல்ல படம் எடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள்//

    ஆமாம் அதென்ன காரணமோ புரியலை!

    //ஒரு மதிய உணவு சாப்பிடும் போது குழம்பு , ரசம் , காய்கறி , இனிப்பு, போன்ற பல பலகாரங்களில் ஒன்று சரியில்லை என்பதற்காக ஒட்டு மொத்தமாக சாப்பாடு சரியில்லை என்று கூற கூடாது//

    அடிச்சு தாக்குங்க! இதைத்தான் பலர் செஞ்சுட்டு இருக்காங்க.

    ஸ்ரீநிவாஸ் நீங்க பதிவு எழுத பக்காவா தயார் ஆகிட்டீங்க என்பது உங்க எழுத்தில் தெரிகிறது, நிஜமாவே நல்லா விமர்சித்து இருக்கீங்க. நீங்க தாராளமா உங்க விருப்பபடி எந்திரன் படத்தில் இருந்து பதிவு எழுத ஆரம்பித்து விடலாம், முதல் பதிவா எந்திரன் விமர்சனம் போட்டு விடுங்க. அப்புறம் ஒரு சின்ன விஷயம் தலைவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் அனைத்தையும் கலந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

  27. ஒரு சில படங்கள் படம் வெளிவந்த சமயத்தில் நமக்கு புரியாது! அதனால் அதில் உள்ள காட்சிகளின் வீரியமும் தெரியாது.. அனுபவங்களில் விஷயங்கள் கிடைத்த பிறகு திரும்ப பார்க்க வாய்ப்பு கிடைத்தால் அது அற்புதமாக தெரிகிறது. அதில் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்தப்படம் உள்நாடு வெளிநாடு என்று பல விருதுகளை குவித்துள்ளது, அதற்கு தகுதியான படமே என்பதில் சந்தேகமில்லை!//////சரியா சொன்னீக

  28. Giri naan unga rasigan… kadandha oru varusama onga blogs ai padikaren.. naan mathavanga blogs ai padika arambichadhey onga blog ai paathu dhan… aporam indha padathai pathi paapom…modho oru thadava indha padam pathen bore adichuduchu, 10 nimisathula la mathiten…. Neenga solli irundhinga – இந்தப்படம் வெளிவந்த போது (2002) ஈழத்தமிழர்கள் பற்றி எதுவுமே தெரியாது, பதிவுலகம் வந்த பிறகே பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். andha madhiri naan 2006 la paris la sila natkal irundhen, appo dhan anga settle aayi irukira orutharu (ilangai tamilar)kitta pesum bodhu dhan avangala pathi therinjadhu. Aporam Paris la ilangai tamilargal adhigam.Anga oru local cable channel(Zee TV + Jaya TV kalandhu varum) la indha padam potanga.. appo pathen indha padam… Modho bore adicha padam ippo paakum bodhu manasa thotruchu… Keerthana oda character adhigaprasangi thanama irundhadhu..aana National award vanginadhu ellarum therinju irukum.. kadaisia Giri, naanum Rajni rasigan 🙂

  29. வணக்கம் கிரி…. முதல் படம் இன்னும் நான் பார்க்கவில்லை… உங்களின் பார்வையில் பார்க்க தூண்டுகின்றது

  30. கிரி ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தேன் இன்னும் கொஞ்சம்
    செல்வராகவன் திரைகதையில் முயற்சி செய்திருந்தால் படம்
    இன்னும் சிறப்பாக வந்திருக்கும்

  31. //திரைப்படங்கள் இரண்டு உணர்வுகள் ஒன்று//கொஞ்ச நேரம் தலைப்பு புரியவே இல்லை ஒரு . – இப்படி எதாவது போட்டாதானே என்னை மாதிரி மரமண்டைகளுக்கு புரியும்

  32. பிரபு வருகைக்கு நன்றி

    ======================================================================

    // Arun said…
    kannathil muthamittal climax scene kannu kalangidum giri thala.. romba nalla sollli irukeenga.. //

    நன்றி அருண்

    //Ayirathil oruvan – No comments:)//

    ஹி ஹி ஹி

    ======================================================================

    // vignesh said…

    Giri naan unga rasigan… kadandha oru varusama onga blogs ai padikaren.. //

    நன்றி விக்னேஷ் 🙂

    //andha madhiri naan 2006 la paris la sila natkal irundhen, appo dhan anga settle aayi irukira orutharu (ilangai tamilar)kitta pesum bodhu dhan avangala pathi therinjadhu. Aporam Paris la ilangai tamilargal adhigam.Anga oru local cable channel(Zee TV + Jaya TV kalandhu varum) la indha padam potanga.. appo pathen indha padam… Modho bore adicha padam ippo paakum bodhu manasa thotruchu..//

    உங்களை ரொம்ப கவர்ந்தது என்பது உறுதியாக தெரிகிறது. ஒரு வருடமாக என் பதிவுகளை படித்தும் பின்னூட்டம் போடாத நீங்கள் இந்த பதிவிற்கு பின்னூட்டம் போடும் போதே தெரிகிறது 🙂

    //keerthana oda character adhigaprasangi thanama irundhadhu.//

    இதுவே அனைவரின் கருத்தாக உள்ளது.

    //kadaisia Giri, naanum Rajni rasigan :)//

    சூப்பரு 🙂

    //Reg 1001, pudhu muyarchi adhaneley selva vai paratalaam….//

    வழிமொழிகிறேன்

    ======================================================================

    // ஆ.ஞானசேகரன் said…

    வணக்கம் கிரி…. முதல் படம் இன்னும் நான் பார்க்கவில்லை… உங்களின் பார்வையில் பார்க்க தூண்டுகின்றது//

    கண்டிப்பா பாருங்க ஞானசேகரன்!

    ======================================================================

    // r.v.saravanan said…

    கிரி ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தேன் இன்னும் கொஞ்சம்
    செல்வராகவன் திரைகதையில் முயற்சி செய்திருந்தால் படம்
    இன்னும் சிறப்பாக வந்திருக்கும்//

    உண்மை தான். இரண்டாம் பாதி தான் பலரை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது

    ======================================================================

    // damildumil said…

    //திரைப்படங்கள் இரண்டு உணர்வுகள் ஒன்று//

    கொஞ்ச நேரம் தலைப்பு புரியவே இல்லை ஒரு . – இப்படி எதாவது போட்டாதானே என்னை மாதிரி மரமண்டைகளுக்கு புரியும்//

    அவ்வளவு குழப்பமாமாமாமாமாவாவாவா இருக்கூகூகூ 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!