பங்குச்சந்தை பாதுகாப்பானதா?

3
பங்குச்சந்தை பாதுகாப்பானதா?

ங்குச்சந்தை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இது பாதுகாப்பானதா என்பதைப் பற்றிக் காண்போம். Image Credit

ஏற்கனவே, பங்குச்சந்தை என்றால் என்ன? என்பதைப் பற்றிக் கூறியுள்ளேன். எனவே, அறிமுகம் தேவைப்படுகிறவர்கள் இதைப்படித்த பிறகு இக்கட்டுரையைப் படிக்கவும்.

பங்குச்சந்தை பாதுகாப்பானதா?

பங்குச்சந்தை பற்றிய என்ன விளம்பரங்களைக் கண்டாலும், அதில் சந்தை அபாயங்களுக்குட்பட்டது என்ற வாசகம் இடம் பெற்று இருக்கும்.

காரணம், சிறு தவறு கூட நமது சேமிப்பு மொத்தத்தையும் இழக்க வைத்து விடும்.

உலகம் முழுக்க பங்குச்சந்தை செயல்பட்டு வந்தாலும், இந்தியாவில் கடந்த 2021 ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது.

சிறு சேமிப்புக்கான வட்டி குறைந்து வருவதால், மக்கள் அதிகம் இலாபம் கிடைக்கும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். Demat கணக்கு துவங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எண்ணிக்கை அதிகரிக்கும் போது இலாபமும் அதிகரிக்கும் ஆனால், அதே ஏதாவது சொதப்பினால் பெரிய நட்டத்தில் கொண்டு வந்து விட்டு விடும்.

இலாபம்

தற்போதைய சூழ்நிலையில் சேமிப்புத் திட்டங்களில் 7% வட்டி தோராயமாகக் கிடைக்கும் நேரத்தில் பங்குச்சந்தையில் 13% தாண்டியும் கிடைக்கிறது.

சில நேரங்களில் 20% தாண்டியும் செல்கிறது.

எனவே, பல காலமாக முதலீடு செய்து வந்தவர்களுக்கு அபரிமிதமான இலாபத்தைப் பங்குச்சந்தை அளித்துள்ளது என்றால் மிகையில்லை.

குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஷேரில் முதலீடு செய்வதை விட, மியூச்சுவல் ஃபண்ட் வழியாக மாதாமாதம் (SIP) செய்யும் முதலீடு எளிதாக இருப்பதால், அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது.

தனிப்பட்ட முறையில் எனக்கு அதிக இலாபத்தைத் தந்துள்ளது.

பாதுகாப்பானதா?

பாதுகாப்பானது என்று யாராலும் கூறவே முடியாது காரணம், உலக நடப்புகளைப் பொறுத்து ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால், இறக்கம் இருந்தாலும் ஏற்றம் அதிகம் இருந்து கொண்டே இருப்பதாலே, இதற்கான வரவேற்பும் அதிகமாக உள்ளது.

எனக்கான இலாபம் 22% இருந்த போது கொரோனா காலத்தில் 2% க்கு வந்து விட்டது. முதலுக்கு நட்டமில்லை என்றாலும், மிகப்பெரிய இழப்பு.

இச்சேமிப்பு நீண்டகாலம் சேமிப்பாக இருந்ததாலும், எனக்குத் தேவைகள் இல்லாததாலும் அப்படியே தொடர்ந்து வந்தேன், பின்னர் மீண்டு விட்டது.

உலகப்பொருளாதாரம்

பங்குச்சந்தை என்பது இந்தியா வளர்ச்சியை மட்டும் வைத்தல்ல, உலகளவில் ஏற்படும் மாற்றங்களும் பங்கு மாற்றத்தில் முக்கியப்பங்கை வகிக்கும்.

அமெரிக்காவில் கொடுக்கப்படும் ஒரு அறிவிப்பு, இந்தியாவின் பங்குச்சந்தையை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.

Recession என்று அறிவிக்கப்பட்டால், இந்தியப் பங்குச்சந்தை அதலபாதாளத்துக்குச் செல்லும். காரணம், அனைத்துமே சங்கிலி பிணைப்பாக உள்ளது.

அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டால், அங்குள்ள நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் போது அதைச்சார்ந்துள்ள இந்திய நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.

எனவே, இப்பிரச்சனை உலகளவில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துவதால் பங்குச்சந்தையில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும்.

யாருக்கு அதிகப் பாதிப்பு?

தங்களுடைய மொத்தச் சேமிப்பையும் இதிலேயே வைப்பவர்களுக்கு, இதை மட்டுமே நம்பிக்கொண்டு உள்ளவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்துள்ளது.

அதோடு நீண்டகால முதலீடாக இல்லாமல் குறுகிய காலத்தில் அதிக முதலீடு செய்பவர்களுக்கு, மேற்கூறிய சரிவு ஏற்பட்டால், மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

அதிக இலாபம் கிடைப்பதால் மொத்தச் சேமிப்பையும் இதிலேயே முதலீடு செய்து, ஒருவேளை உலகளவில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சனையால் (Recession, War) மிகப்பெரிய சரிவு ஏற்பட்டால், அதனால் ஏற்படும் இழப்பைத் தாங்க முடியாது.

இதை நிச்சயம் பயமுறுத்தக் கூறவில்லை ஆனால், இலாபம் அதிகம் கிடைக்கிறது என்பதற்காகவே இதை ஒன்றை மட்டுமே நம்ப வேண்டாம் என்று கூறுகிறேன்.

என்ன செய்வது?

பங்குச்சந்தையாக இருந்தாலும், வேறு எதுவாக இருந்தாலும், ஒரே இடத்தில் அனைத்துச் சேமிப்பையும், முதலீட்டையும் முடக்கக் கூடாது.

நிலம், PPF, PF, FD, SGB, NPS, தங்கம், Superannuation, சிறு சேமிப்புத் திட்டங்கள் உட்படப் பல்வேறு திட்டங்களில் பிரித்துச் சேமிப்பைத் தொடர வேண்டும்.

உலகளவில் அனைத்து அரசாங்கங்களும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றன. எனவே, மிக நெருக்கடியான சூழ்நிலையில் வங்கி தொடர்பாக உள்ளவை பிரச்சனையாக வாய்ப்புகள் உள்ளது.

ஒருவேளை அப்படியொரு தவிர்க்க முடியாத மோசமான சூழ்நிலை ஏற்பட்டால் நிலம், தங்கம் (Physical asset) வைத்து இருந்தால், பாதுகாப்பு கொடுக்கலாம்.

பங்குச்சந்தையில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டாலும் அடுத்த சில வருடங்களில் மீண்டெழ ஏராளமான வாய்ப்புகள் உள்ளது, கொரோனாவுக்குப் பிறகு நடந்து போல.

ஆனால், இடைப்பட்ட காலத்தில் தாங்கக்கூடிய அளவுக்கு நம் பொருளாதாரம் இல்லையென்றால், மிகப்பெரிய சிக்கலைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. கிரி, படிக்கும் போது பங்கு சந்தைகளின் மீது ஆர்வம் இருந்தது. ஆனால் கடந்த பல வருடங்களாக அதன் மீது ஆர்வம் முற்றிலும் இல்லாமல் போனது. அதனால் இது வரை ஒரு நடவடிக்கையிலும் நான் ஈடுபட்டது இல்லை..

  2. @யாசின்

    நீங்கள் வெளிநாட்டிலிருப்பதால், இதுகுறித்த விவரங்கள் உங்களுக்கு பரிட்சியமாக இல்லாதது காரணமாக இருக்கலாம்.

    இங்கே இருந்தால், உங்கள் நண்பர்கள் யாராவது கூறுவார்கள், பயன்படுத்துவார்கள் எனவே , அதையொட்டி உங்களுக்கும் ஆர்வம் வரும்.

    அதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், நீங்களும் டீல்ல விட்டுட்டீங்க போல.

    திட்டமிடல் இருந்தால், சரியாகப் பயன்படுத்தலாம் .

  3. Ji, what you get back in deposit is return(for being patience and trust) and what you get back in stock market is reward (for being clever and being not so clever). In my personal view, The %(7 and 13) carry different meaning in each scenario. For e.g. imagine the return % for a flower seller vs someone who deepswims in sea searching for pearl.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!