Kill (2024 Hindi) | A Deadly Fight

1
Kill movie

ந்தியாவில் பல்வேறு வன்முறைப்படங்கள் வந்து இருந்தாலும், Kill போன்ற படங்கள் வந்தது குறைவு. Image Credit

Kill

இராணுவத்தில் பணியில் இருப்பார் லக்ஷ்யா.

காதலி தான்யாக்கு திருமணம் முடிவாகி விடுகிறது, அனைவரும் ராஞ்சியிலிருந்து டெல்லி செல்லும் அதி விரைவு ரயிலில் பயணிக்கிறார்கள்.

அதே ரயிலில் லக்ஷ்யாவும் பயணித்துத் தன்யாவை சந்திக்கும் வேளையில், ஆஷிஷ் வித்தியார்த்தி தலைமையில் ரயில் கொள்ளைக் கூட்டம் ரயிலில் நுழைகிறது.

கொள்ளையோடு கொலையும் நடக்க இறுதியில் என்ன ஆனது என்பதே Kill.

ரயில்

இப்படம் பார்க்க இரு காரணங்கள், ஒன்று எனக்கு ரயில் பிடிக்கும். இன்னொன்று இந்தப்படத்தில் உள்ள ஆங்கிலப்படங்களைப் போன்ற சண்டைக்காட்சிகள்.

சண்டைக்காட்சிகள் என்றால் ஹாரர் படம் போல ரத்தக்களரியான சண்டை.

இது போன்ற காட்சிகளை இந்தியப்படங்களில் பார்ப்பது இதுவே முதல் முறை. வழக்கமாக ஓரிரு நபர்களோடு முடிந்து விடும் ஆனால், இதில் 40+ நபர்கள்.

எனவே, படம் நெடுக வெட்டு, குத்து என்று ரணகளமாக உள்ளது.

ஒரே இரவில் நடக்கும் கதை.

திரைக்கதை

எதிர்பார்த்தது போலச் சண்டைக்காட்சிகள் அதிரடியாக இருந்தது ஆனால், சில கேள்விகளும் உள்ளது.

தன்யாவின் அப்பா பெரிய தொழிலதிபர் ஆனால், இவர்கள் இருவரும் காதலிப்பது தெரியாது. எதனால் கூறவில்லை என்பதற்கு உறுதியான காரணமாக இல்லை.

லக்ஷ்யா அதிரடியாகச் சண்டை போடுகிறார் ஆனால், முகம் அமுல் பேபி போல இருப்பது சண்டைகளுக்கும், முகபாவனைகளுக்கும் சற்று பொருத்தமாக இல்லை.

தன்யா பாதிக்கப்பட்டதால் கோபமாகும் லக்ஷ்யா வெறிகொண்டு எல்லோரையும் போட்டுத்தள்ளுகிறார்.

இந்த இடத்தில் ஆஷிஷ் வித்தியார்த்தி பயந்து விடுவதோடு உடன் வந்தவர்களும் பயந்து விடுவதால், வில்லனுக்கு உண்டான கெத்து போய் விடுகிறது.

இதை ஈடுகட்ட ராகவ் என்ற முக்கிய வில்லன் லக்ஷ்யா க்கு பெரிய சவாலாக உள்ளார். அவர் லக்ஷ்யாவை குறைத்து மதிப்பிடும் காட்சிகளில் பிரச்சனை அதிகமாகிறது.

அலட்டிக்கொள்ளாமல் ஆனால், ஆபத்தான நபராக படம் முழுக்க வருகிறார்.

ஒளிப்பதிவு பின்னணி இசை

இப்படத்தில் அதிக வேலை இருந்தது ஒளிப்பதிவு குழுவினருக்குத் தான். குறுகிய இடத்தில் அனைத்தையும் படமாக்க வேண்டும்.

நெருக்கடியான இடத்தில் சண்டைக்காட்சிகளைப் படம் முழுக்க அமைப்பது சவாலான வேலையாக இருக்கும்.

பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதும் கூடுதல் நெருக்கடி.

சிறிய இடத்தில் படம் முழுக்க கேமராவை தூக்கிக்கொண்டு காட்சியமைத்து, ரயில் மேலே ஓடி அதையும் படமாக்கி என்று கடுமையான பணியே.

பின்னணி இசை பரபரப்பான காட்சிக்கு ஏற்றவாறு உள்ளது.

யார் பார்க்கலாம்?

அதிரடி ஹாரர் சண்டைக் காட்சிகளைப் பார்க்க விருப்பமுள்ளவர்கள் மட்டும் காணலாம். மற்றவர்கள் தவிர்ப்பது நல்லது.

இவ்வாறான படங்களில் ஆர்வமில்லாதவர்கள் படம் பார்த்து ‘என்னப்பா இது! ஒரே வன்முறையா இருக்குன்னு சொல்லாதீங்க‘ 🙂 .

பாலியல் ரீதியான காட்சிகள் இல்லை.

Disney+ Hotstar ல் காணலாம்.

Directed by Nikhil Nagesh Bhat
Screenplay by Ayesha Syed, Nikhil Nagesh Bhat
Story by Nikhil Nagesh Bhat
Produced by Karan Johar, Guneet Monga, Apoorva Mehta, Achin Jain
Starring Lakshya, Raghav Juyal, Ashish Vidyarthi, Abhishek Chauhan, Tanya Maniktala
Cinematography Rafey Mehmood
Edited by Shivkumar V. Panicker
Music by
Score: Ketan Sodha
Songs: Vikram Montrose, Shashwat Sachdev, Haroon-Gavin
Release dates 7 September 2023 (TIFF), 5 July 2024 (India)
Running time 105 minutes
Country India
Language Hindi

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

1 COMMENT

  1. கிரி, பொதுவாக எனக்கு சண்டை காட்சிகள் நிறைந்த படங்கள் மீதும் எப்போதும் ஆர்வம் மிக மிக குறைவு. சிறு வயதிலிருந்தே இது போன்ற படங்களின் மீது அதிக விருப்பம் இருக்காது. யதார்த்த படங்கள் பார்ப்பதற்கு மிகவும் பிடிக்கும்.. கோவையில் இருந்த போது மேட்டுபாளையத்தில் பார்த்த தவமாய் தவமிருந்து படம் என் கண்ணுக்குள் இன்னும் ஓடி கொண்டிருக்கிறது..

    பொதுவாக நிறைய படங்கள் பார்த்தாலும் சில படங்கள் மட்டும் நமக்கு மிகவும் விருப்பமாக இருக்கும். அந்த வகையில் டாம் குருஸ் நடித்த தி லாஸ்ட் சாமுராய் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் சண்டைப்படம் என்ற உடன் தற்போது உடனே என் நினைவில் வருவது, கைதி படம். இரவு காட்சிகள், இரவு நேர ஒளிப்பதிவு. பின்னணி இசை, சண்டை காட்சியமைப்பு.. தொடர்சியாக சண்டை காட்சிகள் வந்தாலும் அது எங்கும் நம்மை சலிப்படைய வைப்பதிலை.. இறுதி சண்டை காட்சிகள் மீது ஆர்வம் இல்லை..

    ஆனால் அதற்கு முந்தைய காட்சிகளை ரொம்பவும் ரசிப்பேன்.. இடையில் ஒரு சின்ன நகைச்சுவையும் கலந்து இருக்கும்.. பருத்திவீரன் படத்தில் கார்த்தி பெண் கேட்க சென்ற போது அங்கு நடக்கும் சண்டை முடிவில், கஞ்சாகருப்புவின் சோம்பப்படி சைக்கிள் தள்ளிவிடப்பட்டும் போது சமுத்திரக்கனி 10 ரூபாய்க்கு சோம்பபடி கேட்பது நகைச்சுவையின் உச்சம்.. காரணம் ஒரு சீரியசான காட்சிக்கு இடையில் ஒரு மெல்லிய நகைச்சுவை காட்சி வைப்பது இயக்குனரின் தனி திறமை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!