ஈரம் (2009) | தண்ணீர் பேய்

27
ஈரம் earam movie

தாநாயகி சிந்து மேனன் தற்கொலை செய்து இருப்பதாக ஈரம் தொடங்குகிறது.

விசாரிக்க வரும் காவல் துறை அதிகாரி ஆதி,  சிந்து மேனன் தனது முன்னாள் காதலி என்பதால் தனிக்கவனம் எடுத்து இது தற்கொலை இல்லை கொலை என்ற கோணத்தில் விசாரிக்கிறார். Image Credit

அவர் இது பற்றி விசாரிக்கும் போதே சிந்து மேனன் பிளாட்டில் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவராகச் சாகிறார்கள்.

சிந்துமேனனை கொலை செய்தது யார் எதனால் பலர் சாகிறார்கள் என்பதைச் சுவாராசியமாக ஆவி துணையுடன் கூறி இருக்கிறார்கள்.

ஈரம்

பொதுவாக இதைப் போல ஆவி சமாச்சாரப் படங்களைக் கவனமுடன் எடுக்க வேண்டும் இல்லை என்றால் சீரியஸ் டைம் காமெடி டைம் ஆகி விடும்.

இதற்கு முன்பு வந்த யாவரும் நலமும் சரி ஈரமும் சரி அதில் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

படத்தில் குறிப்பிடத் தக்க இன்னொரு விஷயம்..யாருக்கும் அதிக ஒப்பனை இல்லை, இயல்பாகவே இருக்கிறார்கள்.

சிந்து மேனன் சாவது தண்ணீரில் என்பதால் படம் முழுவதும் எங்கும் தண்ணீரே வியாபித்து உள்ளது.

அதன் பிறகு நடக்கும் கொலைகளும் ஏதாவது ஒரு விதத்தில் தண்ணீருடன் தொடர்புடையதாகவே உள்ளது.

படம் முழுவதும் மழை, தண்ணீர் என்று இயல்பாக அதே சமயத்தில் நம்பும்படியும் கொடுத்து இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.

சரண்யா மோகன் சிந்து மேனனின் தங்கையாக வருகிறார்.

ஆதியும் சிந்து மேனனும் முதன் முதலில் சந்திக்கும் காட்சி வழக்கம் போல அமைக்கப்பட்டு இருந்தாலும் ரசிக்கும் படி இருக்கும்.

சிந்துமேனன் & ஆதி

சிந்துமேனன் அழகாக உள்ளார், ஆனால் இவரும் ஆதியும் கல்லூரி மாணவர்களாக வரும் போது பொருத்தமாக இல்லை, இருவருமே மெச்சூர்டாக இருக்கிறார்கள்.

ஆனால் வழக்கமான படம் போல இல்லாமல் வரம்பு மீறாமல் இவர்கள் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

படத்தில் பாடல்கள் நன்றாக உள்ளது. பின்னணி இசை சிறப்பாக உள்ளது, இடைவேளை வரும் போது ஒருவரை ஆவி கொல்லும் அப்போது கொடுத்த இசையில் என் உடல் சிலிர்த்து விட்டது, கலக்கல்.

அதே போல க்ளைமாக்ஸ் காட்சியிலும் பின்னணி இசை அருமை.

ஆதி சரியான தேர்வு, மிருகம் படத்திலேயே பின்னி பெடலெடுத்து இருப்பார்.

இதில் உடல் இளைத்து ட்ரிம்மாக நல்லா மேன்லியாக இருக்கிறார், சில பெண்களின் தூக்கத்தைக் கெடுத்து இருக்கலாம் 😉 .

காவல் துறை அதிகாரி வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். அலட்டிக் கொள்ளாத சிறப்பான நடிப்பு.

நந்தா

சந்தேகக் கணவனாக வரும் நந்தா, தன் பங்கைச் சிறப்பாகச் செய்து இருக்கிறார்.

முதலில் சாதாரணமாகத் தெரிபவர் போகப் போக அவரின் உண்மையான முகம் தெரியும் போது அதிர்ச்சி அடைய வைக்கிறார்.

எப்படி இருந்தவர் இப்படி மாறி விட்டாரே என்று ஆச்சர்யப்படுத்துகிறார்.

ஆனால், அவர் அப்படி வருவதற்குக் காரணத்தை இயக்குனர் உடனே நியாயப்படுத்தாமல் தொடக்கத்தில் இருந்தே அதற்கான காரணத்தைக் காட்சி அமைப்பிலும் வசனத்திலும் காட்டி வருகிறார் எனவே, எனக்கு ஏமாற்றமாக இல்லை.

நந்தா கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் இதைப் போல வித்யாசமான கதாப்பாத்திரங்களையும் முயற்சிக்கலாம்.

ஆனால், அனைத்து படங்களிலும் ஒரே மாதிரியான முகபாவம் மற்றும் வசன உச்சரிப்பையே பயன்படுத்துவது அலுப்பை வரவழைக்கிறது.

படத்தின் க்ளைமாக்ஸ் முன்பே ஆவியாக வந்து சிந்து மேனன் தனது கதையைக் கூறி (எப்படிக் கொலை செய்யப்பட்டேன்) விடுவதால் சஸ்பென்ஸ் போய் விடுகிறது.

அதன் பிறகும் நம்மை ஆர்வமாகப் பார்க்க வைத்து இருப்பது இயக்குனரின் திறமை தான். ஒரு சில வசனங்கள் நன்றாக இருந்தது.

படத்தின் மைய கருத்தாகச் செக்ஸ் வருகிறது ஆனால், அதை அருவருக்கும் வகையில் காட்டாமல் திரைக்கதையை நகர்த்தி இருப்பது நிம்மதி.

படத்தில் நந்தா நண்பராக வருபவர் ஒரு காட்சியில் இன்றைய நடைமுறையில் இருப்பதைக் கிண்டலாகக் கூறுவது போலக் கூறுவார் ஆனால், அவர் கூறியது பெரும்பாலும் மறுக்க முடியாத உண்மை.

படத்தில் முதல் பாதி நல்ல விறுவிறுப்பு, இரண்டாம் பாதி க்ளைமாக்ஸ் தவிர மெதுவாகவே செல்கிறது, இதை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக்கி இருக்கலாம்.

த்ரில்லர் படம் என்பதால் ஒரு சில காட்சிகளைக் கூற முடியவில்லை.

கெட்ட பழக்கம்

நம்ம ஆளுங்க கிட்ட இருக்கிற கெட்ட பழக்கம், மசாலா படத்துல போய் உலகப்படத்தைத் தேடுவது, ஆவி படத்துல போய் அநியாயத்துக்கு லாஜிக் பார்ப்பது.

யப்பா! அந்தந்த படத்திற்கு அந்தந்த கண்ணோட்டத்தோட போங்க ..அதை விட்டுட்டு சரவணபவன்ல போய்ச் சிக்கன் இல்லை என்று டென்ஷன் ஆனால் எப்படி!

ஈரம் படம் மிகச்சிறந்த த்ரில்லர் படம் என்று சொல்ல முடியவில்லை ஆனால் ஏமாற்றமளிக்காத படம் என்று கூறலாம். இன்னும் படம் பார்க்காமல் இருப்பவர்கள் கண்டிப்பா பாருங்க “ஈரம்” காயும் முன்பு.

இயக்குனர் அறிவழகன் செலவே இல்லாமல் எடுத்துள்ளார், ஷங்கருக்கு கண்டிப்பாக லாபம் தான்.

புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்துவதோடு புதிய கதை களத்தையும் அனுமதிப்பது பாராட்டத் தக்க ஒன்று. வாழ்த்துக்கள் அறிவழகன் மற்றும் ஷங்கர்.

உன்னைப்போல் ஒருவன்

படம் நல்லா இருக்கு….பார்க்காதவங்க பாருங்க.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

27 COMMENTS

  1. //மசாலா படத்துல போய் உலகப்படத்தை தேடுவது, ஆவி படத்துல போய் அநியாயத்துக்கு லாஜிக் பார்ப்பது. யப்பா! அந்தந்த படத்திற்கு அந்தந்த கண்ணோட்டத்தோட போங்க ..அதை விட்டுட்டு சரவணபவன் ல போய் சிக்கன் இல்லை என்று டென்ஷன் ஆனால் எப்படி!//

    ஓகே, ரைட்:)!

  2. உபோஒ விமர்சனத்தில் ஒரு வரியில் எம்புட்டு அரசியலப்பா உங்கள் பதிவில்!

  3. //படம் நல்லா இருக்கு….பார்க்காதவங்க பாருங்க.//

    வெட்னஸ் டே பாக்காதவங்கதான? நான் வெட்னஸ் டே பார்த்துட்டேன் 🙂

  4. ஈரம் பட விமர்சனம் நல்லா இருக்கு.ஆனால் u.p.o- வை ஒரே வரியில் முடிச்சிட்டீங்க(நான் விமர்சனத்தை சொன்னேன்).

  5. //நினைத்தாலே இனிக்கும் பார்க்க விருப்பம் இல்லை என்பதால் //

    ஏன் ஏன் ?

  6. // வாசுகி said…
    //நினைத்தாலே இனிக்கும் பார்க்க விருப்பம் இல்லை என்பதால் //

    ஏன் ஏன் ?//

    🙂 ப்ரியாமணிக்காக பார்க்கலாம் என்று இருந்தேன், அப்புறம் ஏனோ போக பிடிக்கலை. அப்புறமா பார்த்தாலும் அது ப்ரியாமணிக்காகாத்தான் 😉

    ======================================================

    வருகைக்கு நன்றி ஆதவன்..உங்க பேர்ல வர படத்திற்கு விமர்சனம் எழுதிடுவோம் 😉

    =======================================================

    // ஜோ/Joe said…
    என்ன கொடுமை கிரி இது ? ஒரு விமர்சனத்தைப் போடுங்க :)//

    வாங்க ஜோ! விமர்சனம்! சின்னதா!! இருந்தா என்ன ..நான் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டேன் 🙂

    =======================================================

    ராமலக்ஷ்மி நன்றி 🙂

    =======================================================

    // வால்பையன் said…
    உபோஒ விமர்சனத்தில் ஒரு வரியில் எம்புட்டு அரசியலப்பா உங்கள் பதிவில்!//

    அருண் எந்த அரசியலும் அல்ல..அரசியலை பார்த்து நொந்து இந்த வரி அவ்வளோ தான் 😉

    =======================================================

    // எவனோ ஒருவன் said…
    ’நல்லா’ இருக்குன்னு தான சொல்றீங்க?
    பாக்காதவங்க பாருங்கன்னா என்ன அர்த்தம்?//

    படம் பார்க்காதவங்க பாருங்க என்று அர்த்தம் 🙂

    ========================================================

    // பாசகி said…
    வெட்னஸ் டே பாக்காதவங்கதான? நான் வெட்னஸ் டே பார்த்துட்டேன் :)//

    ஆங்கிலத்தில் உன்னைப்போல் ஒருவன் என்றால் வெட்னஸ் டே வா! 😉 புதுசா இருக்கு

    ========================================================

    // fan of big R said…
    ஈரம் பட விமர்சனம் நல்லா இருக்கு.//

    நன்றி R

    //ஆனால் u.p.o- வை ஒரே வரியில் முடிச்சிட்டீங்க(நான் விமர்சனத்தை சொன்னேன்).//

    அதை தான் பிரிச்சு மேஞ்சுட்டு இருக்காங்களே,..நான் புதிதா கூற என்ன இருக்கு 🙂

    ==========================================================

    // Mahesh said…
    கிரி…. உபோஒ.. விமர்சனம் சூப்பர்.. இப்பிடி தெளிவா டீடெய்லா கவனிச்சு ஒவ்வொரு அம்சத்தைப் பத்தியும் விரிவா விமர்சனம் எழுதினது நீங்க மட்டும்தான். :))))))))))//

    ஹி ஹி ஹி நன்றி

  7. //படம் நல்லா இருக்கு….பார்க்காதவங்க பாருங்க//

    ஹி..ஹி கலக்கல் 🙂

  8. // குறை ஒன்றும் இல்லை !!! said…
    ரொம்ப நனைஞ்சிட்டீங்க போல!!!//

    🙂 குளிர் வராதது தான் பாக்கி

  9. //படம் நல்லா இருக்கு….பார்க்காதவங்க பாருங்க.//

    :))

    என்ன கொடுமை கிரி இது ? ஒரு விமர்சனத்தைப் போடுங்க 🙂

  10. //படம் நல்லா இருக்கு….பார்க்காதவங்க பாருங்க.//

    ’நல்லா’ இருக்குன்னு தான சொல்றீங்க?

    பாக்காதவங்க பாருங்கன்னா என்ன அர்த்தம்?

  11. கிரி…. உபோஒ.. விமர்சனம் சூப்பர்.. இப்பிடி தெளிவா டீடெய்லா கவனிச்சு ஒவ்வொரு அம்சத்தைப் பத்தியும் விரிவா விமர்சனம் எழுதினது நீங்க மட்டும்தான். :))))))))))

  12. //ரொம்ப வருடங்களாக மூடி இருந்த திரை அரங்கு//

    எந்த இடம் கிரி?

    மேலும் அடுத்த மாதம் வேலை விசையமாக இரண்டு நாள் சிங்கை வருகிறேன்? உங்களை சந்திக்க முடியுமா?

  13. // வருண் said…
    UPO review or recommendation, Giri?!
    Yes, it is safe and sound! :)))//

    🙂

    ===============================================

    // சிங்கக்குட்டி said…
    எந்த இடம் கிரி? //

    லிட்டில் இந்தியா ரெக்ஸ் சினிமாஸ்

    //அடுத்த மாதம் வேலை விசையமாக இரண்டு நாள் சிங்கை வருகிறேன்? உங்களை சந்திக்க முடியுமா?//

    ஹலோ! என்ன இப்படி கேட்டுட்டு இருக்கீங்க..வாங்க சந்திக்கலாம் என்று சொன்னால் வரப்போறேன். கண்டிப்பா சந்திக்கலாம்.

    என்னுடைய ஃப்ரோபைலில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிடுங்க.

    சிங்கை உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙂

  14. giri,
    Thalaivar roda babaji anupavangal vijay tv la pathu irupeenga.. mudincha yenakaga oru pathiva podunga.. unga style la athai kekanum pola iruku

    thanks,
    Arun

  15. //படம் நல்லா இருக்கு….பார்க்காதவங்க பாருங்க.//

    இன்னும் திருட்டு வி.சி.டி வரலை கிரி

  16. //arun said…
    giri,
    Thalaivar roda babaji anupavangal vijay tv la pathu irupeenga.. mudincha yenakaga oru pathiva podunga.. unga style la athai kekanum pola இருக்கு//

    அருண் இன்னும் சிங்கையில் ஒளிபரப்பவில்லை, அடுத்த வாரம் தான் வருகிறது, இங்கே ஒரு வாரம் தாமதமாகத்தான் வரும்.

    அதிலேயே விரிவாக கூறி இருப்பார்கள் அதில் நான் புதிதாக கூற என்ன இருக்கிறது அருண் 🙂

    நீங்கள் இவ்வாறு கேட்டது எனக்கு மகிழ்ச்சி

    ====================================================

    // நசரேயன் said…
    //படம் நல்லா இருக்கு….பார்க்காதவங்க பாருங்க.//

    இன்னும் திருட்டு வி.சி.டி வரலை கிரி//

    :-))

    ஏன் இணையத்துல எல்லாம் பார்க்க மாட்டீங்களா! ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்கறீங்க 😉

    ==============================================================

    // எம்.எம்.அப்துல்லா said…
    கிரி அண்ணே கடந்த சில ஆண்டுகளில் தமிழில் வந்த படங்களில் டெக்னிக்கலாய் ஈரம்தான் முதல் இடம்.//

    அப்துல்லா! உங்க நண்பர் படம் என்று ரொம்ப பாராட்டி விட்டீர்களோ! 🙂

  17. கிரி அண்ணே கடந்த சில ஆண்டுகளில் தமிழில் வந்த படங்களில் டெக்னிக்கலாய் ஈரம்தான் முதல் இடம்.

  18. கிரி…

    "ஈரம்" விமர்சனம் நல்லா எழுதி இருக்கீங்க… இன்னும் இங்க ரிலீஸ் ஆகல… ஆனதும் பார்க்கிறேன்…

    "உன்னை போல் ஒருவன்" விமர்சனம்னு தலைப்புல இருக்கு…. எப்போ எழுத போறீங்க…!!?? ஹீ…ஹீ…ஹீ…. (நான் பார்த்து விட்டேன்… படம் ரொம்ப ஸ்லோ… சுமார்….).

  19. "அதிலேயே விரிவாக கூறி இருப்பார்கள் அதில் நான் புதிதாக கூற என்ன இருக்கிறது"

    Yenna giri ippadi sollitteenga yellarum pesalam aana silar pesina than namma manasuku pudikum antha mathiri thann unga yezhuthu yenaaku

    BTW, vino (envazhi) site la ful videos summ iruku.. neenga venum na athulayumm udane pathukalam

    Thanks,
    Arun

  20. நன்றி கிரி,

    //சிங்கை உங்களை அன்புடன் வரவேற்கிறது// :-))

    அடுத்த மாதம் சந்திப்போம், கட்டாயம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பிவிடுகிறேன்.

  21. // R.Gopi said…
    "ஈரம்" விமர்சனம் நல்லா எழுதி இருக்கீங்க… இன்னும் இங்க ரிலீஸ் ஆகல… ஆனதும் பார்க்கிறேன்.//

    கண்டிப்பா பாருங்க 🙂

    //"உன்னை போல் ஒருவன்" விமர்சனம்னு தலைப்புல இருக்கு…. எப்போ எழுத போறீங்க…!!?? ஹீ…ஹீ…ஹீ…. (நான் பார்த்து விட்டேன்… படம் ரொம்ப ஸ்லோ… சுமார்….).//

    இனி படத்தை பார்த்தால் நம் கண்ணோட்டமே மாறி இருக்கும்..அந்த அளவிற்கு அந்த படத்தை நொக்கி எடுத்து விட்டார்கள்… இவர்கள் கூறியது எல்லாவற்றையும் படித்து விட்டு இனி படத்தை ரசிக்கவே முடியாது… நல்லவேளை நான் முன்னாடியே பார்த்து விட்டேன் 😉

    =======================================================

    // சிங்கக்குட்டி said…
    அடுத்த மாதம் சந்திப்போம், கட்டாயம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பிவிடுகிறேன்//

    ஓகே 🙂

    ========================================================

    // arun said…
    "அதிலேயே விரிவாக கூறி இருப்பார்கள் அதில் நான் புதிதாக கூற என்ன இருக்கிறது"

    Yenna giri ippadi sollitteenga yellarum pesalam aana silar pesina than namma manasuku pudikum antha mathiri thann unga yezhuthu yenaaku//

    நன்றி அருண்.. எனக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை? 🙂

    //BTW, vino (envazhi) site la ful videos summ iruku.. neenga venum na athulayumm udane pathukalam//

    பார்த்து விட்டேன் 🙂

  22. "எனக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை?"

    Oru kalakkal aana writer ku yelutha kathu kodukanuma:).. Unga writeup pudikum nu ketten avalavu thann Giri.. mathabadi naan yethuvum force pannuren nu ninakatheenga

    Thanks,
    Arun

  23. பாடல்கள் மிக அருமை. 2 முறையாவது கேளுங்கள். cable sankar also appreciated songs. விமர்சனம் நன்று

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!