விகடன் வலையோசையில் giriblog

8
விகடன் வலையோசையில் giriblog

விகடனின் வலையோசையில் கடந்த வாரம் எனது வலை தளம் வந்துள்ளது. விகடனுக்கு நன்றி உடன் கொங்குப் பகுதி பொறுப்பில் உள்ள நிருபர் சஞ்சீவிக்கும்.

அங்கீகாரம் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியைதரும் ஒன்று அது பழமை வாய்ந்த விகடனிலிருந்து எனும் போது கூடுதல் மகிழ்ச்சி தான். Image Credit

இதில் நான் எழுதிய இலந்த வடை சாப்பிட்டு இருக்கீங்களா? :-), அன்னையர் தினம், தந்தையர் தினம், facebook “முகநூல்” என்றால் Lady Gaga “பெண் காகா” வா?, பயணக்குறிப்புகள் பகுதிகளிலிருந்து எடுத்துப் போட்டு இருக்கிறார்கள்.

இதுல பயணக்குறிப்புகள் பகுதியில் நண்பன் திருமண ஆல்பத்தைப் பார்த்து எழுதியவற்றை குறிப்பிட்டு இருந்தார்கள்.

இதை நான் அவனிடம் தொலைபேசியில் அழைத்துக் கூறியதும் சிரிச்சுட்டே இருக்கான் 🙂 .

டேய்! இதை யாராவது உன் ஆல்பம் பார்த்த சொந்தக்காரங்க படித்தால் இந்த வரியை எங்கேயோ படித்த மாதிரி இருக்கே என்று யோசிப்பார்கள் என்று கூறினேன்.

கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறான் 🙂 என்ன கொடுமை சார்.

வலையோசை பார்த்து முதலில் கூறிய நண்பர் வைகைக்கும், வாழ்த்துகள் கூறிய மற்ற அனைவருக்கும் நன்றி.

ன்ட்ராய்டு Ginger bread

ன்ட்ராய்டு Ginger bread வெளியீட்டில் தமிழ் நன்றாகத் தெரிகிறது.

ரொம்ப நாளாக ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு தலைவலியாக இருந்து வந்த வசதியைக் கூகுள் ஆடி அசைந்து தற்போது தான் கொடுத்து இருக்கிறது. என்ஜாய் மாடி 🙂

The Scream என்ற இந்தப்படம் தான் உலகிலேயே அதிக விலை ($120 M) கொடுத்து வாங்கப்பட்ட படமாகும்.

இதுல அப்படி என்னங்க இருக்கு? இங்க ஒருத்தரு இதற்கு இவ்வளோ கொடுக்கறாரே!

இந்த அநியாயத்தை யாரும் கேட்க மாட்டீங்களா!

விலையைக்கேட்டதும் இந்தப்படத்தில் இருக்கிற மாதிரியே நானும் அதிர்ச்சி ஆகிட்டேன்.

இந்தப்படம் வரைந்தவர் Miss Universe, Miss World எல்லாம் அதிகம் பார்ப்பாரோ! 😉 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. விகடன் வலையோசை அங்கீகாரத்திற்கு வாழ்த்துகள் அண்ணே… தொடர்ந்து கலக்குங்க 🙂

  2. உங்களின் நிதி நிலைமை புதிய பதிவினை படிக்க ஆர்வமாய் உள்ளேன்…. உங்க ஆட்டத்துல மாயாவதி அம்மையாரையும் சேத்துக்குங்க… பகிர்வுக்கு நன்றி!!!

  3. Congrats கிரி!! I’m having Gingerbread (having Motorola’s Motoblurr on top of it) for quite some time and still I couldn’t see tamil fonts. உங்களுக்கு எப்படி தமிழ் தெரிகிறது என்று சொன்னால் சந்தோஷமடைவேன் :))

    //ஆன்ட்ராய்டு Ginger bread வெளியீட்டில் தமிழ் நன்றாகத் தெரிகிறது. ரொம்ப நாளாக ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு தலைவலியாக இருந்து வந்த வசதியை கூகுள் ஆடி அசைந்து தற்போது தான் கொடுத்து இருக்கிறது//

  4. நல்லா இருக்கு கிரி தல

    வாழ்த்துகள் விகடன் ல வந்ததுக்கு

    – அருண்

  5. வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி

    @அழகேசன் நான் iPhone தான் பயன்படுத்துகிறேன். இதை என்னுடைய நண்பனின் மொபைலில் பார்த்தேன். தற்போது அவன் இல்லை பிறகு விவரமாக கேட்டுக் கூறுகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!