பங்களாதேஷ் அரசியல் உணர்த்துவது என்ன?

4
பங்களாதேஷ் அரசியல்

டஒதுக்கீடு பிரச்சனையில் ஆரம்பித்த போராட்டம், பிரதமர் ஷேக் ஹசீனாவை நீக்கியும் புது புது கோரிக்கைகளுடன் பங்களாதேஷ் அரசியல் தொடர்ந்து கொண்டுள்ளது. Image Credit

இக்கட்டுரை விரிவாக உள்ளதால், நேரம் கிடைக்கும் போது படிக்கவும்.

என்ன பிரச்சனை?

சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று போராட்டம் நடைபெற்றதால் 2018 ம் ஆண்டு இடஒதுக்கீடு நீக்கப்பட்டது.

அவாமி லீக் (ஷேக் ஹசீனா கட்சி) தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 30% இட ஒதுக்கீட்டை அறிவித்தது. இதற்குத்தான் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டனர், போராட்டம் வன்முறையாக மாறியது.

பின்னர் உச்சநீதிமன்றம் 30% லிருந்து 5% மாற்றிய பிறகு போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது ஆனால், இடைவெளிக்குப் பிறகு ஷேக் ஹசீனா பதவி விலகப் போராட்டம் துவங்கியது.

மாறிய போராட்டம்

ஒரே நாளில் 90+ நபர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். பின்னர் இராணுவம் 45 நிமிடங்கள் கால அவகாசம் கொடுத்து ஷேக் ஹசீனாவை வெளியேறச்சொன்னது.

இதன் பிறகு ஷேக் ஹசீனா அவரது தங்கையுடன் இந்தியாவில் தற்காலிகமாகத் தஞ்சம் புகுந்தார்.

இட ஒதுக்கீட்டுக்காக ஆரம்பித்த போராட்டம், பின்னர் இந்துக்கள் மீதான வன்முறையாக மாற்றம் பெற்றது.

இந்துக்களைக் கொலை செய்வது, பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குவது, கடத்துவது, வீட்டை எரிப்பது, பொருட்களைத் திருடுவது, சூறையாடுவது என்று மாறியது.

இதுவரையான தகவல்களைப் பலரும் செய்திகளில் அறிந்து இருப்பீர்கள் ஆனால், இதோடு சில தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்.

சர்வதேச அரசியல்

பங்களாதேஷ் போராட்டம் என்பது வெறும் மாணவர் போராட்டம் மட்டுமே அல்ல, அதில் ஏராளமான சர்வதேச அரசியலும் உள்ளது.

கலவரம், வன்முறையின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுபவர்கள் நால்வர்.

அமெரிக்கா CIA, சீனா, பாகிஸ்தான் ISI மற்றும் Deep State.

அமெரிக்காவுக்கு இப்பகுதியில் சீனாவுக்கு செக் வைக்க, சீனாவின் பலத்தைக் கட்டுப்படுத்த இங்கே Military Base தேவை. அது பங்களாதேஷில் தான் முடியும்.

சீனாவுக்கு இங்குள்ள துறைமுகம் தேவை. காரணம், இந்தியாவை முத்து மாலை வடிவமைப்பில் கட்டுப்பாட்டில் எடுக்க முயல்கிறது.

எனவே, இலங்கை அம்பன் தோட்டா துறைமுகம், பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு என்று அனைத்துப் பக்கமும் வளைத்துக் கப்பல் வழியைக் கட்டுப்பாட்டில் எடுக்க முயல்கிறது.

பாகிஸ்தானுக்கு பங்களாதேஷ் மீது வெறுப்பு. காரணம், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வந்தது. அதைவிட பொருளாதாரத்தில் பாகிஸ்தானை விட சிறப்பாக இருப்பது.

தாங்கள் சொல்வதைக் கேட்கும் ஆட்சியரைத் தான் Deep State ஆதரிக்கும் என்று முன்பு கூறியுள்ளேன்.

ஷேக் ஹசீனா அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பதால், தங்களுடைய NGO க்கள் மற்றும் பணத்துக்கு விலை போனவர்களை வைத்து பிரச்சனையை ஏற்படுத்தும்.

ஷேக் ஹசீனா

15 வருடங்களாக ஆட்சியில் இருந்தவர். கடந்த பொதுத்தேர்தலில் சர்ச்சைக்குரிய முறையில் வெற்றி பெற்றார்.

ஷேக் ஹசீனா நல்லவரா கெட்டவரா என்பது பற்றி நமக்கு அவசியமில்லை. தேவையானதை மட்டும் பார்ப்போம்.

ஷேக் ஹசீனா கிட்டத்தட்ட வலது சாரி சிந்தனையில் நாட்டின் வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டு, GDP யை சிறப்பான உயரத்துக்கு கொண்டு சென்றார்.

ராகுல் காந்தி உட்படக் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கூட இந்தியாவை விட பங்களாதேஷ் பொருளாதாரம் (GDP / Per Capita) சிறப்பாக உள்ளது என்று (அரசியலுக்காக) பாராட்டினார்கள்.

பங்களாதேஷ் முஸ்லீம் அடிப்படை வாதிகளுக்கு ஷேக் ஹசீனாவை பிடிக்காது, தொடர்ந்து குற்றச்சாட்டு வைப்பார்கள், எதிராகச் செயல்படுவார்கள்.

சில மாதங்களுக்கு முன் சாலையில் நமாஸ் செய்து பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்திய அடிப்படைவாத முஸ்லிம்களை காவல்துறை அப்புறப்படுத்தியது.

தற்போது இந்துக்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதால், ஷேக் ஹசீனா காலத்தில் நடக்கவில்லையென்பதல்ல. கட்டாய மதமாற்றம் உட்படப் பலவும் நடந்தது.

செக்குலர் இந்து

இந்துக்களுக்கு எவ்வளவு பட்டாலும், செக்குலர் என்பது பெரும்பான்மை இந்துக்கள் இருக்கும் வரையே என்பதை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

பங்களாதேஷ் போராட்டம் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடந்த போது அங்குள்ள முஸ்லிம்களுடன் இந்துக்களும் இணைந்து போராட்டம் நடத்தினார்கள்.

Aaariya Bhowmik

Aaariya Bhowmik என்ற பங்களாதேஷ் இந்துப்பெண், ‘நான் ஒரு இந்து, பங்களாதேஷில் உள்ள அனைத்து மதத்தினரும் என்னைப் பாதுகாப்பார்கள்.

நாங்கள் பங்களாதேஷை உருவாக்கினோம். ஒற்றுமையா இருப்போம்‘ என்று கருத்திட்டார்.

கருத்து வெளியிட்ட அடுத்த நாள், ‘என்னைக் காப்பாற்றுங்கள், நான் ஒரு இந்து என்பதால், என்னைத் தாக்குகிறார்களா? நானும் போராட்டத்தில் பங்கு பெற்றேன்.

இது போன்ற தாக்குதல் நியாயமற்ற செயல்‘ என்று புலம்பித் தினமும் ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டு உள்ளார்.

மதம் பார்க்காமல் பலருக்கும் உணவளித்து வந்த ISKON கோவிலையும், பிரபலமான காளி கோவிலையும் சேதப்படுத்தி விட்டார்கள்.

பிரச்சனை பெரிதானதால், கோவிலுக்கு இராணுவம் பாதுகாப்பளித்து வருகிறது.

ராகுல் ஆனந்த்

ராகுல் ஆனந்த் என்ற இசையமைப்பாளர், ஷேக் ஹசீனாவை எதிர்த்துக் குரல் கொடுத்து, போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்த செக்குலர் இந்து.

இவரது வீட்டையும், இவர் பொக்கிஷமாகப் பாதுகாத்த 3000 இசைக்கருவிகளையும் எரித்துச் சாம்பலாக்கி விட்டனர்.

இதே போன்று கிரிக்கெட்டில் பங்களாதேஷுக்காக விளையாடிய இந்து வீரர் Liton Das வீட்டை எரித்து விட்டார்கள். இது போன்று கூற ஏராளமான தகவல்கள் உள்ளது.

பிரச்சனை என்று வந்தால், அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு மற்றவர்கள் என்றுமே காஃபிர் தான்.

இந்துக்களுக்கு எதிரான இந்திய அரசியல்

முஸ்லீம் அடிப்படைவாதிகள் நிரம்பிய ஒரு நாடு பங்களாதேஷ். இங்கே எப்போது வேண்டும் என்றாலும் இது போன்ற இந்துக்கள் மீதான கலவரத்துக்கு வாய்ப்புள்ளது.

எனவே, இங்குள்ள இந்துக்கள் இந்தியா அல்லது வேறு நாடுகளுக்கு இடம் பெயர்வதே நல்லது.

பாலஸ்தீன முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்த ஒருவர் கூடப் பங்களாதேஷ் இந்துக்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. தமிழக அரசியல்வாதிகள், ஊடகங்கள் உட்பட அனைவரும் இதைப் பற்றிப் பேச்சே இல்லை.

ஒரு தமிழகச் சேனல் கூட இதை விவாதிக்கவில்லை, விவாதிக்க மாட்டார்கள்.

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவை கொண்டாடுவதை விட, தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் Arshad பற்றிப் புகழ்ந்து கட்டுரை எழுதுபவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?!

பாலஸ்தீனர்களுக்காகக் குரல் கொடுத்த ராகுல் உட்பட்ட காங்கிரஸ் மற்றும் INDI கூட்டணி தலைவர்கள் ஒருவர் கூட இந்துக்களுக்காக குரல் கொடுக்கவில்லை.

ஆனால், ராகுல் உட்பட ஐந்து காங்கிரஸ் MP க்களுக்கு மாம்பழம் அனுப்பி மகிழ்ச்சியைப் பாகிஸ்தான் பகிர்ந்து கொள்கிறது.

அமெரிக்கா சீனா

அமெரிக்காவைச் சார்ந்த ஒருவர் தேர்தலுக்காக DEAL பேசியதாகவும், அதற்கு ஷேக் ஹசீனா ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

சீனா பயணம் சென்ற ஷேக் ஹசீனாவுக்கு அங்கே முக்கியத்துவம் கொடுக்கப்படாததோடு, அவர் எதிர்பார்த்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை.

இதனால், கடுப்பாகி தனது பயணத்தை ஒரு நாள் முன்னதாகவே முடித்துக்கொண்டு பங்களாதேஷ் திரும்பி வந்து இந்தியாக்கு துறைமுக வாய்ப்பைக் கொடுத்தார்.

இத்துறைமுக வாய்ப்பு இந்தியாக்கு சரக்கு போக்குவரத்துக்குப் பல்வேறு வகையில் மிகப்பெரிய உதவியாகவும் அமைந்தது.

தற்போது இக்கலவரம் நடந்து ஷேக் ஹசீனா துரத்தப்பட்டுள்ளார்.

சிறையிலிருந்த எதிர்க்கட்சித்தலைவர் Khaleda Zia விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு அமெரிக்க, சீன, பாகிஸ்தான் ஆதரவாளர். இந்து, இந்திய எதிர்ப்பாளர்.

மேற்கூறிய புள்ளிகளை இணைத்தால், இதன் பின்னணியில் உள்ள சர்வதேச அரசியல் புரியும்.

இந்தியா

மேலே உள்ள படத்தைப் பார்த்தால், இந்தியாக்கு அருகே உள்ள நாடுகள் பெரும்பாலானவை அமெரிக்க மற்றும் சீன கட்டுப்பாட்டில் இருப்பது புரியும்.

இலங்கை என்ற சிறு நாடு இந்திய மீனவர்களுக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தும், இந்தியா அமைதி காத்து நடவடிக்கை எடுப்பதன் காரணம் இதுவே.

இந்தியாவைச் சுற்றியுள்ள பகுதியில் ஆபத்து நிறைந்த நாடுகளாகவே உள்ளன. ஒரு பக்கம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மறு பக்கம் பங்களாதேஷ்.

இன்னொரு பக்கம் சீனா மற்றும் சீன ஆதரவில் உள்ள நேபாளம், மாலத்தீவு.

இது போதாது என்று மியான்மரிலிருந்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள். இலங்கை எப்போது வேண்டும் என்றாலும் சீனா, அமெரிக்கா பக்கம் சாயலாம்.

அவசரப்பட முடியாது

பலரும் நினைப்பது போல just like that எதையும் செய்யக் கூடிய நிலையில் நம் நிலப்பரப்பு, எல்லைகள் இல்லை. அனைத்துப்பக்கமும் எதிரிகள் சூழ்ந்துள்ளார்கள்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய முடியாது. எனவே, நம் அவசரத்துக்கு மத்திய அரசால் நடவடிக்கை எடுக்க முடியாது.

பல்வேறு சூழ்நிலைகளையும் நீண்ட கால நோக்கில் கருத்தில் கொண்டே ஒரு முடிவை எடுக்க முடியும். உணர்ச்சிவசப்பட்டு எடுத்தால் எதிர்காலம் மோசமாக முடியும்.

Muhammad Yunus

போராட்டம் நடத்திய மாணவர்கள் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் Muhammad Yunus தான் இடைக்கால அரசை நிர்வகிக்க வேண்டும் என்று கூறினர்.

மாணவர்கள் அழைத்ததால், இவரை அப்துல் கலாம் ரேஞ்சுக்கு பலர் நினைத்து இருக்கலாம் ஆனால், அதற்கு தகுதியானவர் அல்ல.

கிராம வங்கி துவங்கி அதில் சிறு கடன் வழங்கியதில் அதிக வட்டி வசூலித்தது தொடர்பாக Muhammad Yunus மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது.

இவருக்கு நோபல் பரிசு கிடைத்ததற்குக் காரணமே, அப்போதைய ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர். தொடர்பிலிருந்தவர் ஜார்ஜ் சோரோஸ்.

அமெரிக்கா எப்போதுமே தனக்கு அடங்கி இருப்பவரை, தான் சொல்வதைக் கேட்பவரையே ஒரு நாட்டின் தலைவராக விரும்பும்.

நான் BBC பார்த்துத் தான் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இது போலத் தொடர்ந்தால் இங்குள்ள செய்தி நிறுவனங்களை shutdown செய்து விடுவேன்‘ என்கிறார் Muhammad Yunus.

ஷேக் ஹசீனாவை சர்வாதிகாரி என்றார்கள், இனிமேல் தான் ‘சர்வாதிகாரம்‘ என்பதன் முழு அர்த்தத்தை வங்கதேச மக்கள் காணப்போகிறார்கள்.

விசா ரத்து

ஷேக் ஹசீனாவை ஒரு அமெரிக்க ஏஜென்ட் அணுகி பேரம் பேசியதையும் அதை அவர் புறக்கணித்ததையும் கூறி இருந்தேன்.

இறுதியில் என்ன நடந்துள்ளது பார்த்தீர்களா?

'செயின்ட் மார்ட்டின் தீவையும், வங்காள விரிகுடா பகுதியையும் அமெரிக்காவிற்கு கொடுத்து இருந்தால் பதவி இழந்து இருக்க மாட்டேன்' 

என்று ஷேக் ஹசீனா குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறியதும், ஷேக் ஹசீனா விசாவை அமெரிக்கா ரத்து செய்ததில் இருந்தே புரிந்து கொள்ளலாம், பின்னணியில் யாரென்று.

CIA / Deep State

இந்தியாவிலும் இதே போன்று விவசாயப் போராட்டம், CAA போராட்டம், மணிப்பூர் கலவரம் என்று அனைத்தையும் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க முற்பட்டார்கள்.

பங்களாதேஷில் சாதித்து விட்டார்கள் ஆனால், இந்தியாவில் முடியவில்லை. இதில் அமெரிக்கா CIA மட்டுமல்ல, உடன் Deep State ம் உள்ளது.

ஜார்ஜ் சோரோஸ் NGO க்கள் உட்படத் தேசத்துக்கு எதிரான செயல்களைச் செய்து வந்த NGO க்கள் ஒவ்வொன்றின் உரிமத்தையும் இந்தியா ரத்து செய்து வருகிறது.

Deep State இதோடு நிறுத்த மாட்டார்கள், இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயல்களை வெவ்வேறு வகையில் செயல்படுத்துவார்கள்.

தொடர்ச்சியாக கவனித்தால், இந்தியாக்கு சாதமாக, தேவையானது எது நடந்தாலும், அதைத் திசை திருப்பும் சம்பவம் ஏதாவது ஒன்று நடக்கும். 

இங்குள்ள பலருக்கு இந்தியாவின் பாதுகாப்பை, பொருளாதாரத்தை மோடி அரசு எவ்வளவு போராட்டங்களுக்கிடையே காப்பாற்றி வருகிறது என்பது தெரியவில்லை.

ராகுல்

மேற்கூறிய விமர்சனத்தை முன் வைத்தது வங்கதேச பத்திரிகையாளர்.

அமெரிக்கா, Deep State சொல்வதைக் கேட்கும், இந்தியாவை வெளிநாட்டில் அவமானப்படுத்தும் ராகுல் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று புரிகிறதா?

பங்களாதேஷில் இந்துக்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்காத ராகுல், அமெரிக்க பிராடு நிறுவனமான Hindenburg குற்றச்சாட்டுக்காக SEBI க்கு காணொளியில் கண்டனம் தெரிவிக்கிறார்.

ஜார்ஜ் சோரோஸ் கட்டளைப்படி இந்திய பொருளாதாரத்தை அழிக்கச் செயல்படும் Hindenburg நிறுவனத்துக்கு ஆதரவாக ராகுல் தன் கடமையை ஆற்றுகிறார்.

ராகுலுக்கு நாட்டை, நாட்டின் பொருளாதாரத்தை பற்றி எந்த அக்கறையும் இல்லை. ஆட்சியைப் பிடிக்க வேண்டும், பிரதமர் ஆக வேண்டும். அவ்வளவே!

Rahul Gandhi is the most dangerous man, he is bitter, poisonous and destructive, his agenda is that if he can’t be the Prime Minister then he might as well destroy this nation.

Hindenburg’s report targeting our stock market that Rahul Gandhi was endorsing last night has turned out to be a damp squib.

He is trying everything to destabilize this nation its security and economy‘ என்று MP கங்கனா கூறியுள்ளார். இவர் கூறுவது 100% சரி.

இந்தியாவை அழிக்க நினைப்பவர்களுடன் உறவாடுவதை காணுகையில் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்று மனம் வெம்முகிறது.

Read : காங்கிரஸ் எதனால் ஆபத்தான கட்சி?

இந்தியாவின் பாதுகாப்பு

இந்தியாக்கு எதிரான இவ்வளவு வெளிநாட்டு, உள்நாட்டுப் பிரச்சனைகளையும், சர்வதேச அரசியலையும் தாண்டித்தான் மோடி ஆட்சி செய்து கொண்டுள்ளார்.

தற்போது மற்ற நாடுகளைப் போல இல்லாமல் இந்தியா பாதுகாப்பாக உள்ளது என்றால், காரணம் மோடி மட்டுமே!

எதிர்க்கட்சிகளுக்கு, இடது சாரிகளுக்கு நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை ஆனால், ஆட்சியை நாங்க பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்.

என்றாவது ஆட்சி மாற்றம் நடக்கும் அப்போது இந்தியாவின் பாதுகாப்பு, நிலைத்தன்மை, மரியாதை, செல்வாக்கு அனைத்துமே தொலைந்து விடும்.

இந்தியாக்கு வரும் காலம் கடினமான காலமே!

கொசுறு

இந்தியாக்கு பல்வேறு சர்வதேச நெருக்கடிகள், சூழ்ச்சிகள் உள்ளது என்றாலும், இதை விட மோசமான சூழ்நிலையில் மேற்கத்திய நாடுகளும், மத்தியக் கிழக்காசிய நாடுகளும் உள்ளன.

இதில் ஒரே வித்தியாசம், இந்தியாக்கு மற்ற நாடுகளால் நெருக்கடி ஆனால், மற்ற நாடுகளுக்கு அவர்களே வைத்துக்கொண்ட சூனியத்தால்.

ஒரு சில நபர்களின், நாடுகளின் பேராசை, அதிகாரப்பசி, அரசியல் காரணமாக உலகமே சிக்கலான தருணத்தில் உள்ளது.

இவற்றைப்பற்றி வரும் காலத்தில் Geo Politics ல் பார்ப்போம்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கடந்த சில நாட்களாக இந்தியாவிற்குள் முதன்முதலில் நுழைந்த போர்த்துகீசியர்களின் வரலாற்றை தெரிந்து கொண்டு வருகிறேன்.. மிகவும் சுவாரசியமாகவும் அதே சமயம் எவ்வளவு தெளிவாக 400 / 450 வருடங்களுக்கு முன்பே அவர்கள் இந்தியாவில் உள்ள ஆட்சியாளர்களை கையாண்டுள்ளார்கள் என்பதை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது..

    இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளும் போது மேற்கத்திய நாடுகளின் ஆட்சியாளர்களின் நுட்பமாக அரசியல் திறனை உணர்ந்து கொள்ள முடிகிறது.. அந்த காலக்கட்டங்களிலே இங்கு உள்ள ஆட்சியாளர்களை பிரித்தாலும் சூழ்ச்சியை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள்..

    இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், மியான்மர் இந்த நாடுகளை விட பங்காளதேஷ் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது.. குறிப்பாக ஷேக் ஹசீனாவின் ஆட்சி காலத்தில் மிக பெரிய வளர்ச்சியை வங்கதேசம் அடைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

    தற்போது நடைபெற்ற நிகழ்வுகள் உண்மையில் வருத்தத்தை அளிக்கிறது.. யாரோ சிலரின் சுயநலத்துக்காக எத்தனை அப்பாவி பொதுமக்கள் உயிர்களையும் / உடமைகளையும் இழந்தது மிக கொடுமையான ஒன்று…

  2. அருமையான அலசல் கிரி. உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. ஆண்டவன் தான் இந்த கேடு கெட்டவர்களிடம் இருந்து நமது இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்.

  3. @யாசின்

    “எவ்வளவு தெளிவாக 400 / 450 வருடங்களுக்கு முன்பே அவர்கள் இந்தியாவில் உள்ள ஆட்சியாளர்களை கையாண்டுள்ளார்கள் என்பதை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது”

    இவர்கள் மட்டுமா, பிரிட்டிஷ் எப்படி நம்மை அடிமைப்படுத்தியுள்ளார்கள்? சிறு அணியை வைத்துக்கொண்டு பிரித்து ஆளும் சூழ்ச்சி மூலம் இந்தியாவை 200 ஆண்டுகள் ஆண்டுள்ளனர்.

    “இங்கு உள்ள ஆட்சியாளர்களை பிரித்தாலும் சூழ்ச்சியை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.”

    இது தான் அவர்களின் சூழ்ச்சி ஆனால், கர்மா 200 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் நாட்டை தும்சம் செய்து கொண்டுள்ளது.

    இது பற்றிப் பின்னர் எழுதுகிறேன். அடுத்தவன் கிட்ட பிடுங்கி தன்னை வளர்ந்து கொண்ட பிரிடிஷ் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது.

    “ஷேக் ஹசீனாவின் ஆட்சி காலத்தில் மிக பெரிய வளர்ச்சியை வங்கதேசம் அடைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை”

    மிகச்சிறப்பாக வளர்ந்துள்ளது.

    இந்தப்பிரச்னையால் இந்தியாக்கு நடந்த ஒரே நன்மை அங்குள்ள டெக்ஸ்டைல் வியாபாரம் திருப்பூருக்கு வர அதிகம் வாய்ப்புகள் உள்ளது.

  4. @ஸ்ரீனிவாசன் நன்றி

    எப்படி இருக்கீங்க? 🙂

    நேற்றுத் தான் உங்களைப் பற்றி நினைத்துக்கொண்டு இருந்தேன்.

    இத்தளத்தில் கருத்துப் பகுதியில் சில மாற்றங்களைச் செய்யப்போவதால், சிலவற்றை மாற்ற வேண்டி இருந்தது.

    அப்போது பழைய கருத்துகள் பார்வையில் பட்டது, அதில் உங்கள் கருத்துகளும் இருந்தது.

    FB யில் பகிர்வதை நிறுத்திய பிறகு, உங்களையும் காணோம். சரி இதனால் நீங்கள் வருவதில்லையோ என்று நினைத்தேன்.

    இந்த வருடத்தில் தற்போது தான் வந்துள்ளீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!