ஹலால் அரசியல் தெரியுமா?

19
ஹலால்

ன்வார் யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் பெயர்களை எழுதி வைக்க வேண்டும் என்ற உத்தரவை உத்தரப்பிரதே அரசு பிறப்பித்தது. Image Credit

இது சர்ச்சையை ஏற்படுத்தியது தொடர்பாக ஹலால் முத்திரையும் பிரச்சனைக்குள்ளானது. அவை என்னவென்று பார்ப்போம்.

கன்வார் (காவடி) யாத்திரை

கங்கை நதியிலிருந்து புனித நீரை எடுத்து உள்ளூர் சிவன் கோவில்களிலோ அல்லது பிரபலமான சிவன் கோவில்களிலோ (காசி) வழங்குவார்கள்.

வடமாநிலங்களில் தோராயமாக 10 நாட்களுக்கு நூற்றுக்கணக்கான கிமீ காவடி போலச் சுமந்து செல்வார்கள். தமிழகத்தில் பழனி யாத்திரை போன்று நடைபெறும்.

இதுவே கன்வார் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

உத்தரப்பிரதேச அரசு உத்தரவு

கன்வார் யாத்திரை செல்லும் பாதைகளில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் பெயர்களை எழுதி வைக்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டது.

காரணம், பல உணவகங்கள் இந்து பெயரில் முஸ்லிம்கள் நடத்தும் உணவகங்கள், குறிப்பாக இந்துக்கடவுள்கள் பெயரிலேயே உள்ளது.

இந்த உணவகங்களில் உணவு சமைப்பதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் காணொளியாக வந்துள்ளன. எனவே, புனித யாத்திரை செல்பவர்கள் சரியான வழிமுறையிலான உணவை அறிந்து கொள்ள உதவும் எனக்கூறப்படுகிறது.

இதற்கு இடது சாரிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

முஸ்லிம்கள் ஹலால் உணவு சாப்பிடுகையில், இந்துக்கள் அவர்கள் வழிமுறை உணவைத் தேர்ந்தெடுப்பதில் என்ன தவறு?

வீட்டுல பண்டிகை என்று அலுவலகத்துக்குப் பலகாரம் எடுத்து வந்தால் கூட பல முஸ்லிம்கள் சாப்பிட மாட்டார்கள் காரணம், அது ஹராம். காஃபிர்கள் (முஸ்லிம் அல்லாதவர்கள்) கொடுக்கும் உணவைச் சாப்பிட மாட்டார்கள்.

ஆனால், இங்கே முஸ்லிம்கள் துப்பி கொடுத்த உணவை இந்துக்கள் சாப்பிட்டுக்கொண்டுள்ளார்கள்.

உச்சநீதிமன்றம்

மேற்குவங்க TMC MP Mahua Moitra தொடர்ந்த வழக்கில், எதிர்பார்த்தது போல உரிமையாளர் பெயரை வைக்கத் தேவையில்லை, உணவின் பெயரை வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது.

இதன் மூலம் போலிப்பெயரில் உள்ளவர்கள் அப்படியே தொடரலாம்.

ஹலால் சான்றிதழ் முத்திரையுடன் ஆனால், அம்முறைகளைப் பின்பற்றாமல் இந்து முறைப்படி ஒரு உணவகம் உணவு தயாரித்ததாகத் தெரிய வந்தால், உணவகத்தையே எரித்து விடுவார்கள்.

இதே தானே போலி பெயர்களில் உணவைத் தயாரிக்கும் முஸ்லிம்களுக்கும் பொருந்தும். இது தவறு என்று ஏன் உச்சநீதிமன்றத்துக்குத் தெரியவில்லை?

போலிப்பெயர்களுடன் (இந்து பெயரில் வந்து) பெண்களை ஏமாற்றினால் தண்டனை என்று பாராளுமன்றத்தில் திருத்தப்பட்ட சட்டத்தில் வந்துள்ளதால் இது தப்பித்தது.

இந்துக்கள் பெரும்பான்மை நாட்டில் அவமானத்துடனே தினமும் நாட்களைக் கடத்த வேண்டியதாக உள்ளது. அதற்கு பெரும்பங்கு காரணமும் இந்துக்களே.

ஹலால் என்றால் என்ன?

இஸ்லாத்தில் அனுமதிக்கக்கூடிய, அனுமதிக்கப்பட்ட செயல்கள் அல்லது சட்டப்பூர்வமானவற்றுக்கான அரபு சொல் ‘ஹலால்’ ஆகும்.

விலங்குகளை அறுப்பதை / வெட்டுவதை இஸ்லாமியக் கொள்கைகளுடன் கொல்வதை உள்ளடக்குகிறது.

ஹலால் உணவில் பன்றி இறைச்சி அல்லது மதுவின் தடயம் இருக்கக் கூடாது மற்றும் ஹராம் (தடைசெய்யப்பட்ட) பொருட்களைக் கலக்கக் கூடாது.

ஒரு முஸ்லீமால் மட்டுமே விலங்குகள் வெட்டப்பட வேண்டும், ஆசீர்வாதம் கூறிய பிறகு, விலங்குகளைக் கையால் வெட்ட வேண்டும், இயந்திரத்தால் அல்ல.

கொல்லப்பட்டவுடன், இரத்தம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும்.

இவ்வாறான இஸ்லாம் வழிமுறைகளைப் பின்பற்றி உணவு தயாரிப்பவர்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதையொட்டியே உணவகங்களில் வைத்திருக்கும் ஹலால் முத்திரை.

துப்புவது

மேற்கூறியவற்றோடு உணவில் எச்சில் துப்புவது ஹலால் செயல்முறையின் ஒரு பகுதி என்ற விமர்சனமும் உள்ளது.

இதை ஒவ்வொருவரும் எப்படிச் செய்கிறார்கள் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட குணத்தை, வழிமுறைகளைப் பொறுத்தது.

எதனால் இக்கருத்து சர்ச்சையானது?

ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள் உணவு தயாரிப்பதில் மோசமாகவே நடந்து கொள்கின்றனர். இது குறித்த பல காணொளிகள் இணையத்தில் உலவி வருகிறது.

  • காய்கறியை வாயில் வைத்து எச்சில் செய்து பின்னர் Pack செய்வது.
  • தெருவோரக் காய்கறியில் சீறுநீர் கழித்து அதை விற்பது.
  • எச்சிலைத் துப்பி ஃபேசியல் செய்வது (ஃபேசியல் செய்யும் போது கண்கள் மூடி இருப்பதால்).
  • ரொட்டியில் எச்சையை துப்பி உருட்டுவது.
  • அரிசியைக் கழிவறை நீரில் கழுவுவது.
  • துணி தேய்க்கும் (Ironing) போது உடையில் எச்சிலை (தண்ணீருடன்) துப்பித் தேய்ப்பது.

இது போன்று ஏராளமான மற்றும் கூறவே முடியாத அளவுக்கு அருவருப்பான செயல்கள் நடைபெறுகிறது.

வடமாநிலங்களில் இந்து முஸ்லீம் பிரச்சனை அதிகளவில் இருப்பதால். உணவகங்களில் புனித யாத்திரை பக்தர்களுக்கு மேற்கூறிய செயல்கள் நடைபெறலாம் என்ற எண்ணத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவால் இப்பிரச்சனை இருக்காது என்பதற்கு உத்தரவாதமில்லை ஆனால், வாய்ப்புகள் குறைவு என்பதாக இருக்கலாம்.

ஹலால் அரசியல்

இந்தியாவில் முன்பு இறைச்சிக்கு மட்டுமே ஹலால் முறை இருந்தது ஆனால், தற்போது சைவ உணவுப்பொருட்களுக்கும் கூட ஹலால் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. சைவத்தில் என்ன ஹலால்? இது ஏன் முன்பு இல்லை?

காரணம், “Halal Certified” வாங்க வேண்டும் என்றால், கட்டணம் செலுத்த வேண்டும்.

சிறு கற்பனை செய்து பாருங்கள். இந்தியாவில் எவ்வளவு சைவ பொருட்கள் விற்பனையாகிறது, எவ்வளவு ஆயிரம் டன் பொருட்கள் ஏற்றுமதியாகிறது.

இவ்வகை சான்றிதழுக்குக் கொடுக்கப்படும் கட்டணம், பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். எதுவுமே செய்யாமல், இப்பணம் இவர்களுக்குச் செல்கிறது.

இவ்வாறு பெறப்படும் தொகை இஸ்லாம் பரப்புரை, மதமாற்றம் உட்படப் பல்வேறு செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உண்டு.

இதனால், சில்லறை பொருட்களுக்கு ஹலால் முத்திரை வழங்குவதற்கு யோகி தடை விதிக்கப்போவதாகக் கூறப்பட்டது, நடந்ததா என்ற செய்தி காணவில்லை.

இது சைவம் என்ற “Green Symbol” இருப்பதில் ஒரு நியாயமுள்ளது. ஹலால் முத்திரை ஒரு சைவ பொருளின் பாக்கெட்டில் இருப்பதில் என்ன நியாயமுள்ளது?!

எங்கும் ஹலால்

தற்போது கேரளாவில் Halal Apartment விளம்பரம் ஒன்று வந்து பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றாலும், ஹலால் உணவையே இந்துக்கள் சாப்பிட வேண்டியதாக உள்ளது.

காரணம், முஸ்லிம்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை இழக்க விரும்பாத உணவகங்கள் ஹலால் உணவையே அனைத்து இடங்களிலும் கொடுக்கிறார்கள்.

முஸ்லிம்கள் ஹலால் இல்லையென்றால் சாப்பிட மாட்டார்கள் ஆனால், இந்துக்களுக்கு நேரடியாகத் துப்பி கொடுத்தாலும் எதிர்ப்பு இல்லாமல் சாப்பிடுவார்கள் என்பதால், ஹலால் எங்கும் பரவிவிட்டது.

பெரும்பான்மை இந்துக்கள் உள்ள நாட்டில் ஹலால் மறைமுகமாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

“Halal Certified” இல்லாத அசைவ உணவகத்தையே தற்போது காண முடியாது.

வலிமையான முஸ்லிம்கள்

முஸ்லிம்கள் எவ்வளவு வலிமையானவர்கள், தங்கள் கருத்தை, எண்ணத்தை எப்படி திணிப்பார்கள் என்பதற்கு கனடா நாட்டின் KFC சிறந்த எடுத்துக்காட்டு.

கனடாவில் 5% முஸ்லிம்களே உள்ளனர்.

ஆனால், அவர்களின் எதிர்ப்பையடுத்து KFC உணவகத்தில் பன்றி இறைச்சியை நிறுத்தி விட்டதாக, கனடா KFC அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

இதையடுத்து மற்றவர்கள் #BoycottKFC என்று ட்ரெண்ட் செய்தனர்.

5% மக்களுக்காக 95% மக்கள் தங்கள் உணவு சுதந்திரத்தை இழக்கிறார்கள். இந்தியாவில் 15% – 20% முஸ்லிம்கள், 80% மற்ற மதத்தினர் மீது ஹலால் முறையைத் திணிக்கிறார்கள்.

இதனாலே கூறினேன் முஸ்லிம்கள் இவ்விஷயங்களில் வலிமையானவர்கள் என்று .

15% - 20% முஸ்லிம்களால் 80% மற்ற மதத்தினர் மீது ஹலாலை திணிக்க முடிகிற போது, 30% - 40% வந்தால் ஷரியா சட்டம் தான் வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பது பெரிய விஷயமில்லை.

இது சாத்தியமில்லை என்று எண்ணாதீர்கள். ஏற்கனவே கேரளாவில் ஷரியா சட்ட கிராமம் ஒன்று வந்து விட்டது. மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு ஷரியா சட்ட தண்டனை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

முஸ்லிம்கள் அதிகமுள்ள கடையநல்லூர் நகர்மன்றத்தில் பிரதமர் மோடி படம் வைக்கக் கூடாது என்று தீர்மானம் போடுகிறார்கள்.

'மதம் எனப் பிரிந்தது போதும்' என்று மதச்சார்பின்மை இந்துக்கள் பாடிக்கொண்டு இருக்க, முஸ்லிம்கள் அவர்கள் ஷரியா வழக்கங்களை ஒவ்வொன்றாக கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

Sonu Sood

கன்வார் யாத்திரை பெயர் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெயருக்குப் பதிலாக ‘HUMANITY’ என்று வைக்க வேண்டும் என்றார் நடிகர் Sonu Sood.

அதற்கு நடிகையும், MP யுமான கங்கனா ‘ஏற்றுக்கொள்கிறேன். Halal என்பதற்குப் பதிலாக HUMANITY என்று மாற்றி விடலாம்‘ என்று கூறியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு அவர்கள் விருப்ப உணவை உண்பதற்கு, கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதற்கு உரிமை இருக்கும் போது, இந்துக்களுக்கு ஏன் இருக்கக் கூடாது?

இந்துக்கள் என்றால் ‘காஃபிர்கள்’ என்று கூறப்படும் போது அவர்களின் கடவுள் பெயர் வைப்பது மட்டும் சரியா? அதை வைப்பது ஹராம் இல்லையா?

முஸ்லீம் வழக்கங்களில் தயாரிக்கப்படும் உணவைச் சாப்பிட ஒரு இந்து ஏன் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்?

இதற்கேன் எதிர்ப்பு?!

கொசுறு

இனி வரும் காலங்களில் பல முக்கியக் கட்டுரைகளை எழுத நினைத்துள்ளேன்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

19 COMMENTS

  1. படிக்கப் படிக்க அதிர்ச்சியாக இருக்கிறது எப்படியெல்லாம் நாம் தினமும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

    ஆசிர்வாத் ஆட்டாவில் கூட ஹலால் முத்திரையைப் பார்த்தேன். கோதுமை மாவில் என்ன ஹலால் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

    இனி ஒரு 50 வருடம் கழித்து இந்தியாவில் இப்போது இருக்கிற சுதந்திரம் கூட இருக்காதோ என்று பயமாக இருக்கிறது.

    அவர்கள் நீங்கள் சொல்வது போல் 50 சதவீதம் வந்து விட்டால் இந்தியாவில் இப்போது மதம் என பிரிந்தது போதும் என பாடியவர்கள் எல்லாம் அப்போது அழ வேண்டிய நிலை வரும்.

    இன்று இவர்களுக்கு முட்டுக் கொடுத்தவர்கள் குடும்பம் எல்லாம் அன்று அழ வேண்டிய நிலைமை வரும் ஆனால் அன்று ஹிந்துக்களுக்காக பேச யாருமே இருக்க மாட்டார்கள் அப்படியே பேசினாலும் அவர்கள் இருக்க மாட்டார்கள்.

    இந்த ஆபத்தை உணராமல் வரும் காலத்தை நம் சந்ததியினர் பாதிக்கப்படும் ஆபத்தை உணராமல் மதச்சார்பின்மை என்று பேசிப் பேசியே நம் மக்களை ஏமாற்றிக் கொண்டு உள்ளார்கள் வருங்கால இந்தியா எப்படி இருக்குமோ கடவுள் தான் நம் மக்களை காப்பாற்ற வேண்டும்.

    அவர்களுக்கு ஆதரவு தருபவர்களும் விஷப்பாம்புக்கு பால் ஊற்றிக் கொண்டிருக்கிறோம் என்று அறியாமல் தங்கள் சுயலாபத்துக்காக தங்கள் அரசியலுக்காக அவர்களை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    பின் நாட்களில் இவர்கள் சந்ததியினரும் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் உணராமல் இருக்கிறார்களா அல்லது உணர்ந்தாலும் அப்போது நான் இருக்க மாட்டேன் என்ன நடந்தால் எனக்கு என்ன என்று இருக்கிறார்களா என தெரியவில்லை.

    இந்த விஷயத்தில் கிறிஸ்தவர்கள் பரவாயில்லை. அவர்கள் எப்போதுமே வன்முறையை கையில் எடுக்க மாட்டார்கள் அவர்கள் போராடுவதும் வன்முறையில் இருக்காது. அவர்கள் தங்களுக்கு தனி சட்டம் வேண்டும் என்றும் கூறமாட்டார்கள்.

    அவர்கள் பேசிப் பேசியே மதம் மாற்றுவார்கள் ஆனால் அவர்கள் எப்போதும் வன்முறையால் அவர்கள் மதத்தை வளர்க்க மாட்டார்கள் இந்த விஷயத்தில் எனக்கு இஸ்லாமியர்கள் விட கிறிஸ்தவர்கள் பரவாயில்லை என தோன்றுகிறது.

    கேரளாவில் தற்போது கிறிஸ்தவர்களே லவ் ஜிகாத்தால் கிறிஸ்தவ பெண்களை ஏமாற்றி இஸ்லாமியர்கள் திருமணம் செய்து
    ஏமாற்றுகிறார்கள் என வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் அந்த ஊர் பாதிரியார்களே பேச ஆரம்பித்து விட்டார்கள்.

    அங்கு இந்துக்களின் குடும்பப் பெண்களை பெருமளவு மதம் மாற்றி விட்டார்கள் அடுத்து கிறிஸ்தவ பெண்களை குறி வைத்து லவ் ஜிகாத் என்ற பெயரில் அவர்களை பரவலாக மதம் மாற்றிக் கொண்டு உள்ளார்கள் இதை எதிர்த்து அங்கு உள்ள கிறிஸ்தவர்களே இப்போது லவ் ஜிகாத் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்.

    நம் மக்களுக்கு இது புரிகிறதா இல்லையா என எனக்கு தெரியவில்லை கேரளாவில் நடக்கும் செய்தி எல்லாம் அவர்கள் பார்க்கிறார்களா இல்லையா.

    நம் தமிழ்நாட்டிலேயே கூட நீங்கள் சொல்வது போல் கடையநல்லூர் ஆம்பூர் போன்ற ஊர்களில் இந்துக்கள் இடம் வீடு வாங்க முடியாது இப்படி ஒரு நிலைமை அங்கு இருக்கிறது. அவர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில்.

    இதை பார்த்தும் கூட ஹிந்துக்களுக்கு ஏன் அவர்கள் பெரும்பான்மையானால் நாம் நிம்மதியாக வாழ முடியாது என புரியாமல் மதம் என பிரிந்தது போதும் என பாட்டு பாடிக்கொண்டு உள்ளார்கள் என எனக்கு புரியவில்லை. மிகப்பெரிய ஆபத்தில் ஹிந்துக்கள் இருக்கிறார்கள்.

    கலியுகம் ஆரம்பித்து 5100 சொச்ச வருஷம் தான் ஆகிறது அதற்கே இப்படி அதர்மம் தலை விரித்து ஆடுகிறது என்றால் மொத்தம் கலியுகம் 4 லட்சம் வருடம் என சொல்லப்படுகிறது

    இப்போது இவர்களின் ஆட்டம் இப்படி இருக்கிறது என்றால் இனி போக போக எப்படி எல்லாம் அதர்மம் நடக்குமோ எப்படி எல்லாம் நாம் வீழ்த்தப்படுவோமோ என எண்ணி மிகவும் பயமாகத்தான் இருக்கிறது.

    இந்த கலியுகத்தில் நாம் மீண்டும் பிறக்கவே கூடாது என்பதுதான் கடவுளிடம் நாம் கேட்கும் வரமாக இருக்க வேண்டும்.

  2. கிரி
    இஸ்லாமோபோபியா உங்களுக்கு அதிகரித்து இருக்கிறது. இது உங்களை எங்கே கொண்டு போய் நிறுத்துமோ?
    இறைவன் உங்களுக்கு நல்ல வழியைக் காட்ட வேண்டும் ‌.

    மதமாற்றம் சம்பந்தப்பட்ட கட்டுரையில் உங்களுக்கு பதிலளிக்க நினைத்தேன்.பிறகு எதற்கு வம்பு என்று விட்டு விட்டேன்.

    அதற்கும் சேர்த்து இங்கு பதில் சொல்கிறேன்.

    “பல உணவகங்கள் இந்து பெயரில் முஸ்லிம்கள் நடத்தும் உணவகங்கள், குறிப்பாக இந்துக்கடவுள்கள் பெயரிலேயே உள்ளது.”

    மோசடி யார் செய்தாலும் குற்றம் குற்றமே. இஸ்லாத்தில் ஏமாற்றுதலுக்கு இடமே இல்லை.கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    “முஸ்லிம்கள் ஹலால் உணவு சாப்பிடுகையில், இந்துக்கள் அவர்கள் வழிமுறை உணவைத் தேர்ந்தெடுப்பதில் என்ன தவறு?”

    தவறே இல்லை யார் வேண்டாம் என்றது?
    எல்லா முஸ்லிம் நாடுகளிலும் சைவ உணவகங்கள் தாராளமாக உள்ளன. எந்த தடையும் இல்லை.

    “வீட்டுல பண்டிகை என்று அலுவலகத்துக்குப் பலகாரம் எடுத்து வந்தால் கூட பல முஸ்லிம்கள் சாப்பிட மாட்டார்கள் காரணம், அது ஹராம். காஃபிர்கள் (முஸ்லிம் அல்லாதவர்கள்) கொடுக்கும் உணவைச் சாப்பிட மாட்டார்கள்.”

    இது அபாண்டமான குற்றச்சாட்டு.

    எல்லா சைவ உணவகங்களிலும் முஸ்லிம்கள் தான் அதிகமாக உண்கின்றனர். இஸ்லாத்தில் உண்ண வேண்டாம் என்றால் யாரும் சைவ உணவகங்கள் பக்கமே யாரும் போகமாட்டார்கள். பன்றி இறைச்சி சமைத்து விற்பனை செய்யும் கடைக்கு முஸ்லிம்கள் போவார்களா ? இல்லை.


    மேற்கூறியவற்றோடு உணவில் எச்சில் துப்புவது ஹலால் செயல்முறையின் ஒரு பகுதி என்ற விமர்சனமும் உள்ளது”

    ஏன் கிரி வாய் கூசாமல் இப்படி அபாண்டமாக குற்றம் சாட்டுகிறீர்கள்?

    சுத்தம் இஸ்லாமிய இறை நம்பிக்கையில் பாதி. புரிந்து கொள்ளவும்.

    “காய்கறியை வாயில் வைத்து எச்சில் செய்து பின்னர் Pack செய்வது.
    தெருவோரக் காய்கறியில் சீறுநீர் கழித்து அதை விற்பது.
    எச்சிலைத் துப்பி ஃபேசியல் செய்வது (ஃபேசியல் செய்யும் போது கண்கள் மூடி இருப்பதால்).
    ரொட்டியில் எச்சையை துப்பி உருட்டுவது.
    அரிசியைக் கழிவறை நீரில் கழுவுவது.
    துணி தேய்க்கும் (Ironing) போது உடையில் எச்சிலை (தண்ணீருடன்) துப்பித் தேய்ப்பது.”

    இப்படி அசுத்தமான முறையில் நடப்பவர்களுக்கு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    எங்கேயோ ஒரு கிறுக்கு அசுத்தமான முஸ்லிம் செய்ததற்கு எல்லா முஸ்லிம்களையும் குற்றம் சாட்டுகிறீர்கள். பரவாயில்லை. இறைவன் எப்போதும் உண்மையின் பக்கம் தான்.

    “இவ்வாறு பெறப்படும் தொகை இஸ்லாம் பரப்புரை, மதமாற்றம் உட்படப் பல்வேறு செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உண்டு”

    யார் குற்றம் சாட்டுவது நீங்களா?

    இஸ்லாத்தில் வட்டி ஹராம் என்பதால் (தூய்மை இல்லாத பணம்) நாங்கள் வங்கிகளில் வேண்டாம் என்று வருடா வருடம் விட்டு கொடுக்கும் பணம் மட்டும் பல லட்சம் கோடி. புரிந்து கொள்ளுங்கள். உண்மையான முஸ்லிமுக்கு யாரையும் ஏமாற்ற தேவை இல்லை.

    “Halal Certified” இல்லாத அசைவ உணவகத்தையே தற்போது காண முடியாது.”

    ISO, மற்றும் பல தர சான்றிதழ் போல் Halal Certified உம் ஒரு தர சான்றிதழ். வியாபாரிகள் முஸ்லிம்களிடம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். Halal Certified எடுக்கிறார்கள். சும்மா கொடுப்பதற்காகவா கை காசை செலவு செய்து halal Certified எடுக்கிறார்கள்?

    “5% மக்களுக்காக 95% மக்கள் தங்கள் உணவு சுதந்திரத்தை இழக்கிறார்கள். இந்தியாவில் 15% – 20% முஸ்லிம்கள், 80% மற்ற மதத்தினர் மீது ஹலால் முறையைத் திணிக்கிறார்கள்”

    நாங்கள் எப்போது திணித்தோம்? வியாபாரிகள் லாபம் தேட ஹலால் உணவு விற்கிறார்கள். யாரும் ஹலால் உணவு விற்காமல் இருந்தால் நஷ்டம் எங்களுக்கா?

    ஏன் நாங்கள் வீட்டில் சமைத்து சாப்பிட மாட்டோமா?


    இது சாத்தியமில்லை என்று எண்ணாதீர்கள். ஏற்கனவே கேரளாவில் ஷரியா சட்ட கிராமம் ஒன்று வந்து விட்டது. மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு ஷரியா சட்ட தண்டனை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்”

    இது பற்றி சரியாக தெரியவில்லை.என்றாலும் கேட்கிறேன்.

    இதில் உங்களுக்கு என்ன வருத்தம்?

    முஸ்லிம்களுக்கு தானே தண்டனை கொடுக்கிறார்கள்.

    மது அருந்துதினால் 40 கசையடி
    விபச்சாரம் செய்து மாட்டினால் 100 கசையடி

    இவை அனைத்துக்கும் 4 கண்ணால் கண்ட சாட்சிகள் வேண்டும்.

    நல்லதொரு சமுதாயம் உருவாக வேண்டும் என்று தானே இந்த தண்டனைகள்.

    மது அருந்தி , விபச்சாரம் செய்து எத்தனை குடும்பங்கள் சீரழிந்து போகின்றன?

    ஹலால் அறுப்பு என்றால்
    நாம் உணவுக்காக கொல்லும் உயிரினங்கள் நாம் என்ன தான் காசு கொடுத்து வாங்கி இருந்தாலும் இறைவனின் படைப்புகள். இறைவனின் அனுமதி பெற்று அறுக்கிறோம்.

    தானாக செத்தது, ரத்தம்,பன்றி இறைச்சி, வேட்டை பற்களுள்ள விலங்குகள், நகங்கள் மூலம் உணவை கிழித்து உண்ணும் பறவைகள்(இவைகளின் இறைச்சி),மது . இவை இல்லாதது தான் ஹலால். தூய்மையானது.

    இந்த உணவுகள் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல மனித குலத்திற்கு கேடானது.

    இந்த உணவுகள் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் நன்மை பயக்கும்.

    “முஸ்லீம் வழக்கங்களில் தயாரிக்கப்படும் உணவைச் சாப்பிட ஒரு இந்து ஏன் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்?”

    இப்போது சொல்லுங்கள். ஹலால் உணவு கேடானதா?

    இப்போது மதமாற்றம் பற்றிய கட்டுரைக்கு வருவோம்.

    ஒருவர் இன்னொரு மதத்தில் சேருவதற்கு பல காரணங்கள்.

    1. வறுமை
    வறுமையில் வாடு பவர்களுக்கு இந்துக்கள் செய்யும் உதவிகள் மிகவும் குறைவானது. போலி சாமியார்களின் காலடியில் பணத்தை கொட்டுகிறார்கள். தேவை இல்லாத பல காரியங்களுக்கு பணத்தை வீண் செலவு செய்கிறார்கள். ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். வறுமை மக்களை மதம் மாற வைக்கும். இதை கிறித்தவர்கள் நன்றாக பயன்படுத்துகிறார்கள்.

    2. மதத்தில் உள்ள சந்தேகங்கள். இந்து மதத்தில் உள்ள சந்தேகங்களுக்கு யாரும் விளக்கம் தருவதில்லை. நீங்கள் மக்களை பகிரங்கமாக அழைத்து எல்லா சந்தேகங்களுக்கும் சரியான விளக்கம் கொடுங்கள். உங்கள் விளக்கம் திருப்தியான முறையில் இருந்தால் யாரும் சந்தேகம் காரணமாக தங்கள் மதத்தை விட்டு வெளியே போக மாட்டார்கள். எனக்கு தெரிந்து இந்து மதத்தில் இருந்து தான் அதிகமாக நாஸ்திகர்கள் உருவாகிறார்கள். காரணம் சந்தேகங்கள். இஸ்லாத்தில் உள்ள கொள்கைகளை மக்களுக்கு விளக்கப்படுகிறது. மக்கள் இஸ்லாமிய கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் இணைகிறார்கள்.

    நீங்கள் உங்கள் பக்கம் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுங்கள். யாரும் மதம் மாற மாட்டார்கள்.

    சரி. இஸ்லாமிய பிரச்சாரம் ஏன் நடக்கிறது, கிறித்தவர்கள் ஏன் பிரச்சாரம் செய்கிறார்கள்? என்ன காரணம்?
    என் மதம் பெரியது என்று காட்டவா?

    நிச்சயமாக இல்லை. இல்லவே இல்லை. அது ஒரு கவலை. நீங்கள் அனுமதி தந்தால் எழுதுகிறேன். இல்லாவிட்டால் வேண்டாம்.

    நன்றி.

  3. இந்த உணவுகள் (ஹராம்)முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல மனித குலத்திற்கு கேடானது.

    இந்த உணவுகள் (ஹலால்) முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் நன்மை பயக்கும்

  4. கிரி
    நீங்கள் அனுமதி தந்தால் Ramakrishnan இன் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறேன்.

    அனுமதி இல்லை என்றால் வேண்டாம்.

  5. @சூர்யா நன்றி 🙂

    @ராமகிருஷ்ணன்

    “பின் நாட்களில் இவர்கள் சந்ததியினரும் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் உணராமல் இருக்கிறார்களா அல்லது உணர்ந்தாலும் அப்போது நான் இருக்க மாட்டேன் என்ன நடந்தால் எனக்கு என்ன என்று இருக்கிறார்களா என தெரியவில்லை.”

    இதே சந்தேகம் தான் எனக்கும்.

    “இந்த கலியுகத்தில் நாம் மீண்டும் பிறக்கவே கூடாது என்பதுதான் கடவுளிடம் நாம் கேட்கும் வரமாக இருக்க வேண்டும்.”

    நானும் இதையே நினைக்கிறன்.

    இந்து மதம் அழிவதை, அதை விட அதற்கு முக்கியக்காரணம் இந்துக்கள் என்பதை காண மனதில் தெம்பு இல்லை.

  6. @Fahim

    “இஸ்லாமோபோபியா உங்களுக்கு அதிகரித்து இருக்கிறது. இது உங்களை எங்கே கொண்டு போய் நிறுத்துமோ?”

    எங்கேயும் நிறுத்தாது, இத்தளம் இருக்கும் வரை தொடர்ந்து எழுதிக்கொண்டு இருப்பேன்.

    வரும் காலங்களில் மேலும் இரு முக்கியக்கட்டுரைகளை எழுதப்போகிறேன். அதில் அதிகரித்துவரும் அடிப்படைவாத முஸ்லிம்கள் (Radical Muslims) பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது.

    “இறைவன் உங்களுக்கு நல்ல வழியைக் காட்ட வேண்டும் ‌.”

    இறைவன் நல்ல வழி காட்டுவதாலும், கடவுள் அருளும் இருப்பதாலே வாழ்க்கை சீராக போய்க்கொண்டுள்ளது.

    “மோசடி யார் செய்தாலும் குற்றம் குற்றமே. இஸ்லாத்தில் ஏமாற்றுதலுக்கு இடமே இல்லை.கடுமையாக தண்டிக்க வேண்டும்.”

    யார் தண்டிப்பது? உச்சநீதிமன்றமே தண்டிக்கவில்லையே.. இந்துக்கள் யாரிடம் சென்று கூறுவது?

    அதனாலே இங்கே எழுதி, என் ஆற்றாமையை தீர்த்துக்கொள்கிறேன்.

    “இது அபாண்டமான குற்றச்சாட்டு.

    எல்லா சைவ உணவகங்களிலும் முஸ்லிம்கள் தான் அதிகமாக உண்கின்றனர். இஸ்லாத்தில் உண்ண வேண்டாம் என்றால் யாரும் சைவ உணவகங்கள் பக்கமே யாரும் போகமாட்டார்கள்.”

    நான் கூறியதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை அல்லது நான் இன்னும் விளக்கமாக கூறி இருக்கலாம்.

    நான் கூறுவது பண்டிகை நாட்களில் இந்து கடவுளுக்குப் படைத்த உணவைப் பல முஸ்லிம்கள் சாப்பிட மாட்டார்கள் என்று கூறுகிறேன்.

    எடுத்துக்காட்டு கொழுக்கட்டை.

    இதை பலர் எடுத்துக்கொள்ள மாட்டார்கள், வேண்டாம் என்று மறுத்து விடுவார்கள். எனக்கே இந்த அனுபவம் உள்ளது.

    இது அபாண்டம் அல்ல, நடந்த, நடக்கும் உண்மை.

    “ஏன் கிரி வாய் கூசாமல் இப்படி அபாண்டமாக குற்றம் சாட்டுகிறீர்கள்?

    சுத்தம் இஸ்லாமிய இறை நம்பிக்கையில் பாதி. புரிந்து கொள்ளவும்.”

    நடக்கவில்லை, நடக்காது என்று உங்களால் உறுதி கூற முடியுமா? இணையம் முழுக்க காணொளிகள் கொட்டிக்கிடக்கிறது. நீங்க அபாண்டம்ன்னு பேசிட்டு இருக்கீங்க.

    துப்புறது என்றால் காறி துப்புவது அல்ல, சம்பிரதாயத்துக்குத் துப்புவது. அதுவும் தவறு தான், ஏற்றுக்கொள்ள முடியாது.

    “எங்கேயோ ஒரு கிறுக்கு அசுத்தமான முஸ்லிம் செய்ததற்கு எல்லா முஸ்லிம்களையும் குற்றம் சாட்டுகிறீர்கள்.”

    எங்கேயோ ஒருவர் கிடையாது. ஏராளமான சம்பவங்கள்.

    நீங்களும் கூட இந்த துப்பிய உணவை சாப்பிட்டு இருக்கலாம். எச்சில் செய்து pack செய்யப்பட்ட காய்கறியைச் சாப்பிட்டு இருக்கலாம்.

    கடுமையான மன உளைச்சலாக உள்ளது. தற்போது ஏதாவது சாப்பிடும் போது இவை நினைவுக்கு வந்து அருவருப்பை ஏற்படுத்துகிறது.

    “இறைவன் எப்போதும் உண்மையின் பக்கம் தான்.”

    இதுல எதுக்கு இறைவனை இழுக்கறீங்க, மனிதன் செய்யும் தவறுக்கு.

    “யார் குற்றம் சாட்டுவது நீங்களா?”

    பலரும் விமர்சிக்கிறார்கள், செய்திகளிலும் வந்துள்ளது.

    நான் கூறுவதை நம்ப வேண்டாம் Google search செய்யுங்கள் வரும்.

    “இஸ்லாத்தில் வட்டி ஹராம் என்பதால் (தூய்மை இல்லாத பணம்) நாங்கள் வங்கிகளில் வேண்டாம் என்று வருடா வருடம் விட்டு கொடுக்கும் பணம் மட்டும் பல லட்சம் கோடி. ”

    உங்களை யார் விட்டுக்கொடுக்க சொன்னது?

    சரி! வங்கியில் வேண்டாம் என்று நீங்கள் கூறலாம், எல்லோரும் கூற மாட்டார்கள்.

    அதோடு வங்கியில் நீங்கள் வைத்து இருக்கும் பணத்துக்கு வட்டி கொடுப்பது என்பது RBI Automated process.

    “Halal Certified எடுக்கிறார்கள். சும்மா கொடுப்பதற்காகவா கை காசை செலவு செய்து halal Certified எடுக்கிறார்கள்?”

    நீங்கள் கட்டுரையை சரியாக படித்து இருந்தால், இக்கேள்வி கேட்டு இருக்க மாட்டீர்கள்.

    “காரணம், முஸ்லிம்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை இழக்க விரும்பாத உணவகங்கள் ஹலால் உணவையே அனைத்து இடங்களிலும் கொடுக்கிறார்கள்.

    முஸ்லிம்கள் ஹலால் இல்லையென்றால் சாப்பிட மாட்டார்கள் ஆனால், இந்துக்களுக்கு நேரடியாகத் துப்பி கொடுத்தாலும் எதிர்ப்பு இல்லாமல் சாப்பிடுவார்கள் என்பதால், ஹலால் எங்கும் பரவிவிட்டது.”

    நான் இந்துக்களை தான் திட்டி உள்ளேன், உங்களை அல்ல.

    முஸ்லிம்கள் போல இந்துக்களும் செய்து இருந்தால், ஹலால் என்ற ஒன்றே இந்தியாவில் இருக்காது.

    ஆனால், முஸ்லிம்களுக்கு இருக்கும் சொரணை இந்துக்களுக்கு இல்லை. இதுவே வித்தியாசம்.

    “நாங்கள் எப்போது திணித்தோம்?”

    உங்கள் எதிர்ப்புக்கு பயந்து தானே இந்த முடிவு. முஸ்லிம்களை எதிர்த்து அவர்கள் கடையை நடத்த முடியுமா?

    அந்த பயம் தான் திணிப்பு.

    “இது பற்றி சரியாக தெரியவில்லை.என்றாலும் கேட்கிறேன். இதில் உங்களுக்கு என்ன வருத்தம்?”

    என்ன வருத்தமா?!!!

    இந்தியா பின்பற்றுவது இந்திய தண்டனை சட்டம், ஷரியா சட்டமல்ல.

    “மது அருந்துதினால் 40 கசையடி
    விபச்சாரம் செய்து மாட்டினால் 100 கசையடி

    இவை அனைத்துக்கும் 4 கண்ணால் கண்ட சாட்சிகள் வேண்டும்.

    நல்லதொரு சமுதாயம் உருவாக வேண்டும் என்று தானே இந்த தண்டனைகள்.

    மது அருந்தி , விபச்சாரம் செய்து எத்தனை குடும்பங்கள் சீரழிந்து போகின்றன?”

    நல்ல சமுதாயம் உருவாக்க இந்திய தண்டனை சட்டத்தின் படியே தண்டனைகள் வேண்டுமே தவிர, காட்டுமிராண்டி தனமான ஷரியா தண்டனைகள் எங்களுக்கு வேண்டாம்.

    உங்களுடைய பதிலில் இருந்தே தெரிகிறது நீங்க ஷரியா சட்டத்தை, அவை வருவதை ஆதரிக்கிறீர்கள் என்பதை.

    இதைத்தான் ஆபத்து என்று கட்டுரையில் கூறியுள்ளேன். உங்களைபோன்றவர்களின் இந்த மனநிலை தான் எங்களுக்கு பயத்தை அளிக்கிறது.

    இதையே 40% மக்கள் தொகை வந்தால், ஷரியா சட்டத்தைக் கொண்டு வர நிர்பந்திப்பார்கள் என்று குறிப்பிட்டேன்.

    தற்போது இதை, ‘இருந்தால் என்ன?’ என்று சாதாரணமாக கேட்பது என் பயத்தை மேலும் அதிகரிக்கிறது.

    இதையே யாசினிடம் கேட்டால், அவர் இந்திய தண்டனை சட்டமே சரி என்பார்.

    இது தான் உங்கள் இருவருக்கும் உள்ள வேறுபாடு.

    “இந்த உணவுகள் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் நன்மை பயக்கும்.”

    நீங்களே சாப்பிட்டுக்கொள்ளுங்கள், எங்களுக்கு வேண்டாம்.

    “இப்போது சொல்லுங்கள். ஹலால் உணவு கேடானதா?”

    ஹலால் உங்கள் வழக்கத்துக்கானது. அதை ஏன் நாங்கள் பின்பற்ற வேண்டும்?

    இது கேடானதா இல்லையா என்பதைத்தாண்டி, அவ்வாறான உணவு முறையில் எனக்கு உடன்பாடில்லை என்பதே நான் கூறுவது.

    “நீங்கள் உங்கள் பக்கம் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுங்கள். யாரும் மதம் மாற மாட்டார்கள்.”

    இதற்கு பதில் கூறினால் அது பெரிய விளக்கமாக வரும்.

    அப்படி கூறினாலும், இறுதியில் அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் போல ஒரு பதிலை கூறி, எல்லா கோட்டையும் அழிங்க முதல்ல இருந்து ஆரம்பிக்கிறேன் என்றே நிலையே இருக்கும்.

    அனைத்து மதங்களிலும் நிறை குறைகள் உள்ளன.

    “நீங்கள் அனுமதி தந்தால் எழுதுகிறேன். இல்லாவிட்டால் வேண்டாம்.”

    நீங்கள் கேட்டதற்கு நன்றி.

    நீங்கள் கூறுவதை தடுக்க முடியாது ஆனால், வேண்டாம்.

    என் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில், விமர்சனம் வைப்பதில் எனக்கு தயக்கமில்லை ஆனால், இங்கே மதப்பரப்புரை செய்வதை, விளக்கம் கொடுப்பதை விரும்பவில்லை.

    “நீங்கள் அனுமதி தந்தால் Ramakrishnan இன் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறேன்.”

    இதுவொரு பொதுத்தளம்.

    எவரும் தங்கள் கருத்தை நாகரீகமா முன் வைக்கலாம், எந்த அனுமதியும் தேவையில்லை.

    comment moderation கூடக் கிடையாது.

    ஆபாசமான, அநாகரீகமான கருத்துகள், தனிமனித தாக்குதல் மட்டுமே இங்கே நீக்கப்படும், விமர்சனங்களுக்கு எந்தத் தடையும் இல்லை.

    உங்களுக்கு எனக்கும் மதம் சார்ந்த 1000 வேற்றுமைகள் கருத்தில் உள்ளன ஆனாலும், இங்கே நீங்கள் தொடருவதற்கு காரணம், உங்களுக்கு கிடைக்கும் சுதந்திரம் தான்.

    எனவே எந்தக்கருத்தையும், விமர்சனத்தையும் முன் வைக்கலாம், பதில் அளிக்கலாம் ஆனால், அது நாகரீகமாக உள்ளதா? என்பது மட்டுமே இங்கே கேள்வி.

    மற்றபடி எந்த அனுமதியும் தேவையில்லை.

  7. @fahim,

    இந்த உணவுகள் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல மனித குலத்திற்கு கேடானது.
    How can you (One Community or religion) decide it is not good for all.

  8. ராமகிருஷ்ணன்

    “ஆசிர்வாத் ஆட்டாவில் கூட ஹலால் முத்திரையைப் பார்த்தேன். கோதுமை மாவில் என்ன ஹலால் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.”

    உணவு கெட்டுப் போகாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களில் பன்றியின் ஏதோ ஒரு பதார்த்தம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆசிர்வாத் கோதுமையில் பன்றியின் அந்த பதார்த்தம் சேர்க்கப்பட்டு இல்லை.

  9. “எங்கேயும் நிறுத்தாது, இத்தளம் இருக்கும் வரை தொடர்ந்து எழுதிக்கொண்டு இருப்பேன்.”

    இல்லை. இப்போது உங்களிடம் வன்முறை சிந்தனை அதிகமாக உள்ளது. இல்லாவிட்டால் உங்களிடம் மதமாற்றம் செய்ய “எவனாவது எவளாவது வந்தால் அடித்து விரட்டுங்கள்” என்று அன்று சொன்னீர்கள். என்ன சரி அசம்பாவிதம் நேரிட்டால் யார் பொறுப்பு? ஏன் கருத்து வேறுபாடு இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளலாம்‌ தானே . உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாக தான் இப்படி சொன்னேன்.

    இந்த தளத்தின் பொதுவான வாசகர்கள் உங்களிடம் சமீப காலங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அறிவார்கள்.

    “யார் தண்டிப்பது? உச்சநீதிமன்றமே தண்டிக்கவில்லையே.. இந்துக்கள் யாரிடம் சென்று கூறுவது?”

    குற்றம் நிரூபிக்கப்பட்டு இருக்காது.

    ” நான் கூறுவது பண்டிகை நாட்களில் இந்து கடவுளுக்குப் படைத்த உணவைப் பல முஸ்லிம்கள் சாப்பிட மாட்டார்கள் என்று கூறுகிறேன்.

    எடுத்துக்காட்டு கொழுக்கட்டை.

    இதை பலர் எடுத்துக்கொள்ள மாட்டார்கள், வேண்டாம் என்று மறுத்து விடுவார்கள். எனக்கே இந்த அனுபவம் உள்ளது.”

    உண்மை தான்.  சிலைகளுக்கு படைக்கப்பட்ட உணவு எங்களுக்கு ஹராம். எங்களுக்கு விருப்பமில்லா விட்டால் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். படைக்கப்படாத உணவு தாராளமாக தாங்க. நல்லா சாப்பிடுகிறோம்.
    நாங்கள் கூட   பக்ரீத் இறைச்சி தாருங்கள் என்று கேட்கும் இந்து சகோதரர்களுக்கு மாத்திரம் தான் கொடுப்போம். எல்லோருக்கும் கொடுக்க மாட்டோம். உங்களுக்கு உங்கள் மார்க்கம் எங்களுக்கு எங்கள் மார்க்கம். மத திணிப்பு இஸ்லாத்தில் இல்லை.

    “துப்புறது என்றால் காறி துப்புவது அல்ல, சம்பிரதாயத்துக்குத் துப்புவது. அதுவும் தவறு தான், ஏற்றுக்கொள்ள முடியாது”

    இப்போது புரிந்தது.

    தர்காக்களில் உணவு சமைக்கும் போது ஓதி ஓதுவார்கள். தர்கா இஸ்லாமிய வழிமுறையில் இல்லாதது. எனது நண்பர் ஒருவர் தர்கா போவார். நாங்கள் கேலி பண்ணுவோம் எச்சில் சாப்பாடு சாப்பிட போகிறாய் என்று.

    உணவகங்களில் இப்படி எல்லாம் நடக்காது. அப்படி நடந்தால் உணவகத்தை சீல் பண்ண வேண்டும்.

    “நல்ல சமுதாயம் உருவாக்க இந்திய தண்டனை சட்டத்தின் படியே தண்டனைகள் வேண்டுமே தவிர, காட்டுமிராண்டி தனமான ஷரியா தண்டனைகள் எங்களுக்கு வேண்டாம்.”

    இந்திய தண்டனை சட்டத்தின் படி தண்டனை வழங்கி குற்றங்கள் கூடி உள்ளதா? குறைந்துள்ளதா?

    குற்றங்கள் கூடிக்கொண்டே போகிறது.
    ஒவ்வொரு நாளும் எத்தனை கொலை, கொள்ளை, மது வின் தீமைகள், விபச்சாரம். புள்ளி விவரங்கள் பாருங்கள்.

    ஷரியா சட்டம் அமுல்படுத்தப்படும் நாடுகளில் குற்றங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன

    இந்துக்களுக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை முஸ்லிம்களுக்கு இரண்டு கண்கள் போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நாடு எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை முஸ்லிம்களை எதிர்க்க வேண்டும் என்று ஒரு முடிவோடு இருக்கிறீர்கள்.

    “இதையே யாசினிடம் கேட்டால், அவர் இந்திய தண்டனை சட்டமே சரி என்பார்.

    இது தான் உங்கள் இருவருக்கும் உள்ள வேறுபாடு.”

    கேட்டுப் பாருங்கள்.

    உங்கள் சம்பளக் கவரை பிக் பாக்கெட் காரணிடம் திருட்டு கொடுத்து பாருங்கள். என்ன சொல்வீர்கள்?
    இந்திய தண்டனை சட்டத்தின் படி தண்டிப்பீர்களா?

    நண்பனின் மகளை ஒரு காமுகன் கற்பழித்து கொன்று விட்டான். என்ன செய்வீர்கள்? இந்திய தண்டனை சட்டத்தின் படி தண்டிப்பீர்களா?

    மற்றவர்களுக்கு நடந்தால் இந்திய தண்டனை சட்டத்தின் படி தண்டிப்பீர்கள்.  உங்களுக்கு நடந்தால்?
    சிந்தித்து பாருங்கள்.

    ஹலால் உங்கள் வழக்கத்துக்கானது. அதை ஏன் நாங்கள் பின்பற்ற வேண்டும்?

    இது கேடானதா இல்லையா என்பதைத்தாண்டி, அவ்வாறான உணவு முறையில் எனக்கு உடன்பாடில்லை என்பதே நான் கூறுவது.

    நல்லது

    . Halal Certified இருந்தால் உணவை கண்காணிப்பார்கள். இல்லாவிட்டால் செத்த பிராணியை சமைத்து வைப்பார்கள். கோழி பிரியாணி என்று காக்கா பிரியாணி விற்பார்கள். ஆட்டுக்கறி என்று நாய் கறியை விற்பார்கள். இந்த உலகில் பணத்துக்காக எதையும் விற்பார்கள்.

    உங்களுக்கு ஹலால் தேவை இல்லாவிட்டால் மேற்கூறிய ரிஸ்க் நீங்கள் எடுக்க தான் வேண்டும்.

  10. கிரி.. கட்டுரையை ஒன்றிற்கு, இரண்டு முறை தற்போது தான் படித்து முடித்தேன்.. பொதுவாக இங்கு தமிழ்நாட்டில் வாழும் முஸ்லீம்களின் மனநிலையும்/ வட இந்தியாவில் வாழும் முஸ்லீம்களின் மனநிலையும் முற்றிலும் மாறுபடும். அதே நிலை தான் இந்துக்களும் பொருந்தும். எல்லா மதங்களிலும் உள்ளவர்கள் 100% சரியாக பின்பற்றுகிறோம் என்றால் நிச்சயம் இல்லை..

    தற்போதைய சூழலில் முடியவும் முடியாது.. இஸ்லாத்தின் கோட்பாடுகளை நீங்கள் படித்தீர்கள் என்றால் மிகவும் எளிமையானது..அதே சமயம் அடுத்த மதத்தினரோடு எவ்வாறு சகோதரத்துவம் / அன்பு காட்ட வேண்டும் என்பதை மிகவும் அழகாக கூறப்பட்டிற்கும்..

    ஆனால் தற்போதைய சூழ்நிலையால் முஸ்லீம் என்றாலே, அடுத்தவர்கள் அவர்களை பார்க்கும் பார்வை முழுவதும் மாறி விட்டது.. இதற்கு பல்வேறான காரணங்கள் உள்ளது.. என்னை பொறுத்தவரை ஒரு இந்தியனாக இந்த பூமியில் பிறந்ததால் என் மண்ணை நேசிக்கிறேன்.. என் தாய்மொழி தமிழ் மீது அளவு கடந்த காதல் வைத்து இருக்கிறேன்.

    என்னுடைய பிறப்பு என் தாய் / தந்தை வழி முஸ்லிமாக பிறந்ததால், என் மதத்தை நேசிக்கிறேன்.. என்னுடன் இன்று வரை பழகி வரும் மாற்று மத சகோதர்களுடன் மிகவும் அழகிய முறையில் நட்பு பாராட்டுகிறேன்.. இது என்னுடைய இறப்பு வரை தொடரும்..

  11. @Fahim

    “அசம்பாவிதம் நேரிட்டால் யார் பொறுப்பு? ஏன் கருத்து வேறுபாடு இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளலாம்‌ தானே . உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாக தான் இப்படி சொன்னேன்.”

    😀 😀

    ஒரு கடுப்புல சொல்வதையெல்லாம் இந்தளவுக்கு கற்பனை செய்கிறீர்களே! 🙂 . எனினும் அதைத் திருத்தி விட்டேன்.

    அன்புக்கு நன்றி.

    உங்கள் அன்பை இந்தியா முழுக்க செய்துகொண்டுள்ள உங்கள் சகோதரர்களிடமும் கூறினால் நல்லது.

    “இந்த தளத்தின் பொதுவான வாசகர்கள் உங்களிடம் சமீப காலங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அறிவார்கள்.”

    இதை நானே கூறியுள்ளேனே. https://www.giriblog.com/neautral-is-possible-or-not/

    என் மாற்றத்துக்கு காரணம், என்னை சுற்றியுள்ள சமூகம் தான், நான் அல்ல.

    என்னை சுற்றியுள்ளவர்கள் மாற மாற நானும் மாற வேண்டியதாகி விடுகிறது. நான் என்ன மாதிரி எழுத வேண்டும் என்பதை இவர்களே முடிவு செய்கிறார்கள்.

    “குற்றம் நிரூபிக்கப்பட்டு இருக்காது.”

    பிரச்சனை என்னவென்று தெரிந்து பேசுகிறீர்களா? தெரியாமல் பேசுகிறீர்களா?

    பிரச்சனையே இந்து பெயரை வைத்துள்ள முஸ்லிம்கள் தான். அவர்கள் உண்மை பெயரை எழுத வேண்டும் என்று கூறியதற்கு உச்சநீதிமன்றம் தேவையில்லை என்று கூறி விட்டது.

    இதில் எங்கே குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறுகிறீர்கள்?

    “உண்மை தான். சிலைகளுக்கு படைக்கப்பட்ட உணவு எங்களுக்கு ஹராம்.”

    இதைத்தானே நானும் கூறினேன். இதற்கு அபாண்டமாக கூறுவதாக கூறினீர்கள்.

    “மத திணிப்பு இஸ்லாத்தில் இல்லை.”

    Fahim நீங்க எதோ ஒரு தனி உலகத்தில் இருப்பதாகவே அவ்வப்போது எனக்கு தோன்றும். அதை அவ்வப்போது இது மாதிரி உறுதிப்படுத்துகிறீர்கள்.

    செய்திகளே படிப்பதில்லையா?!

    “இப்போது புரிந்தது.

    தர்காக்களில் உணவு சமைக்கும் போது ஓதி ஓதுவார்கள். தர்கா இஸ்லாமிய வழிமுறையில் இல்லாதது. எனது நண்பர் ஒருவர் தர்கா போவார். நாங்கள் கேலி பண்ணுவோம் எச்சில் சாப்பாடு சாப்பிட போகிறாய் என்று.”

    இதைத்தாங்க நானும் சொன்னேன். உங்கள் மதத்தில் உள்ளவர்கள் செய்வதையே நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வோம்.

    உங்களுக்கு பிடிக்காத கட்டுரையை நான் எழுதலாம் ஆனால், மனதறிந்து பொய்யாக எழுத மாட்டேன்.

    “இந்திய தண்டனை சட்டத்தின் படி தண்டனை வழங்கி குற்றங்கள் கூடி உள்ளதா? குறைந்துள்ளதா?”

    ஷரியா சட்டப்படி தண்டனை கொடுப்பதால் அந்த நாடுகளில் குற்றங்கள் நடப்பதில்லையா?

    “ஷரியா சட்டம் அமுல்படுத்தப்படும் நாடுகளில் குற்றங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன”

    கட்டுப்பாட்டுக்குள் உள்ளன ஆனால், நிற்கவில்லை என்பதை தான் உங்கள் பதிலும் கூறுகிறது.

    ஷரியா சட்டத்தில் தனி மனிதர்களும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள். மேற்குவங்கத்தில் நடந்தது அது தான்.

    ஷரியா சட்டம் இதை மட்டும் முன்னிறுத்துவதில்லை ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத வழிமுறைகளை பின்பற்றுகிறது.

    இதனாலே ஷரியா சட்டத்தை எதிர்க்கிறேன். இதுவொரு மூர்க்கமான, சமூகத்துக்கே கேடான சட்டம்.

    இச்சட்டம் இந்தியாக்கு வந்தால் இந்தியா 1000 வருடங்கள் பின்னோக்கி சென்று விடும்.

    நீங்கள் இவ்வளவு விரிவாக கூறுவதை பார்த்தால், இச்சட்டத்துக்காக காத்துகொண்டு இருப்பது போல உள்ளது.

    என் சந்தேகத்தை, பயத்தை உறுதிப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள்.

    “இந்துக்களுக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை முஸ்லிம்களுக்கு இரண்டு கண்கள் போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.”

    புரியலையே! என்ன சொல்ல வரீங்க.. நான் எங்கே அப்படி கூறினேன்?!

    “நாடு எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை முஸ்லிம்களை எதிர்க்க வேண்டும் என்று ஒரு முடிவோடு இருக்கிறீர்கள்.”

    பங்களாதேஷ், ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாக்குள்ளே வந்து அவர்கள் தான் நாட்டை நாசம் செய்து கொண்டுள்ளார்கள்.

    போதாததுக்கு இங்குள்ளவ முஸ்லிம்கள் 2047 ல் இந்தியாவை முஸ்லீம் நாடாக்கப்போவதாக கூறி செயல்பட்டு வருகிறார்கள்.

    இவர்கள் செய்யாததையா நான் செய்து விடப்போகிறேன்!

    “கேட்டுப் பாருங்கள். உங்கள் சம்பளக் கவரை பிக் பாக்கெட் காரணிடம் திருட்டு கொடுத்து பாருங்கள். என்ன சொல்வீர்கள்? இந்திய தண்டனை சட்டத்தின் படி தண்டிப்பீர்களா?”

    அப்புறம்… கையை வெட்ட சொல்றீங்களா?

    ஷரியா சட்டத்தில் இதற்கு என்ன தண்டனை என்று தெரியவில்லை ஆனால், இது போன்று தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

    யாசின் நிச்சயம் கையை வெட்டக் கூற மாட்டார் என்பது உறுதியாக எனக்குத் தெரியும்.

    அவர் அனுமதியில்லாமலே அவரைப் புரிந்து கொண்ட எண்ணத்தில் அவர் பெயரை இழுத்து விட்டேன், தவறாக நினைக்க மாட்டார்ன்னு நினைக்கிறன்.

    “நண்பனின் மகளை ஒரு காமுகன் கற்பழித்து கொன்று விட்டான். என்ன செய்வீர்கள்? இந்திய தண்டனை சட்டத்தின் படி தண்டிப்பீர்களா?”

    அப்படித்தானே நடந்து கொண்டுள்ளது.

    எனக்கு தனிப்பட்ட கோபங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கலாம் ஆனால், சட்டத்தை மதித்துத் தானே ஆக வேண்டும்.

    என் கோபம் எப்படி இருந்தது, இருக்கிறது என்று இக்கட்டுரை படித்துப் பாருங்கள்.

    https://www.giriblog.com/expression-of-a-stone-man/

    நீங்க கூறியதையே இந்திய தண்டனை சட்டத்துக்கு உட்பட்டு கூறி இருப்பேன். இக்கட்டுரை எழுதியது 2010 ம் ஆண்டு.

    மேலே என்ன கூறினீர்கள்?

    அடித்து துரத்த வேண்டும் என்று நான் கோபத்தில், ஆற்றாமையில் கூறியதை வன்முறை சிந்தனை அதிகமாக உள்ளது என்று கூறினீர்கள்.

    தற்போது கூறுவதன் பெயர் என்ன?

    மதமாற்றம் செய்வது எனக்கு மோசமான தவறு ஆனால், நீங்கள் பொறுமையாக பேசி தீர்க்க சொல்கிறீர்கள்?

    தற்போது இங்கே ஷரியா சட்டத்தைப் பின்பற்றினால் என்ன ஆகும் தெரியுமா?!

    நானாவது நாலு போட்டு அனுப்புங்கள் என்று கூறுகிறேன் ஆனால், ஷரியா சட்டத்தில் “மேலேயே” அனுப்பி விடுவார்கள் 🙂 .

    இப்படி கொண்டு வந்தால், அதிகம் பாதிப்பது உங்கள் மதத்தினராக தான் இருப்பார்கள்.

    மதரஸாக்களில் உங்கள் மௌலிகளால் எத்தனை சிறுவர்கள், சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகுகிறார்கள் என்று தெரியுமா?

    இந்து பெயரில் வந்து எவ்வளவு இந்துப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களை மதம் மாற்றம் செய்யக் கட்டாயப்படுத்துகிறார்கள் தெரியுமா?

    இரு நாட்களுக்கு முன்னர் ஒரு இந்துப்பெண்ணை முஸ்லீம் வாலிபர் மிக கொடூரமாக கொலை செய்துள்ளார். இது மாதிரி தினமும் பல சம்பவங்கள் நடக்கிறது.

    தெரியுமா? தெரியாதா?

    தெரியாது என்றால், ஒன்று உங்கள் சார்ந்த செய்திகள் மட்டும் படிக்கிறீர்கள் அல்லது நீங்கள் இந்தியாவில் இல்லை. இந்த இரண்டில் ஒன்று உறுதி.

    “உங்களுக்கு ஹலால் தேவை இல்லாவிட்டால் மேற்கூறிய ரிஸ்க் நீங்கள் எடுக்க தான் வேண்டும்.”

    அதை நாங்க பார்த்துகிறோம் ஆனால், சான்றிதழ் வாங்கி விட்டாலே அப்படியே அவற்றை பின்பற்றுகிறார்கள் என்ற உங்கள் நம்பிக்கை இருக்கிறதே.. அபாரம்!

    Fahim ஏற்கனவே கூறி இருக்கிறேன் என்று நினைக்கிறன்.

    நீங்கள் விவாதிப்பதை பார்க்கும் போது அடிப்படையில் நல்லவராகவே தெரிகிறீர்கள் ஆனால், உங்கள் மத நபர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளீர்கள்.

    எந்தவொரு மதத்திலும் நல்லது, கெட்டதும் இருக்கும் ஆனால், நீங்கள் அதைப் புரிந்து கொள்வதில்லை.

    புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.

  12. @யாசின்

    “எல்லா மதங்களிலும் உள்ளவர்கள் 100% சரியாக பின்பற்றுகிறோம் என்றால் நிச்சயம் இல்லை..”

    உறுதியாக இல்லை, நடைமுறையில் சாத்தியமும் இல்லை.

    “என்னுடன் இன்று வரை பழகி வரும் மாற்று மத சகோதர்களுடன் மிகவும் அழகிய முறையில் நட்பு பாராட்டுகிறேன்.. இது என்னுடைய இறப்பு வரை தொடரும்.”

    நீங்கெல்லாம் தனிப்பிறவி யாசின். உங்களைப் போல அனைவரும் இருந்து விட்டால், நாட்டில் பிரச்சனைகளே இருக்காது.

  13. “பிரச்சனையே இந்து பெயரை வைத்துள்ள முஸ்லிம்கள் தான். அவர்கள் உண்மை பெயரை எழுத வேண்டும் என்று கூறியதற்கு உச்சநீதிமன்றம் தேவையில்லை என்று கூறி விட்டது.

    இதில் எங்கே குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறுகிறீர்கள்?”

    மன்னிக்கவும். நீங்களும் சரியான விளக்கம் தரவில்லை. எனக்கும் என்ன பிரச்சினை என்று சரியாக விளங்கவில்லை.

  14. “இதைத்தாங்க நானும் சொன்னேன். உங்கள் மதத்தில் உள்ளவர்கள் செய்வதையே நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வோம்”

    அது தான் நானும் கேட்கிறேன். நாங்களே தர்கா வழிபாடு செய்வது இல்லை. தர்கா உணவு சாப்பிடுவது இல்லை. நீங்கள் தர்கா உணவு (ஓதி ஊதிய உணவு) ஏன் சாப்பிட வேண்டும்?

    “இதனாலே ஷரியா சட்டத்தை எதிர்க்கிறேன். இதுவொரு மூர்க்கமான, சமூகத்துக்கே கேடான சட்டம்.

    இச்சட்டம் இந்தியாக்கு வந்தால் இந்தியா 1000 வருடங்கள் பின்னோக்கி சென்று விடும்.”

    அப்படி யா?

    பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக கூட்டி செல்வது

    பில் கிஸ் பானு‌ குற்றவாளிகள் நீதிமன்றம் முன்னாலேயே இனிப்பு கொடுத்து வரவேற்றது

    என்று எவ்வளவோ எழுதலாம். நீங்கள் மறுபடியும் மறுப்பு சொல்வீர்கள். எனக்கும் களைப்பு.

    குற்றம் large என்றால் தண்டனையும் large. தான்.

    தமிழகத்தில் இந்து முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.

    அதை நாசம் பண்ண வேண்டாம்.

    எதிர்காலத்தில் பிரிவுகள் வந்தால் அதில் உங்கள் பங்கும் இருந்தால் அந்த பாவம் உங்களை சும்மா விடாது.

    உங்கள் கட்டுரைகள் தொடர்ந்து வாசித்து வரும் ஒருவருக்கு ஒரு முஸ்லிம் முன்னாள் வந்தால் அவரை நாலு சாத்து சாத்த வேண்டும் என்று தோன்றும். அப்படி ஒரு உணர்வை உண்டாக்குறீர்கள்.

    பரவாயில்லை.

    எங்களுக்கு இறைவன் போதுமானவன்

  15. @Fahim

    “நீங்கள் தர்கா உணவு (ஓதி ஊதிய உணவு) ஏன் சாப்பிட வேண்டும்?”

    நான் எங்கெங்க தர்கா உணவு சாப்பிடுறேன்னு சொன்னேன்.

    நான் கூறியது ஹலால் உணவில் எச்சை துப்பி கொடுக்கிறார்கள் என்ற விமர்சனம் பலரால் முன்வைக்கப்படுகிறது.

    அதற்கு காரணம், இவ்வாறு உணவுப்பொருட்களில் துப்பும் காணொளிகள் ஏராளமாக இணையத்தில் உலவுகிறது.

    எனவே, ஹலால் உணவிலும் இப்படி நடக்கிறது என்று கருதுகிறார்கள் என்று கூறுகிறேன்.

    இதை ஹலால் விளக்கத்தில் நான் கூறவில்லை. எதனால் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது, சர்ச்சையாக கருதப்படுகிறது என்கிற பகுதியில் கூறியுள்ளேன்.

    எனக்கு இப்பவும் சாப்பிடும் போது ஒரு சந்தேகத்தை இயல்பாகவே கொடுக்கிறது.

    நிம்மதியா சாப்பிட முடியலை. மன உளைச்சலாக உள்ளது.

    ஹலால் இல்லாத அசைவ உணவகங்கள் இல்லை என்ற நிலையாகி விட்டது. நாங்கள் வேறு எங்கே சென்று சாப்பிடுவது?

    இப்பவும் நான் முஸ்லிம்களைக் குறை கூறவில்லை. வருமானத்துக்காக இதைக் கட்டாயமாக்கி விட்ட இந்துக்களை தான் குற்றம் கூறுகிறேன்.

    “பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக கூட்டி செல்வது

    பில் கிஸ் பானு‌ குற்றவாளிகள் நீதிமன்றம் முன்னாலேயே இனிப்பு கொடுத்து வரவேற்றது”

    நான் என்னமோ இவனுகளை அழைத்து வடை பாயசத்தோடு விருந்து வைங்க என்று சொல்ற மாதிரி பேசிட்டு இருக்கீங்க.

    இவனுகளை எல்லாம் தூக்கில் தான் போடணும். ஷரியா சட்ட படி இல்லை, இந்திய தண்டனை சட்டப்படி.

    இதற்கெல்லாம் முட்டு கொடுப்பேன்னு எதிர்பார்க்காதீங்க.

    வெளியே வந்த இவர்களை திரும்பச் சிறையில் அடைத்து விட்டார்கள் என்று செய்தியில் பார்த்தேன்.

    “தமிழகத்தில் இந்து முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.

    அதை நாசம் பண்ண வேண்டாம்.”

    யாரு.. நானு?!

    இதைப் பொதுக்கூட்டம் நடத்தி இந்து மதத்தை மிகவும் கீழ்த்தரமாக பேசும் முஸ்லீம் பேச்சாளர்களிடம் கூறுங்கள், ஒற்றுமையைச் சிதைக்காதீர்கள் என்று.

    திரும்பவும் சொல்றேன்.. உங்களுக்கு இங்க என்ன நடக்குதுன்னே தெரியல.. அல்லது தெரிந்துட்டே தெரியாத மாதிரி இருக்கீங்க.

    “எதிர்காலத்தில் பிரிவுகள் வந்தால் அதில் உங்கள் பங்கும் இருந்தால் அந்த பாவம் உங்களை சும்மா விடாது.”

    உங்கள் சாபம் என்னை எதுவும் செய்யாது. தப்பு செய்கிறவனும், அதற்கு துணை போகிறவனும் தான் பயப்படணும்.

    எனக்கு என்ன?

    “உங்கள் கட்டுரைகள் தொடர்ந்து வாசித்து வரும் ஒருவருக்கு ஒரு முஸ்லிம் முன்னாள் வந்தால் அவரை நாலு சாத்து சாத்த வேண்டும் என்று தோன்றும். அப்படி ஒரு உணர்வை உண்டாக்குறீர்கள்.”

    நான் என் ஆதங்கத்தை, என் மதத்தை சீரழிக்கிறார்களே, அதற்கு இந்துக்களும் துணைபோகிறார்களே என்ற ஆற்றாமையை பகிர்கிறேன்.

    அது உங்களுக்கு வெறுப்புணர்வாக தோன்றினால் நான் என்ன செய்வது? அனைவரையும் திருப்தி செய்யும்படி எழுத என்னால் முடியாது.

    நான் கூறுவதில் தவறு உள்ளதா? பொய்யான தகவல்களைக் கூறி உள்ளேனா? தனிமனித தாக்குதல் நடத்தியுள்ளேனா? இஸ்லாம் மதத்தைப் பற்றி இழிவாக பேசியுள்ளேனா? என்று கூறுங்கள்.

    அப்படி இருப்பதாகக் கருதினால் அதைக் குறிப்பிட்டு கேளுங்கள் பதில் அளிக்கிறேன்.

    • “எதிர்காலத்தில் பிரிவுகள் வந்தால் அதில் உங்கள் பங்கும் இருந்தால் அந்த பாவம் உங்களை சும்மா விடாது.”

      உங்கள் பங்கும் வந்து விடக்கூடாது என்று தான் என்று கவலைப்படுகிறேன்.

      நான் ஏன் உங்களை சாபமிடுகிறேன்.
      நீங்கள் என் வாழ்க்கையில் ஒருவர்.
      உங்களை 17 வருடமாக தெரியும். 17 வருடங்கள் உங்களுடன் சேர்ந்து உங்கள் தளத்தில் பயணிக்கிறேன். உலகில் வாழும் அத்தனை பேருக்கும் தினமும் பிரார்த்தனை செய்கிறேன்.

      முஸ்லிம்களிடம் பிழைகள் இருக்கலாம். இந்துக்களிடத்திலும் பிழைகள் இருக்கலாம். இஸ்லாத்தில் உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும். உலகத்தில் அனைத்து மதத்தினரும் ஒருவருக்கு ஒருவர் சண்டை பிடிப்பார்கள். ஆனால் முஸ்லிம்கள் விடயத்தில் எல்லோரும் ஒற்றுமையாக முஸ்லிம்களை எதிர்ப்பார்கள். இது எங்களுக்கு பழகி போய் விட்டது.

      நாங்கள் மறுமை வாழ்வை நம்புகிறோம். அதில் இவ்வுலக வாழ்வின் நன்மை தீமைகள் கணக்கு தீர்க்கப்படும். அப்போது எல்லோருக்கும் யார் சரி யார் பிழை என்று விளங்கும்.

  16. @Fahim

    கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பல காலமாக தொடர்வதற்கும், உங்கள் அன்புக்கும் நன்றி Fahim.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!