இடது சாரிகள் நாட்டுக்கு உலகுக்கு கேடு

3
இடது சாரிகள்

லகில் பல்வேறு சித்தாந்தங்களில் கட்சிகள் இருந்தாலும் உலகம் முழுக்க பரவி இருப்பது இடது சாரிகள் மற்றும் வலது சாரிகள். Image Credit

கன்சர்வேடிவ் பார்ட்டி என்ற நடுநிலை கட்சியும் உள்ளது. இவர்கள் கிட்டத்தட்ட இடது சாரிகள் தான். நடுநிலையென்றாலே நாசமாகப் போவதற்கான வழி தானே.

புரிந்து கொள்ள, கமலின் மய்யம் எங்கே இணைந்துள்ளது?!

இடது சாரிகள்

சோசலிசம், தொழிலாளர்கள் நலன், அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கைகளில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது முற்றிலும் மாறிய நிலையில் உள்ளது.

தற்போது பல படிகள் முன்னேறி,

  • பொதுமக்களைப் பொய்ச் செய்திகளால் ஏமாற்றுவது
  • போலியான நம்பிக்கைகளைக் கொடுப்பது
  • உண்மையான செய்திகளை மறைப்பது
  • ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் எடுப்பது
  • அகதிகளுக்குக் கண்மூடித்தனமாக அடைக்கலம் கொடுப்பது
  • வேறு நாட்டின் கட்டளைக்கு அடிபணிவது
  • நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது
  • பிரிவினைப் பேசுவது, பேசி அவற்றை வளர்ப்பது
  • சிறுபான்மையினர் அரசியல் செய்வது
  • செய்திகளை மடை மாற்றுவது
  • Toolkit Activate செய்வது
  • மத அடிப்படை வாதிகளுக்கு ஆதரவு அளிப்பது
  • ஊருக்கே கருத்துச் சுதந்திரம் பாடம் எடுப்பார்கள் ஆனால், அவர்கள் பின்பற்றமாட்டார்கள்
  • ஒருதலைப்பட்ச செய்திகளை ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வது
  • பேச்சு சுதந்திரம், சமூகநீதி என்பார்கள் ஆனால், அவர்களுக்கல்ல.
  • கடவுளை இழிவு படுத்துவது
  • சீனாவை முன்னிறுத்தி சொந்த நாட்டை இழிவுபடுத்துவது
  • சமூகத்தைச் சீரழிக்கும் செயல்களுக்கு Liberal என்ற பெயரில் ஆதரவளிப்பது
  • நாட்டுப்பற்று மருந்தளவு கூட இருக்காது
  • தாங்கள் வெற்றி பெற நாடு, மாநிலம் எக்கேடு கெட்டாலும் கவலையில்லாதவர்கள்
  • தொடர்ந்து எதிர்மறை கருத்துகளைப் பரப்புவார்கள்

மேற்கூறியவர்களே இடது சாரிகள் அல்லது இவர்களின் பெரும்பாலான கொள்கைகளில் உடன்பாடுள்ளவர்கள்.

இந்தியாவில் இடது சாரிகள் என்ற கம்யூனிசம் அழிந்து, கேரளா மட்டுமே பாக்கி.

ஆனால், அதனுடைய மேற்கூறிய கொள்கைகளில் பெரும்பாலானவற்றை காங்கிரஸ், திமுக, திரிணாமுல், சமாஜ்வாடி கட்சிகள் எடுத்துக்கொண்டன.

உலக நாடுகள்

உலகளவில் கலவரம், சண்டை, வன்முறை எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் இடது சாரிகள் இருப்பார்கள் அல்லது காரணமாக இருப்பார்கள்.

நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பார்கள். சிறு அளவில் புரிந்து கொள்ள கேரளாவை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

கேரளாவில் உள்ள பலர் வேறு மாநிலங்களில், நாடுகளில் தான் பணியில் அதிகம் இருப்பார்கள் அல்லது தொழிலை நடத்துவார்கள்.

2009 ல் அமெரிக்காவில் வங்கிகள் திவாலானதால் உலகளவில் மிகப்பெரிய Recession வந்தது. அப்போது ஆட்சிக்கு வந்த ஒபாமா மிகத்திறமையாகக் கையாண்டார்.

இவர் ஒரு இடது சாரி நபர். இவரைப் போல வெகு சிலரே இடது சாரிகளில் அனைவரும் பாராட்டும்படியான செயல்களைச் செய்வர். ஒபாமா காப்பீடு திட்டம் சர்ச்சையானது என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை.

நாட்டை அழிப்பவர்கள்

இடது சாரிகளுக்குத் தங்கள் நாடு, நாட்டு மக்கள் என்ற எந்தப்பாசமும் இருக்காது.

இவ்வாறு நம் கண் முன்னே அழியும் நாடுகளாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகியவை உள்ளன, பட்டியலில் கனடா, ஸ்வீடன் இணையும்.

இதைப் பற்றி ‘அழிவுப்பாதையில் மேற்கத்திய நாடுகள்‘ கட்டுரையில் எழுதுகிறேன்.

தற்போது அமெரிக்காவும் இப்பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. வலது சாரிகள் இதைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

ஏற்கனவே, பைடன் நான்கு வருடங்களில் அமெரிக்காவை எந்த அளவுக்கு நாசம் செய்ய முடியுமோ அந்த அளவுக்குச் செய்து விட்டார்.

இடது சாரிகள் அவ்வளவு எளிதில் ட்ரம்ப்பை வெற்றி பெற விட மாட்டார்கள்.

Deep State

சமீபமாக பலரும் Deep state என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டு இருக்கலாம்.

யார் இவர்கள்?

இவர்கள் எந்தக்கட்சியையும் சாராதவர்கள் என்றாலும், இடது சாரிகளுக்கு ஆதரவளிப்பவர்கள்.

இவர்களுக்கு இவர்கள் பேச்சைக் கேட்கும் நபர் ஆட்சியில் இருக்க வேண்டும். இவர்களுக்குத் தேவையானதை செய்யும் ஒரு அடிமை அரசு தேவை.

அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். அந்த ஆட்சியைக் கொண்டு வர உதவுவார்கள். ஒப்புக்கொள்ளாதவர்களை சீரழிப்பார்கள்.

இதற்கு நாட்டை நேசிக்கும் வலது சாரிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, இடது சாரிகளை Deep State ஆதரிக்கிறார்கள்.

ஜார்ஜ் சோரோஸ்

Deep State ன் முக்கிய கையாக இருப்பவர் சைக்கோ ஜார்ஜ் சோரோஸ். 90 வயதை கடந்தும் உலகை நாசம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட பைத்தியக்காரன்.

இவருக்கு எப்படியாவது மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே விருப்பம். அதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்தார்.

ஆனால், மோடி திரும்ப ஆட்சிக்கு வந்து விட்டார் என்றாலும் தனிப்பெரும்பான்மை பெறுவதைத் தடுத்து விட்டார் என்பது அவருக்கு ஆறுதல்.

விவசாயப் போராட்டம், CAA போராட்டம், மணிப்பூர் கலவரம் உட்பட இந்தியாவில் நடந்த, நடக்கும், நடக்கப்போகும் பிரச்சனைகளில் இவரின் பங்குண்டு.

இவரின் அல்லது மேற்கத்திய நாடுகளின் ஆலோசனையில் தான் ராகுல் செயல்பட்டு வருகிறார் என்பது தான் தற்போதைய குற்றச்சாட்டு.

இதன் ஒரு எடுத்துக்காட்டு தான் சாதி பிரச்சனையை முன்னெடுத்தது. ராகுல் பற்றி எழுதும் தனிக்கட்டுரையில் இவற்றை விரிவாகக் கூறுகிறேன்.

திறமை

மேற்கூறிய இடது சாரிகள், Deep State போன்றவர்கள் உலகளவில் பலம் மிக்கவர்கள். அதாவது உங்களால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு.

எதையும் ஊடகத்தின் மூலம் மாற்றும் வல்லமை கொண்டவர்கள். நடக்காத ஒன்றை நடந்ததாக காட்ட முடியும், நடந்த ஒன்றை நடக்காததாகக் காட்ட முடியும்.

இவர்களால் உலகம் முழுக்க வெறுப்புணர்வு, சண்டை, கலவரம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஆனாலும், மக்கள் இவர்களை நல்லவர்கள் என்றே நினைப்பார்கள், நினைக்க வைப்பார்கள். இதுவே அவர்கள் திறமை.

இதை எளிய, விவரம் அறியாத மக்களுக்கு விளங்க வைப்பது கடினம், விளக்கினாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

காரணம், மேலோட்டமாக பார்த்தால், அவர்களால் நன்மை என்பதாகவே வெளித்தோற்றத்தில் தெரியும் ஆனால், அனைத்தும் நாசக்கேடாக முடியும்.

மக்கள் உணரும் போது அனைத்தும் முடிந்து இருக்கும். இதுவே இவர்களின் பலம்.

இடது சாரிகள் நாட்டுக்கு, உலகுக்கு கேடு.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. மேற்கத்திய நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கம்யூனிச சித்தாந்தம் இன்று உலக அளவில், சில நாடுகளில் மட்டும் பின்பற்றப்பட்டு வருகிறது.. என்னை பொறுத்தவரை சீனாவில் பின்பற்றப்படுவது கம்யூனிசமே அல்ல.. அங்கு பின்பற்றப்படுவது சர்வாதிகாரம் தான்.

    மேற்கு நாடுகளில் முதலாளித்துவதையும், நில பிரபுக்களுக்கு எதிராக போராடுவதற்கு தான் இந்த சித்தாந்தங்கள் பயன்படுத்தப்பட்டது.. பின்பு அது முற்றிலும் கொஞ்சம், கொஞ்சமாக மாறி இன்று வேறு மாதிரி உள்ளது..

    நான் கோவையில் பணி புரிந்த நாட்களில் கோவையில் தொழில்துறையின் வளர்ச்சி அபரீதமாக இருந்தது.. 80 களின் பிற்பகுதியில் வளர்ச்சி உச்சத்தில் இருந்ததாக அந்த காலகட்டத்தில் பணி புரிந்தவர்கள் கூற கேட்டு இருக்கிறேன்.. இந்த வளர்ச்சி படிப்படியாக குறைய தொடங்கியதில் தொழில்சங்கங்களின் பங்கு மிக அதிகமாக இருந்திருக்கிறது..

    ஒருகட்டத்தில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக தொடங்கிய போது பல நிறுவன முதலாளிகள் நிறுவனத்தை மூடி விட்டார்கள். ஒரு சமயத்தில் இந்தியாவிலோ அல்லது ஆசியாவிலே மிக பெரிய இரும்பு உருக்கு ஆலை SRSI காரமடையில் இருந்தததாக கேள்விபட்டேன்.. இந்த நிறுவனமும் இது போன்ற பிரச்சனைகளால் பின்பு மூடப்பட்டு விட்டது.. இங்கு பணி புரிந்த பல ஊழியர்கள் நான் பணி புரிந்த நிறுவனத்தில் பின்பு சேர்த்தனர்..

    இந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்ட பல செய்திகள் இது வரை நான் அறியாதது.. உண்மையில் படிக்கும் போது பல கேள்விகள் என்னுள் எழுகிறது.. இந்த நிலை தொடரும் போது எதிர்காலத்தில் இன்னும் கடினமாக தான் இருக்கும்.. வரும் சந்ததிகள் இவைகளை எவ்வாறு கையளவுவார்கள் என்பது புரியவில்லை..

  2. கிரி…

    மிகத் தெளிவாக எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் கிரி

  3. @யாசின்

    “என்னை பொறுத்தவரை சீனாவில் பின்பற்றப்படுவது கம்யூனிசமே அல்ல.. அங்கு பின்பற்றப்படுவது சர்வாதிகாரம் தான்.”

    100% சரியான கருத்து.

    “இந்த வளர்ச்சி படிப்படியாக குறைய தொடங்கியதில் தொழில்சங்கங்களின் பங்கு மிக அதிகமாக இருந்திருக்கிறது..”

    தொழிற்சங்கங்களே தொழிற்சாலைகள் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.

    தயாரிப்பாளரையே அழித்து விட்டால் திரைப்படங்கள் எப்படி வரும்? என்பது போலத்தான்.

    “ஒருகட்டத்தில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக தொடங்கிய போது பல நிறுவன முதலாளிகள் நிறுவனத்தை மூடி விட்டார்கள்.”

    கேரளாவில், மேற்கு வங்கத்தில் அதிகம் நடந்துள்ளன.

    “இந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்ட பல செய்திகள் இது வரை நான் அறியாதது.”

    முடிந்தவரை கூடுதல் தகவல்களைத் திரட்டி தான் எழுதுகிறேன். அனைவரும் எழுதுவதை நாமும் எழுதக் கூடாது என்பதற்காக.

    படிப்பவர்களுக்கு ஏதாவது ஒரு விசயமாவது புதிதாக இருக்க வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் ஒவ்வொரு கட்டுரையையும் எழுதுகிறேன்.

    @ஷண்முகசுந்தரம்

    எப்படி இருக்கீங்க? 🙂

    கருத்துரை இட்டாலே நீங்கள் இருப்பதே தெரிகிறது. தற்போது ஃபேஸ்புக்கில் பகிராததால், யார் படிக்கிறார்கள் என்பதே தெரிவதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!