மகாராஜா (2024) | குப்பைத்தொட்டியைக் காணோம்

2
மகாராஜா

மிழில் ரொம்ப நாட்களுக்குப் பிறகு தரமான படமாக மகாராஜா வந்துள்ளது.

மகாராஜா

குப்பைத்தொட்டி காணாமல் போனதாகப் புகார் கொடுக்கக் காவல்நிலையம் வருகிறார் விஜய் சேதுபதி. Image Credit

அவர்கூறும் புகார் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளதால், விஜய் சேதுபதியிடம் வாக்குவாதமாகி இறுதியில் என்ன ஆனது? என்பதே மகாராஜா.

குப்பைத்தொட்டி

குப்பைத்தொட்டிக்குப் புகார் என்பது நகைச்சுவையாக இருந்தாலும், போகப்போக விவகாரமாக மாறிப் பின்னர் இறுதியில் மிகப்பெரிய ட்விஸ்டில் முடிகிறது.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளாக வரும் நட்டி, அருள்தாஸ் அவர்களுடன் முனீஸ்காந்த்.

விஜய் சேதுபதி பற்றி அவ்வப்போது முன்பே சிம்பாலிக்காக கூறுகிறார்கள். சிலதை உடனே தொடர்பு படுத்திக்கொள்ள முடிந்தது, சிலது இறுதியிலேயே புரிகிறது.

விஜய் சேதுபதி அலட்டிக்கொள்ளாத நடிப்பு ஆனால், அவருடைய சில வழக்கமான உடல்மொழிகள் மற்றும் வசன உச்சரிப்பு சலிப்பை ஏற்படுத்துகிறது.

இப்படத்தில் இவை குறைவு என்றாலும், VJ இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் வரும் காலைல கோழி கொக்கரக்கோ ன்னு வரும் நகைச்சுவை போல விஜய்சேதுபதி கூறுவது உள்ளது.

VJ மகளின் பள்ளி ஆசிரியையாக வரும் மம்தா மோகன்தாஸ் இன்னமும் அதே போலவே உள்ளார், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு நடிக்க வாய்ப்பில்லை, சும்மா வந்து போகிறார்.

சண்டைக்காட்சிகள்

சண்டைக்காட்சிகள் ராவாக உள்ளது. குறிப்பாக VJ கையை வெட்ட முயலும் காட்சிக்கு எதிர்வினை இருக்கும் என்று எதிர்பார்த்தாலும், நடப்பது அதிரடி.

பாய்ஸ் பட மணிகண்டன் (செந்திலுடன் இருப்பாரே) இதில் வில்லனாக வருகிறார். பாய்ஸ்க்கு பிறகு இவரை முன்னிலைப்படுத்திய கதாபாத்திரம்.

பல கொலைகள் நடைபெறுகிறது ஆனால், அதெல்லாம் என்ன ஆனது? வழக்கானதா? என்பது பற்றிய விளக்கங்கள் எதுவுமில்லை.

கொடூர கொள்ளையனாக வரும் அனுராக் காஷ்யப் சிறந்த நடிப்பு. கொலை செய்து விட்டு அதே வீட்டிலேயே சமையல் செய்து சாப்பிடுவது கடுப்பாக இருந்தாலும் ரணகளமாக உள்ளது.

அனுராக் மனைவியாக வரும் அபிராமிக்கு நடிக்க வாய்ப்பு, மனதில் நிற்கிறார்.

ஒளிப்பதிவு படத்துக்குப் பெரிய பலமாக உள்ளது, காவல்நிலையம் உட்படச் சில இடங்கள் அரங்க அமைப்பு என்று தெரிந்தாலும், இயல்பிலிருந்து விலகவில்லை.

துவக்கத்தில் வரும் காட்சிகளுக்கும் அதன் பின்னரான காட்சிகளுக்கும் சம்பந்தமே இல்லை. நகைச்சுவையிலிருந்து பல்வேறு பரிமாணங்களில் படம் மாறுகிறது.

Non Linear காட்சியமைப்பு பல இடங்களில் சந்தேகங்களை, குழப்பங்களை ஏற்படுத்துகிறது. படம் வெற்றி பெற்றதால், இக்குறைகள் முன்னிறுத்தப்படவில்லை.

யார் பார்க்கலாம்?

சில காட்சிகள் இளகிய மனம் கொண்டவர்களுக்கானது அல்ல.

படத்தின் பலமே கதையில் வரும் ட்விஸ்ட்கள் தான். எனவே, எப்படி எழுதுவது என்ற குழப்பத்தில் விமர்சனம் எழுதாமல் விட்டுவிடலாம் என்று தான் நினைத்தேன்.

ஏனென்றால், கதாபாத்திரத்தின் சிறு விளக்கம் கூட ட்விஸ்டை ஊகிக்க வைப்பதாக இருந்தது. பார்க்காதவர்களுக்கு அந்த அனுபவத்தைக் கெடுக்க மனமில்லை.

ஆனால், தமிழில் நல்ல படங்கள் வருவதே அரிதாக உள்ளது. எனவே, அதைப் பதிய வைக்க வேண்டும் என்றே இவ்விமர்சனம் எழுதினேன்.

இப்படம் வெற்றியடையப் பல காரணங்கள் இருந்தாலும், சாதி, இடது சாரி கருத்துகள், திணிப்புகள் இல்லாததும் கூடப் பலரைக்கவர காரணமாக இருக்கலாம்.

NETFLIX ல் காணலாம்.

Directed by Nithilan Swaminathan
Written by Nithilan Swaminathan
Dialogues by Shanmuganathan Kounder, Raam Murali
Produced by Jagadish Palanisamy, Sudhan Sundaram
Starring Vijay Sethupathi, Anurag Kashyap, Sachana Namidass, Mamta Mohandas, Natarajan Subramaniam, Abhirami
Cinematography Dinesh Purushothaman
Edited by Philomin Raj
Music by B. Ajaneesh Loknath
Release date 14 June 2024
Running time 141 minutes
Country India
Language Tamil

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. என்னுடைய நண்பர்கள் இந்த படத்தை பார்க்க சென்ற போது நான் செல்லவில்லை.. படத்தோட ட்ரைலர் பார்க்கும் போது பிடித்து இருந்தது.. இருந்தாலும் சமீபத்திய விஜய் சேதுபதி (ஹீரோ) வாக நடித்த படங்கள் சரியாக போகாததும், சமீபத்தில் திரையரங்கில் பார்த்த படங்கள் சுமார் ரகம் என்பதாலும் செல்லவில்லை.. படத்தை பார்த்த நண்பர்கள் நன்றாக இருப்பதாக கூறினார்கள்..

    அடுத்து தங்கலான் படத்தை மட்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணி இருக்கிறேன்.. சில காட்சிகள் இளகிய மனம் கொண்டவர்களுக்கானது அல்ல. நானும் இந்த (கேட்டகிரியில்) வருவதால் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு குறைவு.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. @யாசின்

    “விஜய் சேதுபதி (ஹீரோ) வாக நடித்த படங்கள் சரியாக போகாததும், சமீபத்தில் திரையரங்கில் பார்த்த படங்கள் சுமார் ரகம் என்பதாலும் செல்லவில்லை”

    இப்படம் நன்றாக உள்ளது.

    “அடுத்து தங்கலான் படத்தை மட்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணி இருக்கிறேன்.”

    OTT யில் பார்ப்பேன்.. இனி பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் சாதி படங்களைத் திரையரங்கில் பார்த்து ஆதரிப்பதாக இல்லை.

    ஏற்கனவே, திரையரங்கு செல்வதை குறைத்து விட்டேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here