OnePlus 12R Mobile Review

6
OnePlus 12R review

4 வருடங்களுக்குப் பிறகு அடுத்த மாடலாக OnePlus 12R வாங்கியுள்ளேன்.

OnePlus 12R

OnePlus தனக்கென்று இடம் பிடித்து அதிக பயனாளர்களைப் பெற்று வருகிறது. சமீபமாக Green Line என்ற தொல்லை அனைத்து மாடல் மொபைல்களிலும் வருகிறது.

குறிப்பாக ஏதாவது Update வந்த பிறகு இப்பிரச்சனை வருகிறது. Image Credit

12* சீரீஸில் இதுவரை இல்லை ஆனால், வரலாம் என்ற எண்ணம் பலரிடையே உள்ளது. இப்பிரச்சனை OnePlus வியாபாரச் சந்தையைப் பெரியளவில் பாதித்துள்ளது.

இத்தொல்லையால் பலரும் வேறு நிறுவனங்களுக்கு மாறி வருகிறார்கள். இருப்பினும் OnePlus க்கு என்று இருக்கும் பெரும் ரசிகர் கூட்டம் தொடர்கிறது.

OnePlus 12R சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிறந்த மொபைலாக உள்ளது. 1 மாத பயன்பாட்டுக்குப் பிறகு இதை எழுதுகிறேன்.

என்னென்ன வசதிகள் உள்ளன?

  • Curved Display
  • Dual nano-SIM slot / No eSIM
  • NFC enabled
  • Snapdragon® 8 Gen 2
  • 9140 mm² Dual Cryo-velocity VC Cooling System
  • Iron Gray, Sunset Dune, Cool Blue வண்ணங்களில் உள்ளது.
  • 5500mAh பேட்டரி குறைந்தது 1 1/2 நாட்கள் வருகிறது. எவ்வளவு பயன்படுத்தினாலும் முழுமையாக ஒரு நாள் வரும்
  • 100W SUPERVOOC Adaptor ல் அதிகபட்சம் 30 நிமிடங்களில் சார்ஜ் ஆகி விடும்
  • Height 16.33 cm, Width 7.53 cm, Thickness 0.88 cm, Weight 207g
  • AMOLED ProXDR Display with LTPO4.0
  • Resolution: 2780 x 1264 pixels, 450 ppi
  • Available configurations: 8GB+128GB / 16GB+256GB
  • Dolby Atmos®, Noise cancellation support, Dual Stereo Speakers

எப்படியுள்ளது?

  • 12R பயன்படுத்தியவரை தரமான மொபைலாக உள்ளது. இதற்கு முன்னே வாங்கியிருந்த OnePlus 8 யை விட இது அட்டகாசமாக உள்ளது.
  • கேமரா பகுதி தற்போது வருவது எனக்குப்பிடிப்பதில்லை, மிகப்பெரியதாக உள்ளது ஆனால், பலரும் இதையே விரும்புகிறார்கள்.
  • OnePlus கேமரா மீது எப்போதும் மதிப்பு இருந்ததில்லை. ஒப்பீட்டளவில் மற்ற நிறுவனங்களின் கேமராவை விட இது திருப்திகரமாக இல்லை.
  • OnePlus 12R + Android 14 செம பொருத்தமாக உள்ளது.
  • வழக்கமாக Android பதிப்புகளில் பெரிய வித்தியாசத்தைக் கண்டதில்லை ஆனால், Android 14 ஏராளமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
  • Android 14 ல் Volume adjust செய்யப் பட்டனைப் பயன்படுத்த வேண்டியதில்லை.
  • Permission யை எளிதாக அறிய முடிகிறது. இது போன்ற பல வசதிகள் உள்ளது. இவை OnePlus 12R க்கு கூடுதல் மதிப்பைத் தருகிறது.
  • OnePlus 8 யை விட நீளம் அதிகம், OnePlus 8 சரியான அளவாக இருந்தது. 12R பேண்ட் பாக்கெட்டில் வைக்கும் போது முழுவதும் மறைவதில்லை.
  • வாகனத்தில் பயணிக்கும் போது கீழே விழுந்து விடுமோ என்ற எண்ணம் வருகிறது (வாய்ப்புக்குறைவு மிகக் குறைவு என்றாலும்).
  • Face unlock செமையாக உள்ளது. பெரும்பாலும் இதையே பயன்படுத்துகிறேன். சில செயலிகளில் கூடத் தற்போது இது வேலை செய்கிறது.
  • OnePlus பிரபலமானதற்கு முக்கியக்காரணங்களில் Stock Android போல இருக்கும் என்பதாலே.
  • அதாவது தேவையற்ற குப்பைகள் இருக்காது, ஒரு Clean OS (Oxygen OS) ஆக இருக்கும். இதற்காகவே OnePlus பயன்படுத்த விரும்புகிறேன்.
  • OnePlus 12R Made In India Product 🙂 . இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

உடன் வருபவை

  • தற்போது பல நிறுவனங்கள் சார்ஜர் கொடுப்பதில்லை ஆனால், OnePlus சார்ஜர், Mobile Cover, Screen Protector உடன் கொடுக்கிறது.
  • Mobile Cover வழக்கமான Transperant cover இல்லை, தரமான cover.
  • நான் வாங்க நினைத்த Mobile Cover கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • தற்போது 100W SUPERVOOC Power Adapter வருகிறது.
  • OnePlus Red Cable Club ல் கூடுதலாக 3 மாத வாரண்டி கிடைத்தது.

ஒட்டுமொத்தமாக OnePlus 12R தரமான, பயன்படுத்த எளிதாக உள்ள மொபைல். இதை வாங்கப் பரிந்துரைக்கிறேன்.

அமேசானில் வாங்க –> OnePlus 12R Link

Cable Protector

தற்போது மொபைல்களில் வரும் USB C கேபிள் கூடுதல் விலையாக உள்ளது. சேதம் அடைந்தால், மாற்றும் விலை குறைந்த கேபிள் மொபைலில் இறுக்கமாகப் பொருந்துவதில்லை, நழுவி விடுகிறது.

எனவே, இரு ஓரங்களிலும் Cable Protector பொருத்திக்கொண்டால், கேபிள் சேதம் அடைவதைத் தவிர்க்கலாம் அல்லது ஒத்திப்போடலாம்.

வாங்க விரும்புபவர்கள் இங்கே செல்லலாம்.

எதனால் மொபைல் மாற்றினேன்?

2020 ம் ஆண்டு OnePlus 8 வாங்கினேன்.

எந்தச் சாதனத்தையும் மிகவும் பத்திரமாக வைத்துக்கொள்வது வழக்கம். OnePlus 8 க்கு screen protector கூடப் போடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் 🙂 .

நான்கு வருடங்களாகியும் எந்தப்பிரச்சனையும் இல்லை, பக்காவாக இருந்தது. மேலும் இரண்டு வருடங்கள், மொத்தமாக 6 வருடங்கள் பயன்படுத்தும் எண்ணம் இருந்தது.

2024 ஜூன் மாதம் வந்த OnePlus security Update க்குப் பிறகு Green Line பிரச்சனை வந்து விட்டது. நான்கு வருடங்களுக்குப் பிறகு பிரச்னையானதில் கடுப்பாகி விட்டது.

சென்னை பாண்டி பஜார் OnePlus service center ல் எந்தக்கட்டணமும் இல்லாமல் Display மாற்றிக்கொடுத்தார்கள். சிறப்பான சேவையும் கூட.

கொடுக்கும் போது கொஞ்சம் Battery bulge ஆகி இருப்பதாகக் கூறியதால், அடுத்த ஒரு வருடத்தில் பிரச்சனையாகும் என்று மாற்ற முடிவு செய்தேன்.

இன்னொரு முக்கியக்காரணம், OnePlus Offer கொடுத்துக்கொண்டு இருந்தது.

Exchange ல் special offer ஆகக் கூடுதலாக ₹6,000 கொடுத்ததால், Display வும் மாற்றி விட்டதால், ₹15,300 க்கு Exchange எடுத்துக்கொண்டார்கள்.

இது நம்பவே முடியாததாக இருந்தது. OnePlus 8 வாங்கிய போது OnePlus 3T Exchange ₹2,000 க்குத்தான் எடுத்துக்கொண்டார்கள்.

இதோடு OnePlus Offer ₹2,000, SBI Credit Card 5% தள்ளுபடியென ₹40,000 மதிப்புள்ள (July ₹43,000) மொபைலை ₹21,500 க்கே வாங்கி விட்டேன்.

இதைவிடச் சிறந்த Offer கிடைக்காது என்பதால் திட்டமிட்டதற்கு முன்னரே வாங்கி விட்டேன்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. கிரி. நானும் ஒரு காலத்தில் oneplus உபயோகித்துக் கொண்டுதான் இருந்தேன் ஒன் பிளஸ் 7T ப்ரோ உபயோகித்துக் கொண்டிருந்தேன். அப்போது இருந்த ஆக்சிஜன் ஓ எஸ் மிகவும் அற்புதமாக இருந்தது. Carl pae oneplus CEO வாக இருந்து விலகியதிலிருந்து ஆக்சிஜன் ஓஎஸ் எனக்கு திருப்தி தரமாக இல்லை அதனால் நான் ஆப்பிள் ஐபோன் 13 வாங்கி ஒன்றை வருடம் உபயோகித்தேன் அதிலும் பிரச்சனை வந்து இப்போது ஏழு மாதங்களாக samsung s23 மொபைல் உபயோகிக்கிறேன் கைக்கு அடக்கமாக ஆறு இஞ்சில் சிறியதாக நன்றாக இருக்கிறது. இப்போதெல்லாம் கைக்கு அடக்கமான போன் ஆண்ட்ராய்டில் வருவது இல்லை samsung மாத்திரமே s series இல் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். oneplus 12ஆரில் இருக்கும் அதே ஸ்னாப் டிராகன் 8 gen 2 தான் இதிலும் இருக்கிறது. நான் ஒன் பிளஸ் உபயோகித்து இருக்கிறேன் ஆனால் சாம்சங் oneui வேற லெவலில் இருக்கிறது. தற்போதைய நிலையில் இனி நான் மொபைல் வாங்கினால் சாம்சங் மாத்திரமே வாங்குவேன் சாம்சங் எந்த மாற்றமும் இல்லாமல் இதேபோல நன்றாக இருந்தால். samsung மொபைல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. குறிப்பாக Samsung oneui + 6 inch display.

  2. @ஹரிஷ்

    எனக்கு ஆப்பிள் பிடிக்காது என்றாலும் ஆப்பிள் ஒரு தரமான சாதனம் என்பதில் சந்தேகமில்லை.

    உங்களுக்கு எப்படி பிரச்சனையானது என்பது வியப்பாக உள்ளது. 100 ஒன்று நடப்பது, உங்களுக்கு நடந்து விட்டது போல 🙂 .

    “தற்போதைய நிலையில் இனி நான் மொபைல் வாங்கினால் சாம்சங் மாத்திரமே வாங்குவேன் சாம்சங் எந்த மாற்றமும் இல்லாமல் இதேபோல நன்றாக இருந்தால்.”

    தற்போதைக்கு OnePlus எனக்குப்பிடித்துள்ளது.

    ஒருவேளை எனக்கு பிடிக்காத அம்சங்கள் எதிர்காலத்தில் வந்தால், Pixel க்கு போக முயற்சிப்பேன்.

  3. எனக்கு ஆப்பிள் பிடிக்காது என்றாலும் ஆப்பிள் ஒரு தரமான சாதனம் என்பதில் சந்தேகமில்லை.

    உங்களுக்கு எப்படி பிரச்சனையானது என்பது வியப்பாக உள்ளது. 100 ஒன்று நடப்பது, உங்களுக்கு நடந்து விட்டது போல

    @கிரி
    உங்களுக்கு ஆப்பிள் மொபைல் பற்றி சரியாக தெரியவில்லை என நினைக்கிறேன் நீங்கள் குவாலிட்டியை பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்.

    அவர்களுடைய கேமரா குவாலிட்டியை அடித்துக் கொள்ள ஆளே இல்லை அதை நானும் ஒத்துக் கொள்கிறேன் நான் ஒன்றரை வருடம் ஆப்பிள் 13 மொபைல் உபயோகித்தேன். ஆனால் அவர்கள் சர்வீஸ் படுமோசம் அவர்கள் வாரண்டியில் இருந்தாலும் அவர்கள் ஃப்ரீயாக சர்வீஸ் செய்து தர மாட்டார்கள் எதையாவது குறை சொல்லி உங்களிடம் பணம் பிடுங்க தான் பார்ப்பார்கள்.

    நீங்கள் இப்போது ஆண்ட்ராய்டு உபயோகிக்கும் பொழுது ஈசியாக இருக்கும் அதேபோல் ஆப்பில் நீங்கள் ஈசியாக உபயோகிக்க முடியாது பேட்டரி ஹெல்த் என்று ஒரு ஆப்ஷனை அதில் சொருகி உள்ளார்கள்.

    அதன் ஊரில் இருந்து 80 க்கு வந்துவிட்டால் நீங்கள் வேறு பேட்டரி மாற்ற வேண்டி வரும் அது இரண்டு வருடம் நிச்சயமாக வரும் என்று சொல்வார்கள் ஆனால் நீங்கள் அடிக்கடி சார்ஜ் செய்தாலோ அல்லது பவர் பேங்கில் உபயோகித்தாலோ வேறு நிறுவனத்தின் சார்ஜ் உபயோகித்தாலோ அந்த பேட்டரி ஹெல்த் இரண்டு நாளைக்கு ஒருமுறை ஒவ்வொரு சதவீதமாக குறைந்து கொண்டே வரும்.

    எனக்கு ஆப்பிளில் நடந்த கசப்பான சம்பவங்கள் மிக நீண்ட சம்பவம். வாரண்டியில் இருந்தாலும் சர்வீஷுக்கு எடுத்துக் கொண்டு விட்டு பிறகு அதை ஏதோ சாஃப்ட்வேர் மூலமாக சரி செய்தோம் என்று எனக்கு திருப்பி அளித்துவிட்டு சரி செய்யாமல் திருப்பி கொடுத்து விட்டார்கள்.

    கால் செய்து பேசும்போது எதிர் தரப்பில் இருப்பவருக்கு நான் பேசுவது சரியாக கேட்காது இது நான் மொபைல் வாங்கிய முதல் நாளிலிருந்து இந்த பிரச்சனை இருந்தது

    நானும் இது ஏதோ சரியாக விடும் என்று ஒரு பத்து மாதம் அப்படியே உபயோகித்தேன் ஆனால் வாரண்டி முடிய இன்னும் இரண்டு மாதங்களே
    இருக்கிறது எனத் தெரிந்தவுடன் நான் ஐபோன் சர்வீஸ் சென்டர் சென்றேன்.

    அவர்கள் கம்ப்யூட்டருடன் இணைத்து ஆமாம் ஹார்ட்வேரில் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லி மொபைலை சர்வீஸுக்கு எடுத்துக் கொண்டார்கள் மொபைல் பெங்களூருக்கு சென்று வர ஒரு வாரம் ஆகும் உங்களுக்கு மொத்தமாக ஹார்வேர் எல்லாமே மாற்றி தந்து விடுவார்கள் என்று கூறினார்கள்.

    ஆனால் அடுத்த நாளில் எனக்கு கால் செய்து நாங்கள் சாப்ட்வேரை மறுபடியும் இன்ஸ்டால் செய்தோம் இப்போது அந்த பிரச்சனையை சரியாகி விட்டது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

    முதல் நாளில் மொபைல் ஹார்டுவேரில் பிரச்சனை இருக்கிறது என்று சர்வீசுக்கு எடுத்துக் கொண்டவர்கள் அடுத்த நாளே சரியாகிவிட்டது என்று எப்படி கூறினார்கள் என சந்தேகம் வந்தது.

    நேரில் வாங்க சென்று அங்கு போய் பார்த்தால் மீண்டும் அதே பிரச்சினை அப்படியே இருந்தது.

    இதை நான் கேட்டதற்கு நீங்கள் 15,000 கொடுத்து நீங்க ஆப்பிள் கேர் பிளஸ் போட்டுக் கொள்ளுங்கள் அதற்குப் பிறகு நீங்கள் மொபைலை எங்கள் கண் முன்னாடியே உடைத்துக் கொடுத்தால் கூட நாங்கள் புது ஆப்பிள் 13 மொபைல் கொடுத்துவிடுகிறோம் என்று என்னிடம் பிசினஸ் பேசினார்கள்.

    எப்படி இந்த மாதிரி எல்லாம் செய்ய உங்களுக்கு மனது வருகிறது நேற்றுதானே ஹார்ட்வேரில் பிரச்சனை இருக்கிறது என நீங்கள் மொபைலில் கம்ப்யூட்டர் என்று நினைத்து பார்க்கும்போது அப்படித்தானே வந்தது பிறகு எப்படி இன்று ஹார்ட்வேரில் இருந்த பிரச்சனையை சாப்பிடும் மூலமாக சரி செய்தீர்கள் என கேட்டேன் அவர்கள் அதற்கு பதிலே சொல்லவில்லை

    அவர்கள் ஒரே முதலிலேயே திரும்பத் திரும்ப சொன்னார்கள் நீங்கள் பிரஸ் போட்டுக் கொள்ளுங்கள் 60,000 மொபைலை உங்களுக்கு 15,000 ரூபாயில் தந்து விடுகிறோம் என என்னை பிரைன்வாஷ் செய்து கொண்டே இருந்தார்கள்.

    கடுப்பாகி நான் அடுத்த ஒரு மாதத்தில் மொபைலில் அமேசானில் எக்ஸ்சேஞ்சில் போட்டுவிட்டு சாம்சங் மொபைல் வாங்கி விட்டேன் இனி நான் எக்காலமும் நான் ஆப்பிள் பக்கமே போக மாட்டேன். ஆனால் ஆப்பிள் ஐபேட் இந்த பிரச்சனை இல்லை. ஐபோனுக்கு கொடுத்த பேட்டரி ஹெல்த் என்ற ஒரு ஆப்ஷனை ஆப்பிள் ஐபேடுக்கு தரவில்லை.

    அதில் தான் ஆப்பிளின் தந்திரம் இருக்கிறது. எவருமே ஐபிஎடை வருடா வருடம் மாற்ற மாட்டார்கள் ஏனென்றால் அதை பெரும்பாலும் படிப்பதற்கே உபயோகிப்பார்கள். அதை நாம் அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது அதனால் ஐபேடுக்கு பேட்டரி ஹெல்த் என்று ஒரு ஆப்ஷனை கொடுக்கவே இல்லை.

    இது இதேபோல நிறைய குறைகள் இருக்கின்றன சொல்வதற்கு.

    நீங்கள் whatsapp iphone-ல் உபயோகித்தால் அதில் பேக்கப் கூகுள் மூலமாக செய்ய முடியாது ஐ கிளவுட் மூலமாகவே செய்ய முடியும்.

    அந்த ஐ கிளவுட் கூட உங்களுக்கு ஐந்து ஜிபி மட்டுமே இலவசமாக இருக்கும் அந்த ஐந்து ஜிபிக்குள்ளாகவே நீங்கள் உங்கள் மொபைலில் எடுத்த போட்டோ வீடியோ அனைத்தும் உபயோகிக்க வேண்டும்.

    அந்த ஐந்து ஜிபி எப்படி உங்களுக்கு சரியாக வரும். வாட்ஸ் அப்பில் இருக்கும் டேட்டாவிற்கே அந்த ஐந்து ஜிபி பத்தாது உங்களுக்கு இன்னும் மெமரி அதிகமாக வேண்டும் என்றால் நீங்கள் ஆப்பிளிடம் தனியாக பணம் கொடுத்து கிளவுட் ஸ்டோரேஜை எதை வாங்க வேண்டும்.

    அந்த பிளவுஸ் ஸ்டோரேஜும் நீங்கள் ஆப்பிள் சாதனத்தில் மட்டுமே உபயோகிக்க முடியும். இது எவ்வளவு பெரிய திணிப்பு. இவ்வாறு விஷயங்கள் கொட்டி கிடக்கின்றன ஆப்பிளில் நாம் சந்திக்கும் சங்கடங்கள். இந்த கமெண்ட் இன் மூலமாக நான் அனைத்தும் சொல்வது மிகக்கடினும் ஒரு 100 பேஜ் ஆவது வந்து விடும்.

    உதாரணமாக இரண்டு மூன்று விடயங்களை சொல்லியுள்ளேன் இன்னும் நிறைய நிறைய இருக்கிறது சொல்வதற்கு

  4. கிரி.. நான் முதன் முதலில் கைப்பேசி பயன்படுத்தியது நோக்கியோ 1100 மே மாதம் 2007.. என்னுடைய நண்பன் பயன்படுத்தியதை அவன் புதியது வாங்கியதால் எனக்கு இலவசமாக கொடுத்தான்.. அதன் பிறகு நோக்கியோ C6 2011 ல் பயன்படுத்தினேன்.. இடையில் லெனோவா ஏதோ ஒரு மாடல் சிறிது காலம்.. அதன் ரெட்மி தற்போதும் அதை தான் பயன்படுத்தி வருகிறேன் .. இரண்டு நாட்களுக்கு முன்பு MOTO G 84 அலுவலகத்தில் கொடுத்தார்கள்.. இன்னும் பயன்படுத்த தொடங்கவில்லை.. நான் கைப்பேசியில் பொதுவாக புகைப்படம் எடுப்பது மிக குறைவு.. அதிகபட்சம் youtube இல் பாடல்கள் கேட்பது, பழைய டெஸ்ட் போட்டிகளின் ஹயிலைட்ஸ் பார்ப்பது மட்டும் தான்.. மற்றபடி கைப்பேசி பயன்படுத்துவது குறைவு..

  5. @ஹரிஷ்

    “உங்களுக்கு ஆப்பிள் மொபைல் பற்றி சரியாக தெரியவில்லை என நினைக்கிறேன் நீங்கள் குவாலிட்டியை பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்.”

    சிங்கப்பூரிலிருந்து போது ஆறு வருடங்கள் பயன்படுத்தியுள்ளேன்.

    பயன்படுத்தாத பொருளைப் பற்றிய விமர்சனங்களை முன் வைப்பதில்லை.

    நீங்கள் கூறியபடி சேவையில் குறைபாடுகள் இருக்கலாம், இந்தியாவில் பயன்படுத்தியதில்லை என்பதால், கருத்து கூற விரும்பவில்லை.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வங்கி, மொபைல், OS, தொலைக்காட்சி, வாட்ச், கிரெடிட் கார்டு செட் ஆகும்.

    எனவே, தனிப்பட்ட ஒருவரின் அனுபவத்தை வைத்து ஒன்றின் முடிவுக்கு வர முடியாது.

    நமக்கு செட் ஆகவில்லை என்றால், ஒதுங்கி விடுவதே சரி. நீங்கள் செய்தது போல.

  6. @யாசின்

    “நான் கைப்பேசியில் பொதுவாக புகைப்படம் எடுப்பது மிக குறைவு.. அதிகபட்சம் youtube இல் பாடல்கள் கேட்பது, பழைய டெஸ்ட் போட்டிகளின் ஹயிலைட்ஸ் பார்ப்பது மட்டும் தான்.. மற்றபடி கைப்பேசி பயன்படுத்துவது குறைவு..”

    நான் மிக அதிகமாக மொபைல் பயன்படுத்துவேன். அதாவது எல்லா சேவைக்கும் மொபைல் தான்.

    மொபைல் இல்லையென்றால் எனக்கு மிகக்கடினம்.

    ஆனால், உங்களைப்போல நிழற்படங்கள் எடுப்பதில்லை. அதில் எனக்கு ஆர்வம் இருந்தது இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!