Target (2023 Korean) | Online Scam

2
target

ணையம் எவ்வளவுக்கெவ்வளவு உதவுகிறதோ அதே போல ஆபத்தையும் கொண்டு வரும். அப்படியான ஓர் ஆபத்தைத்தான் Target கூறுகிறது. Image Credit

Target

பயன்படுத்திய பொருட்களை வாங்கும் OLX போன்ற இணைய தளத்தில் நண்பியின் ஆலோசனையைக் கேட்டு ஒரு நபரிடம் வாஷிங் மெஷின் வாங்குகிறார் Soo-hyun.

ஆனால், அவனோ பழுதான சாதனத்தைக் கொடுத்து ஏமாற்றி விடுகிறான்.

புதியதாக வாங்கினால் செலவாகும் என்று தான் இத்தளத்தில் வாங்குவார். இப்பவும் பணம் வெட்டியாக போனதில் கடுப்பாகி, அவனை இணையத்தில் தேடுகிறார்.

போலிக் கணக்கில் இருந்தாலும் எப்படியோ கண்டு பிடித்து அவனை மிரட்ட அவன் கடுப்பாகி, இவருக்குக் கொடுக்கும் டார்ச்சர் தான் Target.

இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.

இணையம்

இணையம் சில நேரங்களில் மிக ஆபத்தானது. ஒருவரை எப்படி வேண்டும் என்றாலும் சிக்கலுக்குக் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள்.

Zomato, Swiggy போன்ற நிறுவனங்களில் Soo-hyun மொபைல் எண் வழியாக ஆர்டர் செய்வது போலச் செய்து விடுகிறான்.

வரிசையாக இவர் வீட்டுக்கு வர, ‘நான் ஆர்டர் செய்யவில்லை‘ என்று கூறுவதே பெரும்பாடாகி விடுகிறது. இவையல்லாமல் மற்ற வகையிலும் இதே போன்று தொடர்கிறது.

இது போதாது என்று Call Girl என்பது போன்று மொபைல் எண்ணை முகவரியுடன் போட்டு விட இதைப்பார்த்து பலர் வர ஆரம்பித்து விடுகிறார்கள்.

மொபைல் அழைக்கப்பட்டாலே பீதியாக இருக்கும். காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும், அவர்களாலும் யார் என்று கண்டறிய முடியவில்லை.

தொல்லையே தாங்க முடியாமல், மொபைல் எண்ணையும், வீட்டையும் மாற்றி விடுகிறார் ஆனாலும், திரும்ப அதே தொல்லை தொடர்கிறது.

இதனால் அலுவலகத்தில் பிரச்சனை, தனிப்பட்ட வாழ்க்கையில் நிம்மதி இழந்தது என்று கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.

காவல்துறை

காவல்துறை அதிகாரி ஒருவர் இதைக் கண்டறிய அவருக்கு உதவுகிறார் ஆனாலும், முடியவில்லை. எங்குமே அவன் தகவல்கள் இல்லை.

பின்னர் அவனைக் கண்டறிய புதிய வழியைத் திட்டமிடுகிறார்கள், அதில் அவன் மாட்டினானா? என்ன ஆனது? என்பதைப் பரபரப்பாகக் கூறியுள்ளார்கள்.

இது போன்று நமக்கானால் என்ன செய்வோம்? என்று நினைத்துப்பார்த்தால் திகிலாகவே இருந்தது.

நமக்கு இது வேலையில்லை ஆனால், இவனைப் போன்றவர்களுக்கு இது தான் வேலையே. ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவது.

உங்க மொபைல் எண்ணை எதையாவது கூறி WhatsApp ல் பரப்பி விட்டால், அது உண்மையா பொய்யா என்று கூட ஆராயாமல் பரப்பும் மங்குனி கூட்டம் உள்ளது.

தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தால், அதுவும் மன உளைச்சலை ஏற்படுத்தும்படி நடந்தால் எப்படி இருக்கும்?

எனவே, இக்கதையை ஒவ்வொருவரும் தங்களுடன் பொருத்திப்பார்க்க முடியும்.

யார் பார்க்கலாம்?

அனைவரும் பார்க்கலாம்.

இணையத்தில் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இதைப்பார்த்தால் ஓரளவு உணர்ந்து கொள்ளலாம்.

Amazon Prime ல் காணலாம்.

Directed by Park Hee-gon
Screenplay by Park Hee-gon, Kim Dong-hoo
Starring Shin Hye-sun, Kim Sung-kyun
Cinematography Baek Yoon-seok, Lee Seon-yong
Edited by Han Eon-jae, Han Young-gyu
Music by Jang Young-gyu
Release date August 30, 2023
Running time 101 minutes
Country South Korea
Language Korean

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. படத்தோட கதை வித்தியாசமாக இருக்கிறது.. படத்தை எங்கு காணலாம் என்ற குறிப்பிடவில்லை.. சில கொரிய படங்கள் கதைக்கரு மிகவும் வித்தியாசமாக இருப்பதை கண்டு வியந்து இருக்கிறேன். அதிக படங்கள் பார்க்கவில்லை என்றாலும் சில பார்த்த படங்கள் பசுமையாக நெஞ்சில் பதிந்து இருக்கிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. @யாசின்

    “படத்தை எங்கு காணலாம் என்ற குறிப்பிடவில்லை.”

    மறந்து விட்டேன். தற்போது சேர்த்து விட்டேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!