Ullozhukku (2024 Malayalam) | யார் தவறு?

2
Ullozhukku

லையாளத்திரையுலகிலிருந்து மீண்டுமொரு இயல்பான படம் Ullozhukku (Under current). Image Credit

Ullozhukku

பெற்றோரின் நெருக்கடியால், காதலை கை விட்டுத் திருமணமாகிப் போகிறார் பார்வதி ஆனால், கணவனுக்கோ உடல்நிலை பாதிப்பால் படுத்த படுக்கை.

இதனால் காதலனுடன் கள்ள உறவில் இருக்கிறார். கணவனுக்கு உடல்நிலை சரியில்லாததை குடும்பத்தினர் மறைத்துள்ளனர் என்று பார்வதிக்கு தெரிய வருகிறது.

யார் செய்தது தவறு? இறுதியில் என்ன ஆனது? என்பதே Ullozhukku.

பார்வதி ஊர்வசி

இருவருக்கும் நடிப்பில் கடும் போட்டியே உள்ளது.

பார்வதி தனது ஏமாற்றத்தை மறைத்து, கணவனுக்கு அனைத்துப் பணிவிடைகளையும் செய்வதோடு வெறுப்பையும் காண்பிப்பதில்லை.

ஊர்வசி கண்களை மூடினாலே கண்ணீர் ஊற்றுகிறது. அந்தக்கண்ணீர் எரிச்சலை வரவழைக்காமல் அனுதாபத்தை வரவழைக்கிறது.

அப்படியொரு இயல்பாக நடித்துள்ளார், விருது கிடைக்கும் என்று நம்புகிறேன். ஊர்வசிக்கு வயதாக வயதாக நடிப்பில் வேறு லெவலில் சென்று கொண்டுள்ளார்.

ஆவணப்படம் போலச் சென்றாலும், ரொம்ப எதார்த்தமாக உள்ளதோடு சில சம்பவங்கள் நடக்கையில் பதட்டமாகி விடுகிறது.

சுருக்கமான காட்சிகள்

காட்சியை எவ்வளவு சுருக்கமாகக் கூற முடியும்? அதே சமயம், விளக்கமாகக் கூறுவதால் நேரம் தான் வீணாகும் என்பதை அழகாகக் கூறியுள்ளார்கள்.

ஒரே காட்சியில் பார்வதி காதலை, அதுவும் இதற்கென்று தனிக்காட்சியாக இல்லாமல் அவர் சம்பந்தப்பட்ட இன்னொரு காட்சியில் காண்பிப்பார்கள்.

எதனால் பிரிந்தார்கள் என்பதையும் போகிற போக்கில் ஒரு காட்சியில் விளக்கி விட்டார்கள். எவ்வளவு நேரத்தை மிச்சப்படுத்தியுள்ளார்கள்?!

தேவையற்ற காட்சிகளைக் குறைத்து, பார்ப்பவர்களுக்குச் சுருக்கமாகச் செய்தியைக் கடத்துவதை மற்ற இயக்குநர்கள் இதைப்பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தக்காட்சிகளைக் கண்டதும் தீரன் அதிகாரம் ஒன்று தான் நினைவுக்கு வந்தது.

கார்த்தி காதலுக்கு 20 நிமிடம் எடுத்துக்கொள்வார்கள் ஆனால், மேற்கூறியபடி சுருக்கமாகக் காதலைக் காண்பித்து முதன்மை கதைக்குச் சென்று இருக்கலாம்.

காரணம், இப்பகுதியைக் குறைத்து கதையை ஆரம்பித்து இருந்தால், இதுவொரு உலகப்படம் என்றளவில் இருக்கும் என்பது என் ஆதங்கம்.

மழை

எங்கே இருந்து தான் கதையைப் பிடிக்கிறார்களோ!

தமிழில் கதையில்லை, கதைத்திருட்டு என்கிறார்கள். இங்கே என்னவென்றால், புதுசு புதுசான கதையில் படம் எடுக்கிறார்கள்.

கதை மட்டுமல்ல படத்தையும் எப்படி எடுக்கிறார்கள் பாருங்கள்! கிட்டத்தட்ட படம் முழுக்கவே வெள்ளத்திலேயே எடுத்துள்ளார்கள்.

வீடு வாசப்படி வரை மழை நீர் தளும்பிக்கொண்டுள்ளது. படகின் மூலமே வெளியே செல்ல முடியும்.

பக்காவான மழை காலத்தில், சரியாகத் திட்டமிட்டு அசத்தலாக எடுத்துள்ளார்கள். விசாரித்த போது இது போன்ற வெள்ளம், மழை குறிப்பிட்ட இடங்களில் கேரளாவில் சாதாரணம் என்றார்கள்.

முழுப்படத்தையும் எப்படி எடுத்து இருப்பார்கள்? என்று தற்போது வரை விளங்கவில்லை.

ஒளிப்பதிவு அட்டகாசம். நிச்சயம் பல கடுமையான சவால்களை எதிர்கொண்டு படத்தை முடித்து இருப்பார்கள்.

பின்னணி இசைக்கு அதிக வாய்ப்பில்லை காரணம், படம் அமைதியாகச் செல்கிறது. எனவே, பெரும்பாலான நேரங்களில் அந்த அமைதியோடு இசையும் பயணிக்கிறது.

யார் பார்க்கலாம்?

இதுவொரு பொழுதுபோக்கு படமல்ல. பிரச்சனைகளுள்ள ஒரு குடும்பத்தின் இயல்பான வாழ்க்கையை அருகிலிருந்து பார்ப்பது போல உள்ளது.

வயது வந்தோருக்கான சிறு அளவிலான காட்சிகள் உள்ளது. எனவே, எப்படிப் பார்ப்பது என்பது உங்கள் முடிவு.

பார்வதி காதலன் பற்றிய ஒரு விளக்கத்தைக் கூற நினைத்தாலும், கதையைக் கூறும்படி வருவதால் தவிர்க்க வேண்டியதாகி விட்டது.

பரிந்துரைத்தது விஸ்வநாத். Amazon Prime ல் காணலாம்.

Directed by Christo Tomy
Written by Christo Tomy
Produced by Ronnie Screwvala, Honey Trehan, Abhishek Chaubey
Starring Urvashi, Parvathy Thiruvothu, Arjun Radhakrishnan
Cinematography Shehnad Jalal
Edited by Kiran Das
Music by Sushin Shyam
Release date 21 June 2024
Country India
Language Malayalam

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. இந்த படம் வெளியான போது படம் நன்றாக இருப்பதாக என் நண்பர்கள் கூற கேட்டு இருந்தேன்.. பெரும்பாலும் தமிழில் நடிகைகள் என்ன கதை? ஏது கதை என்று கேட்காமல் வாய்ப்பு வந்து விட்டது என்பதால் நடித்து விடுகிறார்கள். குறிப்பாக பெரிய நடிகர்கள் படத்தில் இருந்தால் போதும், என்ற நிலை தான் இருக்கிறது. மிக சொற்ப நடிகைகள் இதற்கு விதி விலகுக்காக உள்ளார்கள்..

    அதில் என் பார்வையில் தற்போது முதலிடத்தில் இருப்பது பார்வதி.. (நித்திய மேனனும் இவர் போல தான்..) ஆண்டிற்கு 1 அல்லது 2 படங்கள் மட்டுமே நடிக்கிறார்.. ஆனால் படத்தில் தன் பாத்திரதை நிறைவாக செய்து இருப்பார்.. Take off / Ennu Ninte Moideen படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவைகள்.. bangalore days படத்தில் சிறிய பாத்திரமாக இருந்தாலும் நிறைவாக செய்து இருப்பார்.. தமிழில் இந்த படத்தை பார்க்கும் போது கடுப்பாக இருக்கும்..

    ஊர்வசி ராம்கி நடித்த மாயாபஜார் படத்தை சில நாட்களுக்கு பார்த்தேன்.. எப்பா என்ன ஒரு நடிப்பு ஊர்வசியின் நடிப்பு? வேறு எந்த நடிகையும் அந்த பாத்திரத்தை நிச்சயம் செய்ய இயலாது.. குறிப்பாக விசு இறக்க போகும் காட்சியில், சிறப்பாக நடித்து இருப்பார்.. தற்போது இவர் நடிப்பில் வரும் எல்லா படங்களிலும் வித்தியசமான நடிப்பில் அசத்துக்குகிறார்..

    குறிப்பாக COMMEDY சார்ந்த பாத்திரமாக இருந்தால் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல, அதற்கு நேரெதிராக சோகம் , அழுகை இவற்றிலும் சிறப்பாக நடிக்கிறார்.. வெகு விரைவில் தேசிய விருது பெறுவார் என்று நம்புகிறேன்.. அதற்கான முழு தகுதியும் இவருக்கு இருக்கிறது..

  2. @யாசின்

    “பெரும்பாலும் தமிழில் நடிகைகள் என்ன கதை? ஏது கதை என்று கேட்காமல் வாய்ப்பு வந்து விட்டது என்பதால் நடித்து விடுகிறார்கள். ”

    தமிழில் மலையாளம் போல கதைகள் வருவது குறைவு என்பதும் காரணம்.

    “குறிப்பாக பெரிய நடிகர்கள் படத்தில் இருந்தால் போதும், என்ற நிலை தான் இருக்கிறது. ”

    பிரபலம், சம்பளம் இரண்டு மட்டுமே காரணங்கள்.

    Take off மறக்கவே முடியாத படம். சர்வதேச படம் போல உள்ளது.

    ஊர்வசிக்கு அனைத்து நடிப்புகளுமே எளிதாக வருகிறது. அனுபவத்தால் தற்போது தூள் கிளப்புகிறார்.

    நிச்சயம் தேசிய விருது பெறுவார். J பேபி, ullozhukku அதற்கு தகுதியான படங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!