செலவை UPI அதிகரிக்கிறதா?

2
UPI பரிவர்த்தனை செலவை அதிகரிக்கிறதா?

UPI வந்த பிறகு பணப்பரிவர்த்தனை முறையே மாறி விட்டது. இதனால் ஏற்படும் மாற்றங்களைக் காண்போம். Image Credit

UPI பரிவர்த்தனை

தற்போது UPI பரிவர்த்தனையால் செலவுகள் அதிகரிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. அவ்வாறு நடைபெறுகிறதா?

சுருக்கமாகக் கூறினால் ‘ஆம்‘.

பர்ஸ் வழியாகப் பணத்தை எடுத்துக்கொடுக்கும் போது இருக்கும் கட்டுப்பாடு, இணையத்தின் வழியாக செலுத்தும் போது பலருக்கு இருப்பதில்லை.

பொருட்களை வாங்கும் போது முன்பு பணத்தை எண்ணிக் கொடுத்தார்கள். எனவே, பார்த்துப் பார்த்துச் செலவு செய்தார்கள்.

அல்லது கையில் இருப்பதே அளவாக இருக்கும்.

எனவே, அதற்குத் தகுந்த செலவு செய்வார்கள் ஆனால், தற்போதோ வங்கியிலிருந்து செல்வதால் கூடுதலாக செலவழிக்கிறார்கள்.

அதாவது ஒரு பொருள் வாங்கும் நேரத்தில் இரு பொருள்களையும், அவசியமில்லாதவற்றையும் வாங்குகிறார்கள்.

இதனால் ஒவ்வொருவரின் மாத பட்ஜெட்டில் கணிசமாகச் செலவு அதிகரித்துள்ளது.

இதை எப்படித் தடுப்பது?

வளரும் தொழில்நுட்பத்தைத் தடுக்க முடியாது ஆனால், அதற்கேற்றது போல நமது நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டால், அதன் பலனை அனுபவிக்கலாம்.

ஏற்கனவே, செலவுகளுக்கு ஒரு வங்கிக்கணக்கு, சேமிப்புக்கு ஒரு வங்கிக் கணக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி இருந்தேன்.

அதையே இங்கேயும் செயல்படுத்தலாம்.

பர்ஸில் எப்படி அளவான பணத்தை, தேவையான பணத்தை வைத்துக்கொள்கிறோமோ அதே போல, செலவு வங்கிக்கணக்கிலும் அளவான பணத்தை வைத்துக்கொள்ளலாம்.

இதன் மூலம் இவ்வளவு தான் செலவு செய்ய வேண்டும் என்று கட்டுப்படுத்தலாம்.

அல்லது மாதத்துக்கு இவ்வளவு என்று UPI Lite ல் போட்டு வைத்துக்கொள்ளலாம். இதை மட்டும் செலவு செய்வதாக முடிவு செய்யலாம்.

கிரெடிட் கார்டு

இதே பிரச்சனை தான் கிரெடிட் கார்டிலும் உள்ளது. கடனட்டையில் அளவு அதிகம் எனவே, செலவைக் கட்டுப்படுத்துவது கடினம் அதாவது, செலவாழிகளுக்கு.

ஆனால், UPI யில் கட்டுப்படுத்த ஓரளவு வாய்ப்புள்ளது.

எனவே, UPI பரிவர்த்தனை வழியாக அதிகம் செலவாகிறதே என்று கவலைப்படுகிறவர்கள் மேற்கூறிய வழிமுறையைப் பின்பற்ற முயற்சிக்கலாம்.

தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே தான் செல்லும். எனவே, கட்டுப்பாட்டுடன் பின்பற்றினால் எதுவும் இலாபமே.

பணம் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதால் இதுவரை எனக்கு நட்டமானதில்லை, இலாபம் மட்டுமே!

இன்ஸ்டாகிராம், X, ஃபேஸ்புக், WhatsApp என்று அனைத்தும் இப்பிரச்சினைக்குப் பொருந்தும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

தொடர்புடைய கட்டுரைகள்

முதன்மை வங்கிக் கணக்கு அவசியமானது ஏன்?

ICICI Vs HDFC Vs SBI வங்கிகளில் சிறந்தது எது?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. தற்போது UPI பரிவர்த்தனையால் செலவுகள் அதிகரிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. அவ்வாறு நடைபெறுகிறதா? நிச்சயம் ஆம்.. குறிப்பாக இளைய தலைமுறையினர்.. சில துறையில் பணி புரிபவர்கள் வருமானம் அதிக அளவில் சம்பாரிப்பதால் செலவை பற்றி எண்ணுவது குறைவு..

    அதனால் கண்டிப்பாக UPI பரிவர்த்தனையால் செலவுகள் நிச்சயம் அதிகரிக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம்.. என்னை பொறுத்தவரை தேவை என்றால் நிச்சயம் செலவு செய்தாக தான் வேண்டும்.. ஆடம்பர செலவினை பணமாகவும் / UPI / அல்லது வேறுவழியில் செய்வதை குறைத்து கொள்வது மிக அவசியம்..

    என்னுடைய செலவினை பணமாகவும் / தேவைப்பட்டால் பற்றுஅட்டை மூலமாக தான் செலுத்துகிறேன்.. கடனட்டை இது வரை வாங்கவில்லை. ஒரு சுயகட்டுப்பாடு எப்போதும் இருக்கும்.. அடுத்தவரின் கேட்பதற்கு தயக்கம் மற்றும் கூச்சம் மிக மிக அதிகம்.. உங்களின் ஒரு சில பதிவினை படித்த பிறகு தான், வீடு மேலே கட்டும் சமயத்தில் கொஞ்சம் பணத்தேவை இருந்த போது, நெருக்கிய நட்பு வட்டாரத்தில் கேட்ட போது உதவி கிடைத்தது..

    உண்மையில் சிறு வயதில் வீட்டில் உணவு சமைக்காத நாட்களில் பக்கத்து வீடு (நெருங்கிய உறவினர்) களில் உணவை உண்ண சொல்லும் போது கூட சாப்பிடமாட்டேன்.. அம்மா கேட்கும் போது சாப்பிட்டுவிட்டேன் என்று கூறி விடுவேன்..

    தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே தான் செல்லும். எனவே, கட்டுப்பாட்டுடன் பின்பற்றினால் எதுவும் இலாபமே. உண்மை..

    பணம் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதால் இதுவரை எனக்கு நட்டமானதில்லை, இலாபம் மட்டுமே! உங்களை போல மற்றவர்களும் சரியாக பயன்படுத்தினால் எல்லாம் நன்மையே!!!!

  2. @யாசின்

    “சில துறையில் பணி புரிபவர்கள் வருமானம் அதிக அளவில் சம்பாரிப்பதால் செலவை பற்றி எண்ணுவது குறைவு..”

    உண்மையே

    “உங்களின் ஒரு சில பதிவினை படித்த பிறகு தான், வீடு மேலே கட்டும் சமயத்தில் கொஞ்சம் பணத்தேவை இருந்த போது, நெருக்கிய நட்பு வட்டாரத்தில் கேட்ட போது உதவி கிடைத்தது”

    நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள், முடியவில்லை என்றால் வேறு வழியில் பெற்று தரவாவது முயற்சி எடுப்பார்கள்.

    “அம்மா கேட்கும் போது சாப்பிட்டுவிட்டேன் என்று கூறி விடுவேன்..”

    🙂 .. தற்போது இவற்றை அசை போடுவது சுகமான அனுபவம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!