NFC பயன் என்ன?

6
NFC

NFC தொழில்நுட்பம் என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம். Image Credit

NFC (Near-Field Communication)

PHYSICAL TOUCH இல்லாமல், மொபைல் மூலமாக கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு பணப்பரிவர்த்தனை செய்யும் முறையே N F C தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது.

கிரெடிட் கார்டு TAP (WiFi) தொழில்நுட்பம் வழியாக எவ்வாறு பணத்தைச் செலுத்துகிறோமோ அது போன்ற தொழில்நுட்பம் தான் NFC.

இதற்கு எந்த PIN யையும் உள்ளிட வேண்டியதில்லை. மொபைலை காண்பித்தாலே போதுமானது, கடையில் உள்ளீடு செய்த பணத்தை எடுத்துக்கொள்ளும்.

பயணச்சீட்டு அட்டையையும் இணைத்துக்கொள்ளலாம் ஆனால், நம் ஊரில் இன்னும் பரவலாக இவ்வசதி வரவில்லை.

NFC FAQ

இதைச் செயல்படுத்த என்ன செய்ய வேண்டும்?

Google Pay, CRED போன்ற செயலிகளில் கிரெடிட் கார்டு விவரங்களை இணைத்து, NFC செயல்படுத்தி விட்டால் போதும்.

எந்த மொபைலிலும் பயன்படுத்தலாமா?

முடியாது.

பயன்படுத்தும் மொபைலில் NFC தொழில்நுட்பம் இருக்க வேண்டும். அதோடு settings சென்று NFC Enable செய்து இருக்க வேண்டும்.

எப்படிப் பயன்படுவது?

கிரெடிட் கார்டு விவரங்களை மேற்கூறிய செயலியில் இணைத்த பிறகு, POS Machine ல் WIFI Symbol அருகே கொண்டு சென்றால், பணத்தை எடுத்துக்கொள்ளும்.

எவ்வளவு தூரம் வரை செயல்படும்?

5 CM அளவு தூரத்தில் செயல்படும்.

அருகே உள்ள யாராவது நமக்குத் தெரியாமல் இதைப்பயன்படுத்தி விட்டால்?

முடியாது.

உங்கள் மொபைலை UNLOCK செய்தால் மட்டுமே பணப்பரிவர்த்தனை நடக்கும்.

பாதுகாப்பானதா?

BLUETOOTH போன்ற சேவை ஆனால், இதை விட N F C கூடுதல் பாதுகாப்பானது.

ஆனால், மற்ற வழிகளில் இடைமறித்துத் தாக்குதல் செய்ய வாய்ப்புள்ளது.

ஒருவேளை மொபைல் தொலைந்து, மொபைல் UNLOCK ஆகி இருந்தால், திருடியவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

பல கார்டுகளை வைத்து இருந்தால் என்ன செய்வது?

DEFAULT கார்டாக எதைத் தேர்வு செய்துள்ளீர்களோ அதிலிருந்தே பணம் எடுக்கப்படும். தேவைப்பட்டால், வேறு கார்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

வேறு என்ன பயன்?

ஒருவேளை கையில் கிரெடிட் கார்டு இல்லையென்றாலும், மொபைலை வைத்துப் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.

சிலர் ஏராளமான கிரெடிட் கார்டுகளை வைத்து இருப்பார்கள். எனவே, அனைத்தையும் கையில் வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை.

முக்கியமான இரண்டை மட்டும் பர்ஸில் வைத்துக்கொண்டு, மீதியை N F C வசதிக்கு இணைத்துகொள்ளலலாம்.

தற்போது WiFi POS Machine 95% இடங்களில் உள்ளது.

கட்டுப்பாடு உள்ளதா?

ஆமாம்.

கிரெடிட் கார்டில் NFC தொழில்நுட்பம் வங்கியால் செயல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு செயல்படுத்தப்பட்ட கார்டில் மட்டுமே NFC பயன்படுத்த முடியும்.

சிறப்பான வசதி

கிரெடிட் கார்டு Tap வசதியை விட மொபைல் Tap வசதி எளிதானது ஆனால், N F C பணப்பரிவர்த்தனை பலருக்கு இன்னும் அறிமுகமாகவில்லை.

ஒரு கடையில் மொபைலை காண்பித்து பணத்தைச் செலுத்தியவுடன், அங்கே இருந்த பையன் வியப்பாகி விட்டான்.

எப்படிப் பணத்தைச் செலுத்தினேன் என்று குழம்பி, பணம் செலுத்தப்பட்டதாக BILL வந்தும் அவன் சந்தேகம் தீரவில்லை 🙂 .

நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள், ‘அட! இவ்வளவு நாட்களாகத் தெரியாமல் போனதே‘ என்று நினைப்பீர்கள்.

UPI எப்படி எளிதானதோ அதே போல N F C யும் எளிதானது.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. கிரி.. ஒவ்வொரு முறையும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னை எப்போதும் அதிசயிக்க வைக்கும்.. இத்தனைக்கும் நான் கொஞ்சம் பழமை விரும்பி.. மாற்றம் என்பது என்னுள் கொஞ்சம் கடினம். தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தையும் நான் பயன்படுத்தா விடினும் என்ன மாற்றங்கள்? நிகழ்ந்துள்ளது என்பதை தெரிந்து கொள்வதில் அதீத ஆர்வம் உண்டு.. குறிப்பாக உங்கள் தளத்தை தொடர ஆரம்பித்த பிறகு நிறைய தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறேன்..

    இரண்டு நாட்களுக்கு முன்பு என்னுடைய பழைய சிம் கார்டு (16 வருடம்) நான் முதன்முதலில் வேலைக்கு வந்த போது வாங்கியது, தற்போது புதிய கைப்பேசி அலுவலகத்தில் கொடுத்ததால் பழைய சிம் மாற்ற வேண்டி தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு சென்றேன்.. நான் நினைத்தது எப்படியும் இரண்டு நாட்கள் ஆகும் என்று, ஆனால் அங்கு சென்ற பின் ஒரு மெஷின்ல் என்னுடைய தகவல் எல்லாம் அளித்து, அதை பரிசோதித்து எல்லாம் ஓகே ஆன பின் கட்டணத்தை டெபிட் கார்டு மூலம் கட்டிய அடுத்த இரண்டு நிமிடத்தில் புதிய சிம் கார்டு வெளிய வந்து விட்டது..

    அந்த ஆச்சரியத்தில் இருந்து வர எனக்கு உண்மையில் சில மணித்துளிகள் ஆனது.. காரணம் என்னுடைய முதல் சிம் நான் வாங்கிய போது நடந்த நிகழ்வுகள் என் கண் முன்னால் வந்து போனது… இது சாதாரண ஒரு நிகழ்வாக இருந்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சி என்னை இன்னும் இன்னும் மேலும் மேலும் ஆச்சரியப்படுத்தி கொண்டே இருக்கிறது..

  2. கிரெடிட் கார்டு TAP (WiFi) தொழில்நுட்பம் வழியாக எவ்வாறு பணத்தைச் செலுத்துகிறோமோ அது போன்ற தொழில்நுட்பம் தான் NFC

    உங்களுக்கே சரியாக புரிதல் இல்லை கிரி. கிரெடிட் கார்டில் TAP செய்வதும் NFC தான். அதை வைஃபை வைஃபை என்று தவறாக சொல்லிக் கொண்டு உள்ளார்கள் நீங்களும் அதையே சொல்கிறீர்கள். கார்டில் எப்படி வைபை வரும் வைஃபை என்பது ஹார்டுவேர். NFC TAG SYMBOL கார்டில் கொடுத்திருப்பார்கள் அதே NFC அந்த ஸ்வைப்பிங் மிஷினில் வரும்போது இரண்டும் ஒன்றுக்கொன்று உராயும்போது பணப்பரிவர்த்தனை நடக்கும் இதற்கு பெயர் NFC வைஃபை இல்லை. கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் NFC உள்ளதா என்று கேட்பதற்கு பதிலாக வைஃபை இருக்கிறதா என்று கேட்டு கேட்டு பழகி விட்டார்கள் நீங்களும் அதையே சொல்கிறீர்கள். ஒருவேளை வைஃபை என்று சொன்னாதான் படிப்பவர்களுக்கு புரியும் என்று சொல்கிறீர்களா? இல்லை நீங்கள் அது வைஃபை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா

  3. @யாசின்

    “நான் நினைத்தது எப்படியும் இரண்டு நாட்கள் ஆகும் என்று, ஆனால் அங்கு சென்ற பின் ஒரு மெஷின்ல் என்னுடைய தகவல் எல்லாம் அளித்து, அதை பரிசோதித்து எல்லாம் ஓகே ஆன பின் கட்டணத்தை டெபிட் கார்டு மூலம் கட்டிய அடுத்த இரண்டு நிமிடத்தில் புதிய சிம் கார்டு வெளிய வந்து விட்டது..”

    இங்கே ஆதார் கார்டு எண்ணைப் பரிசோதித்து உடனே கொடுத்து விடுவார்கள்.

    நீங்க ஷார்ஜா சென்று 16 வருடங்கள் ஆகி விட்டதா?! 😮

    • ஆமாம் கிரி.. 16 வருடங்கள் கடந்து விட்டது. நம்மூரிலும் இந்த சேவை எளிமையாக இருப்பது சிறப்பு.. ஆனால் உண்மையில் எனக்கு தெரியவில்லை.. காரணம் கடந்த வருடம் தான் ஒரு புதிய சிம் எனது பெயரில் நான் ஊரில் வாங்கினேன்.. அதற்கு முன்பு ஊருக்கு வரும் போது அம்மாவின் கைபேசியை பயன்படுத்துவேன்..

  4. @ஹரிஷ்

    “ஒருவேளை வைஃபை என்று சொன்னாதான் படிப்பவர்களுக்கு புரியும் என்று சொல்கிறீர்களா? இல்லை நீங்கள் அது வைஃபை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா”

    இதை உறுதி செய்த பிறகு மேற்கூறியதை கூறி இருக்க வேண்டும்.

    “உங்களுக்கே சரியாக புரிதல் இல்லை கிரி. கிரெடிட் கார்டில் TAP செய்வதும் NFC தான். அதை வைஃபை வைஃபை என்று தவறாக சொல்லிக் கொண்டு உள்ளார்கள் நீங்களும் அதையே சொல்கிறீர்கள். ”

    ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ளாமல் நீங்களே எப்படி முடிவு செய்யலாம்?

    “கார்டில் எப்படி வைபை வரும் வைஃபை என்பது ஹார்டுவேர். ”

    அதையே தான் நானும் கேட்கிறேன். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமலா இவ்வளவு வருடங்களாக தொழில்நுட்ப கட்டுரைகள் எழுதிக்கொண்டுள்ளேன்!

    “கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் NFC உள்ளதா என்று கேட்பதற்கு பதிலாக வைஃபை இருக்கிறதா என்று கேட்டு கேட்டு பழகி விட்டார்கள் நீங்களும் அதையே சொல்கிறீர்கள்.”

    கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் எளிமையான மொழியில் இருவருக்கும் புரியும் வழியில் பேசிக்கொள்கிறார்கள்.

    எப்படி பேசினால் என்ன? அவர்கள் இருவருக்குமான தேவை முடிந்து விட்டதே!

    நான் அனைவருக்கும் எப்படி கூறினால் புரியுமோ அப்படி கூறுகிறேன். நீங்கள் கூறியபடி எழுதினால் இது பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்கு advanced ஆக இருக்கும்.

    புதிய விஷயத்தை தெரிந்து கொள்வதற்கு பதிலாக நான் கூறியதை புரிந்து கொள்ள முடியாமல் புறக்கணித்து விடுவார்கள்.

    அப்படிப்பட்ட கட்டுரை எழுதுவதால் யாருக்கு என்ன பயன்?

    ஒரு கடையில் சென்று Tap செய்யலாமா? WiFi உள்ளதா? என்று கேட்டால் ‘இருக்கு இல்லை’ என்று கூறுவார்கள்.

    அதுவே அவர்களிடம் NFC உள்ளதா? என்று கேட்டால் விழிப்பார்கள்.

    கடையில் வைத்துள்ளவர்களுக்கே தெரியாது என்றால், அது பற்றி என்னவென்றே தெரியாமல் பயன்படுத்துபவர்களுக்கு எப்படி புரியும்?

    கட்டுரையிலேயே கூறி இருக்கிறேன். கடையில் உள்ள பையனுக்கு மொபைல் வழியாக எப்படி பணம் செலுத்தப்பட்டது என்று தெரியாமல் வியப்படைந்தான் என்று.

    இது தான் எதார்த்தம்.

    நமக்கு ஒரு விஷயம் தெரிவதாலையே அனைவருக்கும் தெரிந்து இருக்கும், இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.

    அதே (NFC) தொழில்நுட்பம் என்று கூறியபிறகு அதில் WIFi என்று () குறிப்பிடுவது மற்றவர்கள் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.

    அதோடு இக்கட்டுரை மொபைல் வழியாக கிரெடிட் கார்டை எப்படி பயன்படுத்துவது என்பதைப்பற்றித் தான்.

    ஒருவேளை கிரெடிட் கார்டு Tap பற்றிய கட்டுரையாக இருந்தால், அது பற்றி விளக்கமாகக் கூறி இருப்பேன், தற்போது மொபைலுக்கு கூறியது போல.

    உங்களுக்கு கூடுதலாக இன்னொரு தகவலையும் கூறுகிறேன்.

    நீங்கள் கூறுவது போல NFC மட்டும் இல்லை. அதனோடு RFID என்று கூறப்படும் Radio-Frequency IDentification தொழில்நுட்பமும் கிரெடிட் கார்டில் உள்ளது.

    தற்போது NFC மட்டுமே மாடர்ன் கிரெடிட் கார்டுகளில் பயன்படுத்தப்படுகிறது.

    • நான் அனைவருக்கும் எப்படி கூறினால் புரியுமோ அப்படி கூறுகிறேன். நீங்கள் கூறியபடி எழுதினால் இது பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்கு advanced ஆக இருக்கும்.

      @கிரி. சரி நீங்கள் தொழில்நுட்பக் பிளாக்கர். நீங்கள் அதை புரியும்படி சொல்ல வேண்டியது தானே கட்டுரையில். நீங்கள் அதையும் சொல்லிவிட்டு இது வைபை என்று கூறுகிறார்கள் என்று சொல்லி இருக்கலாம் நீங்களும் வைஃபை என மட்டுமே சொல்லி மேலே கடந்து போவது எப்படி? தொழில்நுட்பம் பிளாக்கர் ஆன நீங்கள் இது NFC என்று நீங்கள் குறிப்பிட்டு இருக்கலாம். மற்றவர்களுக்கு புரிகிற மாதிரி சொல்லி விட்டு செல்கிறேன் என்று சொல்வது சரியல்ல எது சரியான பெயரோ அதை நீங்கள் குறிப்பிட்டு இருக்க வேண்டும் நீங்கள் தொழில்நுட்பம் பிளாக்கர் அல்லவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!